மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள்
சமூக அக்கறை வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
என்னடா தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது என்று எண்ணலாம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் இதுதான் தற்போது பரிதவிக்கும் சூழ்நிலையாய் உள்ளது. மயங்கும் கண்களை நம்பியே உலக வர்த்தகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . முன்னெல்லாம் ஒரு கடைக்கு சென்றால் எதை வாங்க வேண்டுமோ அதை மட்டுமே வாங்கிவிட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் இன்றைய சமுதாயமோ அப்படியில்லை , அதற்கு பதில் பார்ப்பதையெல்லாம் வாங்கும் மயக்கம் நிறைந்தவர்களாய் இருக்கின்றனர் இக்கால சமுதாயத்தினர்.
முன்பெல்லாம் நம் வீட்டில் எது இல்லையோ அதை வாங்க வேண்டுமென்றால் கடை கடையாய் ஏறி இறங்கி நமக்கு ஏற்ற பொருளா என்று அலசி ஆராய்ந்துதான் வாங்குவோம் ஆனால் இன்றோ online இல் சென்று எந்த புகைப்படம் அழகாக இருக்கிறதோ அதை கிளிக் செய்யும் பழக்கம் நம்மில் வந்துவிட்டது.
அந்தக்காலத்தில் எல்லாம் அதிகமாக மாடு வைத்திருந்தவர்கள் தான் சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தார்கள் ஆனால் இன்றோ சாணிகரைத்து போடுவதற்கு கூட வெட்கமாக இருக்கிறது பலருக்கு.
ஏன் பல நகரங்களில் சாணிக்கு பதில் பவுடரை கரைத்து தெளிக்கிறார்கள். முக்கியமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இது இன்றும் நடக்கிறது. என்ன செய்வது மக்களின் மனதை மயக்கும் வர்த்தகம் மயக்கி கொண்டிருக்கிறது.
இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை திறந்தாலே விளம்பரங்கள் தான். தொடர் நாடகங்கள் தான் இன்றைய பெண்களை இழுக்க பயன்படுத்தும் ஆபத்தான தூண்டில்கள்.
தொடர்கதை போடப்படுகிறது என்றால் அதை ஆவலோடு பார்த்து அழும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவை எதற்காக திரையிடப்படுகின்றன என்றால் திரைக்கு பின்னே மக்களை தன் வர்த்தக வலையில் சிக்க வைக்கத்தான் . அப்படி என்ன செய்கிறார்கள் என்றால் தொடர்களின் இடைஇடையே விளம்பரங்களை காட்டி நம்மை இழுக்கிறார்கள் .😢உண்மையில் உற்று நோக்கினால் விளம்பரங்கள் தான் திரையிடப்பட்டு கொண்டு இருக்கிறது அதன் இடைவெளியில் தான் தொடர்கதைகளே போடப்படுகின்றது😢. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.
நம் முன்னோர்கள் அடிமை பட்டிருந்ததினாலோ என்னவோ அடிமைத்தனம் என்பது நம்மோடு ஒட்டி இருக்கிறது. இது மட்டுமல்ல இன்னும் அநேகம் இருக்கிறது சொல்லப்போனால் மதுவும் ,
பெண்ணின் மேல் காமமும் திரைமூலமாகவே கற்ப்பிக்க படுகிறது. ஆனால் காதல், காமம், ஓடிப்போவது என்று படத்தில் வந்த காட்சிகளை ஏற்றுக்கொண்ட என் பெற்றோர்கள் என்னையும் ஏற்றுக்கொள்வார் என்ற எண்ணத்தை தயாரிப்பாளர்களும் பெற்றோர்களும் உருவாக்கி விடுகிறார்கள்.
