இடுகைகள்

சுந்தரநாயன் கவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

#இந்தியரை_இந்தியரே_ஆளுவோம் series14

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடரிதழின் நல்வாழ்த்துக்கள். #இந்தியரை_இந்தியரே_ஆளுவோம் என்ன இது புது புரளியா இருக்கே என்று தானே பார்க்கிறீர்கள் ஆம் என்ன செய்வது கால கொடுமை இதையெல்லாம் ஒரு தலைப்பாக எடுத்து பேச வேண்டி இருக்கிறது. ஆம் உண்மையில் நம்மை ஆள்வது யார் என்ற கேள்வியை எழுப்பினால் நமக்கு மிக எளிமையாக பதில் வந்து விட போகிறது. அதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மோடி டாடி நம்மை ஆள்கிறார் என்றும் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனக்குழுவை சார்ந்தவர் என்றும் உடனே சொல்லி விடுவீர்கள். இது என்னடா உன்னோட வம்பா போச்சுதுன்னு நீங்க கேட்கலாம் ஆமா மோடி தாடி ஒரு இந்தியர்தானே அப்புறம் ஏன் இப்படி நான் கூவுறன்னு இன்னும் கொஞ்ச நேரத்துலயே புரிஞ்சிடும். '' அந்த தாடிவச்ச பாடி தன் மனைவியை வெறுத்த கேடி அவரு விளம்பரத்தை நாடி பிரதமரானார் ஆடி '' இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் இவர் தன் சுய ஜனங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றினாரா என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய கேள்வி? தன் சுய ஜனத்துக்காக கூட செயல்பட முடியாமல் யாரோ ஒருவர் முகத்தை எதிர் பார்த்து இப்படி அப...

மனுநூலை மேற்கோள் காட்டும் மதியிழந்த மாமன்றம் நீதிமன்றம்

சுதந்திர இந்தியாவா ? சுடுகாட்டு இந்தியாவா? இந்தியா இந்தியா சுதந்திர இந்தியா தொல்லை நிறைந்த இந்த பூமியில் சாதி சுமைகள் தேவையா வறுமையில் வாடும் இந்த நாட்களில் ஏற்றத்தாழ்வுகள் தேவையா? 1.சதியாலே மனநோயால் எழுதிவைத்த விதியான மனுநூலை விலக்கி வைக்க வலியோர்கள் வந்தாலும் பலனுமில்லை பல பெரியார்கள் வந்தாலும் பலனுமில்லை 2.மனுநூலால் பிழைப்போர்கள் மகிழ்ந்திட மனுநூலும் வெள்ளையனுக்கு கிடைத்திட இந்துலா என்ற ஓர் சட்டம் படைத்ததால் இந்நிலத்தோர்க்கு பலனொன்றும் இல்லையே 3.களையான மனுநூலை மேற்கோள் காட்டும் மதியிழந்த மாமன்றம் நீதிமன்றம் இனியொரு விதியொன்று எழுதுவாயோ பிழையான மனுநூலை விலக்கு(கி)றோமென்று 4.மனுநூலை மதித்திடும் மடையர் கூட்டம் இந்நிலத்தோரை மிதித்திடும் கயவர் கூட்டம் சதியாலே வந்திட்ட இந்த மனுச்சட்டம் தலைவலியாக வந்தது இந்து சட்டம் 5.வந்தவர் தன்னையே உயர்த்தி சொல்லும் மனுநூலை எரித்திட நல்மனது வேண்டும் கல்லான மனதிற்குள் சதைகள் வேண்டும் ஆரியர் பேய்மனம் திருந்திடல் வேண்டும் 6.சாதியை ஒழிக்க என்ன செய்ய சாதியென்ற பேயை கொல்ல மனுநீதி என்ற அநீதி ந...

அடியவன் ஆனேன் series 9

அடியவன் ஆனேன் இறைவனுக்கல்ல என்னை மட்டுபடுத்தி ஆள்பவனுக்கு சிறியவன் ஆனேன் பணத்திலல்ல தலையில் இருந்து பிறவாததாலே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை இதை ஏற்றுக்கொள்வாரும் இல்லை பிறந்தவன் எவரும் சாதிக்குள்ளே அனைவரும் இங்கு மலத்துக்குள்ளே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆரிய சிந்தை அனாரியன் அழிக்குது வேத சிந்தை சாதியை வளர்க்குது மனித மூளை இதையும் நம்புது இளைத்தவர்களை ஏமாற்றி பிழைக்குது. என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆடு மேய்த்து வந்தவன் இன்று எங்களை ஆள்கிறானே கேடுக்கெட்ட ஜென்மங்கள் இன்றிதை ஏற்று கொண்டனரே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே வந்தேரி பிராமண கூட்டமே - இன்று தமிழனை வந்தேறி என்குதே நாதாரி ஆரிய கூட்டமே-மக்களை நடைபிணமாக்கி வச்சிட்டே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே சிந்தனை குருடாய் மாற்றியே  சி...

