தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள். என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் ,பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன். எனது பெற்றோர் ,ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்து கொள்வேன். அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன் என் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன் என் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவதிலே தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க நமது மணித்திரு நாடு. சமூக அக்கறை பார்வையாளர்கள் அனைவருக்கும் சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கேளாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எனலாம். இந்தியா என்பது இந்திய துணைகண்டத்தில் பிறந்த அனைவருக்கும் தாய்நாடு. நம்நாட்டில் பிறப்பால் இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் நிறத்தால் இடத்தால் வாழ்க்கை முறையால் அனைவரும் வேறுபட்டவர்கள் ஆனால் ஒற்றுமையோடு வாழ்கின்றனர். இங்கு இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துமதமென்ற ஒரே போர்வை...