முன்னெல்லாம் கூட்டு குடும்பமே சாலச்சிறந்ததாக கருதப்பட்டது ஆனால் இன்றோ அப்படியல்ல தனிக்குடும்பமே சிறந்ததென பல நிருவனங்கள் நடத்தும் பட்டி மன்றங்களில் நிருபிக்க படுகிறது . ஏனென்றால் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் போது ஒரே பொருள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ஆனால் தனி தனி குடும்பமாக பிரித்து விடும்போது பொருட்களின் விற்பனை இரட்டிப்பாகிறது. நிருவனங்கள் தான் வளர்வதற்காக குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. மற்றவர்கள் சொல்வதை எல்லாம் ஆராயாமல் பேச்சில் மயங்கி விடும் பழக்கம் நம்மில் இருக்கும்போது யாராலும் நம்மை மிக சுலபமாக வசப்படுத்த முடியும். நாம் நாமாக இருக்கும் வரைதான் நாம் வெற்றியாளர்கள் நம்மை வேறொருவர் இயக்குகிறார் என்றால் நாம் அவரின் நிழலாக மாறிக்கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம்.
இதைத்தான் நம் நாட்டில் உள்ள அனைத்து வகையான அரசியல் தலைவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள். எடுத்துகாட்டாக RSS இந்து வெறியை தூண்டி விடுகிறது அதற்கு பிறகு அதை பயன்படுத்தி பஜக ஆட்சியை பிடிக்கிறது. பிராமணர்கள் வழக்கமான ஜாதிவழிபாட்டையே இன்றளவும் மக்கள் பின்பற்றி வருகின்றனர். இது மரபு அல்ல புகுத்தப்பட்ட மரபு. ரிக் வேதம் இவர்களை மிகவும் இழிவானவர்களாகத்தான் சித்தரித்து உள்ளது .எப்படி என்றால் இவர்கள் குதிரை மாமிசத்தையும் சோமபானம் சுராபானம் என்ற மதுவையும் குடித்து வாழ்ந்த கொடூரர்கள் ,அநேக திருமணங்களை செய்து கொண்டவர்கள் ஆனால் இவர்கள் சதி செய்து இன்று வரையில் நம்மை அடிமை படுத்தும் மனுதர்ம சட்டத்தை மனுஷர் மேல் தினித்துள்ளார்கள். ஏதோ நம் நாட்டை ஆண்ட கிறிஸ்தவர்கள் இங்கு நடந்த மனுதர்ம ஆட்சி முறையை தவறு என கண்டறிந்து அழித்ததால் தான் இன்று சுதந்திரமாக இருக்கிறோம் இல்லையென்றால் பலதாரமணம், உடன்கட்டை ஏறுதல், தாசி முறை போன்றவை இன்னும் புழக்கத்தில் இருந்திருக்கும். அன்று பிராமணர்கள் சொன்னார்கள் இந்தியரை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது என்று!!!
தொடரும் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் என்ற தலைப்பின் தொடர்ச்சி இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பில்
இதோ....
இனி மயக்கம் வேண்டாம்
அன்று பிராமணர்கள் சொன்னார்கள் இந்தியரை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது என்று!!!
தாங்கள் உருவாக்கிய மயக்கும் புத்தகமான மனுநீதீ சாஸ்திரத்தை அவர்கள் பரப்பி அதன்படியான அமைப்பை இந்தியா முழுமைக்கும் சாசனமாக மாற்றி விட்டார்கள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்த முதல் நீதிபதிக்கு இப்புத்தகம் கிடைக்கும்படி இந்த ஆரியர்கள் செய்துவிட்டார்கள். இதன் விளைவாக இப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது இது தான் இந்தியர்களுக்கு அமைந்த துரதிர்ஷடமான காரியமாகும். இந்தியர்களின் கலாச்சாரத்தை சற்றும் அறியாத நீதிபதி அதில் உள்ள நிற ஏற்றதாழ்வுகளை அப்படியே அங்கிகரித்து விட்டார். யாரிடம் எதைக்கொடுத்தால் தங்கள் விருப்பம் நிறைவேறும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் பிராமணர்கள். ஆதியில் இந்து என்ற வார்த்தையே மதத்தைக் குறிக்கும் வார்தையில்லை சைவம் வைணவம் சமணம் புத்தமதம் சீக்கியம் என்றே இருந்தது .சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதி அவர்களே இந்த பெயரினை வழங்கினார் .இதன்படி சைவமும் வைணவமும் ஒன்றினைக்கப்பட்டது.இப்படியாக ஆரிய மாயைக்குள் இந்தியா கட்டப்பட்டுள்ளது.
