இந்தியா இனி மெல்லச் சாகும்
*"இந்தியா இனி மெல்லச் சாகும்"* ஆனோடு ஆண் இணைவதும் பெண்ணோடு பெண் புனைவதும் தனிப்பட்ட விருப்பமென்ற தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு, நாளை உங்கள் மகன் வந்து நிற்பான்.. எனக்கு உங்கள் மருமகளை பிடிக்கவில்லை நல்ல மருமகனை பாருங்கள் என்று.. நாளை மறுநாள் உங்கள் மகள் வந்து நிற்பாள்.. எனக்கு உங்கள் மருமகனை பிடிக்கவில்லை நல்ல மருமகளை பாருங்கள் என்று... அதற்கு அடுத்த நாள்.. இவர்களுக்காக நீங்கள் எங்கு போய் நிற்பீர்கள்?... தலைமை நீதிபதிகளாக யோசித்தீர்களே! நல்ல ஒரு தகப்பனாக யோசித்தீர்களா?... உங்கள் முன் வந்து நின்று இறைவன் வாதிட மாட்டாரென்று எழுதி விட்டீர்கள் தீர்ப்பொன்று இதுதான் இனி நியதியென்று... இதுதான் "என் நியதி" என்று ஏதேனில் ஆண்டவர் சொல்லியிருந்தால்?., ஆதாமிற்கு ஓர் ஆதாமையும் ஏவாளுக்கு ஓர் ஏவாளையும் எடுத்து அன்று ஆண்டவர் கொடுத்திருந்தால்?.., திருந்தாத இந்த கூட்டமேது? தீர்ப்பு எழுதிய நீங்களேது?... சோதோம் கொமோரா என்று சொர்க்கம் போல் இருந்த தேசம் ஆகாயத்து அக்கினியால் அழிந்த கதை தெரியுமா?... பெண்ணோடு பெண் கூடி ஆணோடு ஆண் கூடி பெரும் பாவம் செய்ததினால் அழ...