தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி
இந்தியா என் தாய்நாடு.
இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள்.
என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன்.
என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் ,பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
என் நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன்.
எனது பெற்றோர் ,ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்து கொள்வேன்.
அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்
என் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன்
என் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவதிலே தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க நமது மணித்திரு நாடு.
இந்தியா என் தாய்நாடு.
இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள்.
என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன்.
என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் ,பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
என் நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன்.
எனது பெற்றோர் ,ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்து கொள்வேன்.
அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்
என் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன்
என் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவதிலே தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க நமது மணித்திரு நாடு.
சமூக அக்கறை பார்வையாளர்கள் அனைவருக்கும் சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள்.
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கேளாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எனலாம்.
இந்தியா என்பது இந்திய துணைகண்டத்தில் பிறந்த அனைவருக்கும் தாய்நாடு.
நம்நாட்டில் பிறப்பால் இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் நிறத்தால் இடத்தால் வாழ்க்கை முறையால் அனைவரும் வேறுபட்டவர்கள் ஆனால் ஒற்றுமையோடு வாழ்கின்றனர்.
இங்கு இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துமதமென்ற ஒரே போர்வைக்குள்ளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அறுவகை சமயத்தவர்களும் , புத்த மதத்தவர்களும், சீக்கியர்களும், சமணர்களும், பழந்திராவிட ஆவி வணக்கத்தாரும், நாத்திகர்களும் இன்னும் பல கலாச்சாரத்திலிருந்து அகதிகளாய் வந்த யூதர்களும், இலங்கை அகதிகளும், பங்களாதேசியான அகதிகளும் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பலவித கலாச்சாரத்தினால் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையோடு சேர்ந்துவாழும் நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்தியா என்பது சிந்துநதி நாகரீகத்தானின் நாடு. இதை இந்துக்களின் நாடு என்றோ இஸ்லாமிய நாடு என்றோ காலீஸ்தான் என்றோ கிருஸ்தவ நாடு என்றோ இதை மாற்ற பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை.
சில சமூக விரோதிகள் தேசத்தை பங்குபோட்டு அழிக்க நினைத்தாலும் அதற்கெல்லாம் இந்தியா ஒத்துழைக்காது என்றே நம்பலாம். இந்தியாவில் பெருமளவில் இளைஞர்களே மக்கள் தொகையில் அதிகமானவர்கள். ஆதலால் இந்தியா வரக்கூடிய நாட்களில் வல்லரசாகும்.
இந்தியாவில் பிறந்த அனைவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழியில் இருக்கிறதைபோல ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் இதனை நம்பவேண்டும்.
ஒவாவொரு மனிதரையும் சகோதரனாகவும் சகோதரியாகவும் நினைக்கவேண்டும்.
என்தாய் திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன். முதலில் இந்த சமூகவிரோதிகளுக்கு இந்தியா பிடிக்காது. இந்தியாவை பிரிக்கவேண்டும் என்பதே அவர்களது ஆசை. அதற்காகவே பல போராடும் அமைப்புகளை ஏற்படுத்தி பலநிலைகளில் இந்தியரின் மனநிலையை பல கூறுகளாக பிரிக்கிறார்கள். இதனால் இந்தியாவை நேசிக்கும் எண்ணம் போய் இந்தியாவின் மேல் ஒரு வெறுப்புணர்ச்சி உருவாகிறது. இப்படியாக நமது உளவியல் குழப்பமடைந்து அழிக்கும் சக்திகளிடம் நமது உள்ளம் பறிபோய் இருக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்.
என் தாய்நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபுசிறப்புக்காகவும் பெருமிதமடைகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக