மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் series 1
மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் சமூக அக்கறை வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். என்னடா தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது என்று எண்ணலாம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் இதுதான் தற்போது பரிதவிக்கும் சூழ்நிலையாய் உள்ளது. மயங்கும் கண்களை நம்பியே உலக வர்த்தகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . முன்னெல்லாம் ஒரு கடைக்கு சென்றால் எதை வாங்க வேண்டுமோ அதை மட்டுமே வாங்கிவிட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் இன்றைய சமுதாயமோ அப்படியில்லை , அதற்கு பதில் பார்ப்பதையெல்லாம் வாங்கும் மயக்கம் நிறைந்தவர்களாய் இருக்கின்றனர் இக்கால சமுதாயத்தினர். முன்பெல்லாம் நம் வீட்டில் எது இல்லையோ அதை வாங்க வேண்டுமென்றால் கடை கடையாய் ஏறி இறங்கி நமக்கு ஏற்ற பொருளா என்று அலசி ஆராய்ந்துதான் வாங்குவோம் ஆனால் இன்றோ online இல் சென்று எந்த புகைப்படம் அழகாக இருக்கிறதோ அதை கிளிக் செய்யும் பழக்கம் நம்மில் வந்துவிட்டது. அந்தக்காலத்தில் எல்லாம் அதிகமாக மாடு வைத்திருந்தவர்கள் தான் சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந...