இடுகைகள்

டிசம்பர் 20, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மினி கிளினிக் என்ற மாயை

அன்பார்ந்த செவிலியர்களுக்கு, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2,000 மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் புற ஆதார முறையில் (Outsourcing) பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஒரு மாஃபியா கும்பல் இப்பணியிடங்களை நிரந்தர அரசு வேலை என்றும், அந்த பணியிடங்களுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன செவிலியர்களே. எனவே, அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்...

ஜீயோ சிம்மை மாற்றி வேறு சிம்மிற்கு மாறுவது எப்படி?

#Reject_Jio விவசாயிகளுக்காக ஒவ்வொரு தனி நபரும் வீட்டிலிருந்தே போராட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான். ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள், ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்... ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள், புதிய வேளான் சட்டத்தை எதிர்கிறேன் ஒட்டுமொத்த விவசாயிகளின் முதலாளியாக துடிக்கும் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணித்து வெளியேறுகிறேன் என்று கூறுங்கள், அது போதும்... ஒரு நபர் ஜியோவை புறக்கணித்தால் ஒரு வருடத்திற்கு 1800ரூபாய் நூறு பேர் தவிர்த்தால் ரூ.1,80,000 ஆயிரம் பேர் தவிர்த்தால் ரூ.18,00,000 லட்சம் பேர் தவிர்த்தால் நூறு கோடியாகும்... நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை மதித்து ஜியோவை புறக்கனிப்போம் இதில் நாம் வெற்றியடையவில்லை என்றால் நாம் கார்ப்பரேட் நிர்ணயிக்கும் விலைக்கே உணவை வாங்கி உண்ணவேண்டிய நிலை நிச்சயம் வரும்... ஜீய...

மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே

புரட்சி வேண்டும் உலகிலே  மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே விவசாயியின் புரட்சி  வெடித்ததால் வந்தது மீட்சி மோடிக்கென்ன கேடு போட்டான் சட்டம் மூன்று வந்தது கோபம் கொதித்து எழுந்தான் விவசாயி சேர்த்து டெல்லி எல்லை மூடியதால் மெல்ல வளருதே புரட்சி கள்ளர் கூட்டமே பயந்து சதி செய்யுதே துணிந்து வந்து ஏறிய வந்தேறி வந்ததால் சாபம் தலைக்கேறி வீழ்ந்தோம் மண்ணில் முறுக்கேறி இனி கேளோம் அவன் சொல் தடுமாறி போராட்டம் இது போராட்டம் ஆர்பாட்டம் இது ஆர்பாட்டம் ஆரியனே வெளியேறு  ஆரிய நோயோடு வெளியேறு கொள்ளையனே வெளியேறு இந்தியாவிட்டு வெளியேறு தொல்லையனே வெளியேறு தொல்லை நூலோடு வெளியேறு வெல்லட்டும் வெல்லட்டும் போராட்டம் வெல்லட்டும் ஆரியனே வெளியேறு  ஆட்சியை விட்டு வெளியேறு வீழட்டும் வீழட்டும்  ஆரியமே வீழட்டும் தாழட்டும் தரை தாழட்டும் அலகையின் ஆட்சி ஒழியட்டும் சமூக சிந்தனை உள்ளவன் எவனும் இந்த விவசாயியின் புரட்சியில் பங்கெடுக்காமல் இருக்க மாட்டான். ஏனெனில் மனசாட்சி உள்ளவன் எவனும் தனக்கு உணவிட்டவனுக்கே துரோகம் செய்ய மாட்டான். சமூக ஆர்வளராய் சமூக அக்கறை இணைய தொடரிதழ் மூலமாக இணைந்து எங்களுடன் பயணிக்கும் அ...