காணக ரீங்கார புலமை

காணகத்தே என் கால்கள் நிற்கையிலே ரீங்கார பறவைகளின் சங்கீத புலமை கேட்டே இன்னோர் அடியெடுகையிலே அப்பளமாய் சருகும் நொருங்கும் சத்தம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே காலைபனி கைகோர்த்து இலைவழியே ஒழுகுங்சத்தம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே சில்லென்ற வாடை காற்று வாட்டுகின்ற வேளையிலே வாயிலே உணவோடு கூட்டின்மேலே சிட்டு பார்த்து குஞ்செல்லாம் வாய்பிளந்து ஆசையோடு அம்மா தருவாளோ உணவென ஏங்கி ஓங்கி ஒலிக்கும் சலனம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே இன்பமான அருவியொன்று தூரத்தில் விழும் ஓசை கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே எச்சிலே ஊரும் வண்ணம் கிளியொன்று கடித்திட்ட மாங்கனி அமுதாய் சொட்டுகையில் கீழே அணில் கடித்த பலாசுளையிலே அதுபட்டு வழிந்தொரு பூவினுள் விழுந்ததே என்னே அச்சுவை சுவைத்துவிட்டு நகருகையிலே குரங்கொன்று தென்னையிலே 'பொத்'தென்று போட்டதுவே குரங்கது வருவதற்குள்ளே குடித்துவிட்டேன் இளநீரை  திருப்தியாய் காணகமே அங்கு விட்டுவந்தேன் என் மனமே

எனக்கானவளே நீ எப்படி இருப்பாயோ?

கபடம்  இல்லா கவின் புறா கவர்ந்திழுக்கும்  கவிதை  நிலா எண்ணமெலாம் இனிக்கும்  பலா இதயமெலாம் உந்தன் கனா நீ  எப்படி இருப்பாயோ நீ  எனக்கென பிறந்தாயோ நீ  என்னை புரிவாயோ  என்  உயிருடன் கலப்பாயோ என்  கோபம் தணிப்பாயோ என்  சோகம் தீர்ப்பாயோ என்  நேசம் பகிர்வாயோ என்னை  முழுசா அறிவாயோ காதல் என்றால் தெரியாது பாசம் என்றால் அதும் புரியாது உறவு என்றாலும் அறியாது  எதற்கும் அடிமை கிடையாது உங்கள் சுந்தரநாயன் படைப்பு

என் நாடு ஜனநாயக நாடு

 என் இந்திய நாடு மதவாத நாடாக மாறாது என்ற நம்பிக்கையுடன்     இக்கவிதையை  எழுதியுள்ளேன்....   என் நாடு  ஜனநாயக நாடு   ஒரு போதும்   மதவாத  நாடாக  மாறாது.  நம்பிக்கை அளிக்கும் நாடு  ஜனநாயகம் காக்கும் நாடு   மதவாத நாடாக மாறாது   இறையாண்மை உள்ள நாடு  சமத்துவம் காக்கும்  நாடு   மதவாத நாடாக மாறாது    பன்முகத்தன்மை உள்ள நாடு   அனைவருக்கும் பொதுவான  நாடு  மதவாத நாடாக மாறாது     வல்லரசாய்  மாறும் நாடு  எடுத்துக்காட்டான  நாடு   மதவாத நாடாக மாறாது  வரலாறு படைக்கும்  நாடு  பாதுகாப்பான நாடு  மதவாத நாடாக மாறாது   அனைவரையும் கருத்தில் கொள்ளும் நாடு    அனைவருக்கும் கல்வி தந்த நாடு  மதவாத நாடாக மாறாது   இது சுந்தரநாயனின்  கவித்துளி.  அடுத்த பதிவில் சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து  விடைபெறுவது  உங்கள் சுந்தரநாயன்  நீங்கள் படித்துக் கொண்டிருப்பது சமூக அக்கறை  இணை...

