சீரழிந்த சிறுமி
சில நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்ற போது ஒரு கர்ப்பிணி பெண்ணை பார்க்க நேர்ந்தது. அப்போது அவருடைய தாயாரிடம் கணவன் எங்கே என வினவியபோது அவர் என்னிடம் சொன்ன வேதனையான சம்பவங்களை இங்கே அனேகருக்கு பயனாக இருக்குமென்று நம்பி குறிப்பிடுகிறேன். சில சங்கடங்கள் ஏற்படுமே என்று பெயர்களை தவிற்திருக்கிறேன் . "எனது மகள் பத்தாம் வகுப்பு படிச்சிருக்கா இப்போ படிச்சி முடிச்சிட்டு வீட்டில தான் இருக்கா. ஒரு வருஷத்துக்கு முன்னாடி பக்கத்து ஊர்ல இருக்க 21வயது மதிக்க தக்க ஒருபையன் அவளை காதலிப்பதாய்கூறி அவளை அடிகடி சந்திச்சிருக்கான். எங்களுக்கு இது கொஞ்சமும் தெரியாது எனது மகள் வெறும் 18வயதே நிரம்பியவ. எங்க வீட்டுல எல்லா வேலையும் இழுத்து போட்டு வேலை செய்வா. படிக்க வைக்க வசதி இல்லாததால எங்க வீட்டிலயே இருக்க வச்சுட்டோம். அவளுக்கும் படிக்க விருப்பம் இல்லாததாலும் நாங்க அவளை படிக்க வைக்கல ஆனால் வரவர அவளோட செயல் பாடுகள் எங்களுக்கு புரியல. வீட்டுல வேலை செய்யல. மாதவிடாய் நேரத்துல எல்லா பொண்ணும் காலையிலேயே குளிச்சிடுவாங்க ஆனா இவ அப்படி எதுவுமே இல்லாதமாறி இருந்ததும் எங்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கிடு...