மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் series 1
மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள்
சமூக அக்கறை வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
என்னடா தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது என்று எண்ணலாம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் இதுதான் தற்போது பரிதவிக்கும் சூழ்நிலையாய் உள்ளது. மயங்கும் கண்களை நம்பியே உலக வர்த்தகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . முன்னெல்லாம் ஒரு கடைக்கு சென்றால் எதை வாங்க வேண்டுமோ அதை மட்டுமே வாங்கிவிட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் இன்றைய சமுதாயமோ அப்படியில்லை , அதற்கு பதில் பார்ப்பதையெல்லாம் வாங்கும் மயக்கம் நிறைந்தவர்களாய் இருக்கின்றனர் இக்கால சமுதாயத்தினர்.
முன்பெல்லாம் நம் வீட்டில் எது இல்லையோ அதை வாங்க வேண்டுமென்றால் கடை கடையாய் ஏறி இறங்கி நமக்கு ஏற்ற பொருளா என்று அலசி ஆராய்ந்துதான் வாங்குவோம் ஆனால் இன்றோ online இல் சென்று எந்த புகைப்படம் அழகாக இருக்கிறதோ அதை கிளிக் செய்யும் பழக்கம் நம்மில் வந்துவிட்டது.
அந்தக்காலத்தில் எல்லாம் அதிகமாக மாடு வைத்திருந்தவர்கள் தான் சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தார்கள் ஆனால் இன்றோ சாணிகரைத்து போடுவதற்கு கூட வெட்கமாக இருக்கிறது பலருக்கு.
ஏன் பல நகரங்களில் சாணிக்கு பதில் பவுடரை கரைத்து தெளிக்கிறார்கள். முக்கியமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இது இன்றும் நடக்கிறது. என்ன செய்வது மக்களின் மனதை மயக்கும் வர்த்தகம் மயக்கி கொண்டிருக்கிறது.
இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை திறந்தாலே விளம்பரங்கள் தான். தொடர் நாடகங்கள் தான் இன்றைய பெண்களை இழுக்க பயன்படுத்தும் ஆபத்தான தூண்டில்கள்.
தொடர்கதை போடப்படுகிறது என்றால் அதை ஆவலோடு பார்த்து அழும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவை எதற்காக திரையிடப்படுகின்றன என்றால் திரைக்கு பின்னே மக்களை தன் வர்த்தக வலையில் சிக்க வைக்கத்தான் . அப்படி என்ன செய்கிறார்கள் என்றால் தொடர்களின் இடைஇடையே விளம்பரங்களை காட்டி நம்மை இழுக்கிறார்கள் .😢உண்மையில் உற்று நோக்கினால் விளம்பரங்கள் தான் திரையிடப்பட்டு கொண்டு இருக்கிறது அதன் இடைவெளியில் தான் தொடர்கதைகளே போடப்படுகின்றது😢. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.
நம் முன்னோர்கள் அடிமை பட்டிருந்ததினாலோ என்னவோ அடிமைத்தனம் என்பது நம்மோடு ஒட்டி இருக்கிறது. இது மட்டுமல்ல இன்னும் அநேகம் இருக்கிறது சொல்லப்போனால் மதுவும் ,
பெண்ணின் மேல் காமமும் திரைமூலமாகவே கற்ப்பிக்க படுகிறது. ஆனால் காதல், காமம், ஓடிப்போவது என்று படத்தில் வந்த காட்சிகளை ஏற்றுக்கொண்ட என் பெற்றோர்கள் என்னையும் ஏற்றுக்கொள்வார் என்ற எண்ணத்தை தயாரிப்பாளர்களும் பெற்றோர்களும் உருவாக்கி விடுகிறார்கள்.
முன்னெல்லாம் கூட்டு குடும்பமே சாலச்சிறந்ததாக கருதப்பட்டது ஆனால் இன்றோ அப்படியல்ல தனிக்குடும்பமே சிறந்ததென பல நிருவனங்கள் நடத்தும் பட்டி மன்றங்களில் நிருபிக்க படுகிறது . ஏனென்றால் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் போது ஒரே பொருள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ஆனால் தனி தனி குடும்பமாக பிரித்து விடும்போது பொருட்களின் விற்பனை இரட்டிப்பாகிறது. நிருவனங்கள் தான் வளர்வதற்காக குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. மற்றவர்கள் சொல்வதை எல்லாம் ஆராயாமல் பேச்சில் மயங்கி விடும் பழக்கம் நம்மில் இருக்கும்போது யாராலும் நம்மை மிக சுலபமாக வசப்படுத்த முடியும். நாம் நாமாக இருக்கும் வரைதான் நாம் வெற்றியாளர்கள் நம்மை வேறொருவர் இயக்குகிறார் என்றால் நாம் அவரின் நிழலாக மாறிக்கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம்.
இதைத்தான் நம் நாட்டில் உள்ள அனைத்து வகையான அரசியல் தலைவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள். எடுத்துகாட்டாக RSS இந்து வெறியை தூண்டி விடுகிறது அதற்கு பிறகு அதை பயன்படுத்தி பஜக ஆட்சியை பிடிக்கிறது. பிராமணர்கள் வழக்கமான ஜாதிவழிபாட்டையே இன்றளவும் மக்கள் பின்பற்றி வருகின்றனர். இது மரபு அல்ல புகுத்தப்பட்ட மரபு. ரிக் வேதம் இவர்களை மிகவும் இழிவானவர்களாகத்தான் சித்தரித்து உள்ளது .எப்படி என்றால் இவர்கள் குதிரை மாமிசத்தையும் சோமபானம் சுராபானம் என்ற மதுவையும் குடித்து வாழ்ந்த கொடூரர்கள் ,அநேக திருமணங்களை செய்து கொண்டவர்கள் ஆனால் இவர்கள் சதி செய்து இன்று வரையில் நம்மை அடிமை படுத்தும் மனுதர்ம சட்டத்தை மனுஷர் மேல் தினித்துள்ளார்கள். ஏதோ நம் நாட்டை ஆண்ட கிறிஸ்தவர்கள் இங்கு நடந்த மனுதர்ம ஆட்சி முறையை தவறு என கண்டறிந்து அழித்ததால் தான் இன்று சுதந்திரமாக இருக்கிறோம் இல்லையென்றால் பலதாரமணம், உடன்கட்டை ஏறுதல், தாசி முறை போன்றவை இன்னும் புழக்கத்தில் இருந்திருக்கும். அன்று பிராமணர்கள் சொன்னார்கள் இந்தியரை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது என்று!!!
தொடரும் ... அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்
நீங்கள் படித்து கொண்டு இருப்பது சமுக அக்கறை.....
கருத்துகள்
கருத்துரையிடுக