வீதியிலே விளையாடும் பிள்ளை சாதிபார்க்கும் கொடுமை என்ன? Series 8

வீதியிலே விளையாடும் பிள்ளை சாதி பார்க்கும் கொடுமை என்ன? நீதியெங்கே போனதெங்கே நித்தம் சண்டை பிறந்ததென்ன? பித்தன் கண்டு சொன்ன விடத்தை பற்றி பிடித்து சாவதென்ன! அவனோ மேலே நீயோ கீழே என்று சொல்லும் வேதம் பொய்யே! நீயொன்று நானொன்று என்பதல்ல நியாயம் நீயும் நானும் ஒன்றென்பதே வேதம்.. இது சுந்தரநாயன் சிந்தனையில் உதயமான கவித்துளி தொடர்ந்து பின்தொடருங்கள் சமூக அக்கறை இணைய இதழ் இக்கவி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் மதிப்புமிக்க கருத்துரைகளை கருத்துரை பெட்டியில் பதிவிடுங்கள். நன்றி

இராம இராஜ்யம் சாதனைகளின் மணிமகுடம் series 6

ஓரிணசேர்க்கையை ஆதரியுங்கள் கள்ளகாதலை ஆதரியுங்கள் எங்களுக்கென்ன? உங்கள் தாமரையில் மகரந்த தூள் பட்டால்தான் தாமரைகாய் உண்டாகி விதைகள் உருவாகும் அதுதான் உங்கள் ஆட்சியில் உருவாகாதே! ஒவ்வொரு தாமரையும் ஆண் தாமரையோடே மகரந்தசேர்க்கை செய்தால் நினைத்துபாருங்கள்! இந்து பெண்கள் அணைவரும் 5குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினீர்களே இப்போது என்ன செய்ய போகிறீர்கள்... ஆண்கள் எல்லாரும் ஆண்களோடு உறவுகொள்வார்கள் பெண்களெல்லாம் பெண்களோடு உறவுகொள்வார்கள் ஆனால் 5பிள்ளைகளை பெற்றெடுக்க இனி இந்தியாவில் ஆள் இல்லாமல் போய்விடுமே என்று யோசித்தீர்களா? இந்து ராஷ்டிரம் காக்க நீங்கள் செய்த நலன் இதுதானா? இந்துக்களை காக்க வந்தேன் என்று கூறும் பாதுகாவலர்களே... காவலர்களே... தூதர்களே... அவதாரங்களே... இனி யாரை வைத்து 5குழந்தைகள் பெற வைக்க போகிறீர்கள்? இந்துக்கள் சிறுபான்மை ஆகிறார்கள் என்று மைக் பிடித்து அலருகிறீர்களே இந்தியர்களின் மதிப்பை உலகசந்தையில் இப்படி விற்றுவிட்டீர்களே!!! இராம இராஜ்யம் பிறந்தது அசிபாவுக்கு ஆபத்து இராமராஜ்யம் வளர்ந்தது ஓரினசேர்கைக்கு ஆதரவு இராம இராஜ்யம் செழித்தது கள்ளக்காதலை வளர்க்குது இராம இ...

இந்தியா இனி மெல்லச் சாகும்

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"* ஆனோடு ஆண் இணைவதும் பெண்ணோடு பெண் புனைவதும் தனிப்பட்ட விருப்பமென்ற தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு, நாளை உங்கள் மகன்  வந்து நிற்பான்.. எனக்கு உங்கள் மருமகளை பிடிக்கவில்லை நல்ல மருமகனை பாருங்கள் என்று.. நாளை மறுநாள் உங்கள் மகள் வந்து நிற்பாள்.. எனக்கு உங்கள் மருமகனை பிடிக்கவில்லை நல்ல மருமகளை பாருங்கள் என்று... அதற்கு அடுத்த நாள்.. இவர்களுக்காக நீங்கள் எங்கு போய் நிற்பீர்கள்?... தலைமை நீதிபதிகளாக யோசித்தீர்களே! நல்ல ஒரு தகப்பனாக யோசித்தீர்களா?... உங்கள் முன் வந்து நின்று இறைவன் வாதிட மாட்டாரென்று எழுதி விட்டீர்கள் தீர்ப்பொன்று இதுதான் இனி நியதியென்று... இதுதான் "என் நியதி" என்று ஏதேனில் ஆண்டவர் சொல்லியிருந்தால்?., ஆதாமிற்கு ஓர் ஆதாமையும் ஏவாளுக்கு ஓர் ஏவாளையும் எடுத்து அன்று ஆண்டவர் கொடுத்திருந்தால்?.., திருந்தாத இந்த கூட்டமேது? தீர்ப்பு எழுதிய நீங்களேது?... சோதோம் கொமோரா என்று சொர்க்கம் போல் இருந்த தேசம் ஆகாயத்து அக்கினியால் அழிந்த கதை தெரியுமா?... பெண்ணோடு  பெண் கூடி ஆணோடு ஆண் கூடி பெரும் பாவம் செய்ததினால் அழ...