உயர்சாதி கீழ்சாதி என்பதே ஒருவிதமான ஆதிக்க கவர்ச்சி தான். எதையும் நம்பும் வெகுளித்தனத்தை பயன்படுத்தி நம்முன்னோர்களை கவர்ந்துவிட்டனர்.
பிற மொழிக்கவர்ச்சி , மற்றும் நிறகவர்ச்சி நமக்கு இருப்பதால் அதைப்பயன்படுத்தி மிக எளிதாக நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். கண்டதையெல்லாம் பார்த்து கையெடுக்கும் பழக்கம் நம் முன்னோர்களுக்கு இருப்பதை பார்த்த ஆரியர்கள் புது புது மூடப்பழக்கவழக்கங்களை இந்தியருக்குள் புகுத்தி விட்டனர். உண்மையில் இந்திய கலாச்சாரம் இந்தியரின் பண்புகள் சிறந்து தனித்துவ தன்மையுடன் இருந்துள்ளது. இவர்களைப்போல நம் மயங்கும் கண்களை பயன்படுத்தி தொழில் செய்து நம் பொருளாதாரத்தை சுரண்டி கொண்டிருக்கும் அந்நிய வர்த்தகம் நம் நாட்டில் பெருகி வருகிறது. இது நாட்டுக்கு பெரும் ஆபத்து. நம்மை மழுங்கடித்து அவர்கள் சிந்திப்பதற்கு ஏற்றவாறு நம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது வர்த்தகம். இது முன்னேற்றத்தின் பாதையல்ல நம்மை சிந்திக்க விடாமல் பின்னுக்கு இழுத்த சாதனை. வர்த்தகம் வாரிவழங்கும் பரிசுகள்,தள்ளுபடிகள் எல்லாமே நம்மையும் நம் பணத்தையும் விழுங்கி கொண்டுதான் இருக்கிறது.
மயக்கும் வர்த்தகத்திற்கும் பிராமணர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிராமணர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? எந்த வம்சாவழியினர் ? எந்த நாட்டை சேர்தவர்கள்? எந்த வழிபாடை உடையவர்கள்? இவர்களால் இந்தியாவில் நுழைந்த தீய எண்ணங்கள் என்ன? இவர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? இவர்கள் வருவதற்கு முன் இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் இனிவரக்கூடிய பதிவுகளில் தெளிவாக குறிப்பிட இருக்கிறேன்.
தொடரும் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மயக்கி மாயையில் சிக்க வைக்கும் தீய எண்ணங்கொண்டவர்கள் இந்த பிராமணர்கள் series 3
சமூக அக்கறை வாசகர்களுக்கு சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள்...
அன்புள்ள சகோதர சகோதரிகளே இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் பதிவானது மயங்கும் கண்கள் மயக்கும் வர்த்தகம் என்ற தலைப்பிலும் பின்பு இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டவைகளின் தொடர்ச்சியே. ஒருவேளை அதனை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு பின் தொடருங்கள்....
வர்த்தகம் வாரிவழங்கும் பரிசுகள்,தள்ளுபடிகள் எல்லாமே நம்மையும் நம் பணத்தையும் விழுங்கி கொண்டுதான் இருக்கிறது.
மயக்கும் வர்த்தகத்திற்கும் பிராமணர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிராமணர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? எந்த வம்சாவழியினர் ? எந்த நாட்டை சேர்தவர்கள்? எந்த வழிபாடை உடையவர்கள்? இவர்களால் இந்தியாவில் நுழைந்த தீய எண்ணங்கள் என்ன? இவர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? இவர்கள் வருவதற்கு முன் இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் இப்பதிவில் தெளிவாக குறிப்பிட இருக்கிறேன். இதன் தொடர்ச்சி.....................
பிராமணர்கள் என்பவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் வந்தேறிகள். ஆடு மேய்த்து கொண்டு வந்தவர்கள். இந்தியா முழுவதும் இயற்கையை வணங்கும் ஒரு கூட்டமும் சமண மதத்தவர்களும் புத்த மதத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்தார்கள். இந்த மூன்று வகையான மக்கள் கூட்டமும் கடவுள் கொள்கை அற்ற மதங்கள். இந்த மதங்களுக்குள் சில பல மாற்றங்கள் நிகழ்ந்து கடவுட்கொள்கையுடைய மதங்களாக மாறிப்போயின.
பின்னர் அப்படி மாறிப்போன பழந்திராவிடர்கள் அவர்களே பூஜை செய்து வழிபட்டும் வழிநடத்தியும் வந்தார்கள். இதனால் கோவில்களில் பணம் செல்வம் கொழிக்க ஆரம்பித்தது.
பிராமணர்களின் ஆதிக்கம்:
அந்த சமயம் இதனையடுத்து அந்த செல்வங்களின் மேல் ஆசை வைத்து அதை அபகரிக்க நிறைய புராணங்களையும் கதைகளையும் பிராமணர்கள்இயற்றினார்கள். முருகனை ஸ்காந்தன் ஆக்கினார்கள். பரணி இலக்கியத்தில் வரும் பேய் காளியை பெண் கடவுளாக்கினார்கள். முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடத்தில் சிலைகளை வணங்கும் வழக்கம் அவர்களிடத்தில் இல்லை. பிற்காலத்தில் தான் அவைகள் கருவரைக்குள் வைக்கப்பட்டது. குமரகடவுள் ஒருவரே ஆனால் சிவ பெருமானுக்கு அநேக பிள்ளைகள் உருவாக்கப்பட்டது. தந்தை குமரன் தாய் என்பதை பல அவதாரங்களையும் பல குமாரர்களையும் பல பெண் தெய்வங்களையும் உருவாக்கினார்கள். அவதார் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பன்மை கிடையாது. அதாவது அவதாரங்கள் கிடையாது ஒரே அவதாரம் தான். ஆனால் அவதாரத்தையும் அவதாரங்களாக பிரித்து காண்பித்தார்கள். இதன்மூலம் பல கடவுட்கொள்கைகளும் உருவானது. குமரனுக்கு இருமனைவிகள் என்பது உருவகமே ஒழிய உண்மை இல்லை. கடவுளுக்கு பெண்டேது பிள்ளையேது காமலீலை குணமேது இதுஎல்லாம் இருப்பது கடவுளுக்கு உரிய அந்தஸ்திலிருந்து கடவுளை பின்னோக்கி செல்ல வைக்கிறது . ஆக கடவுள் அழகானவர் தூய்மையானவர் ஆனால் இங்கோ கடவுள் தனது நிலையைவிட்டு மிகவும் மோசமான நிலையில் காட்டப்படுகிறார். இது யார் செய்த சதி பிராமணர்கள் தான். இந்தியாவில் முதலில் சைவ மத கோட்பாடு உடையவர்களின் தலைமையிடமாக சிதம்பரம் நடராஜர் கோயில் இருந்தது. அதில் முதலில்
சிலையிலாலாமலே வழிபாடு நடத்தப்பட்டது பின்னர் ஆரிய வருகைக்கு பின்னர் சிலை வைக்கப்பட்டது.
ஆரிய மாயை
அயோக்கிய மாயை
கருத்துகள்
கருத்துரையிடுக