தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம்

தமிழனது வரலாறை சொல்ல வேண்டுமானால் அது இன்று நேற்று நடந்ததல்ல. ஆதியில் இறைவன் முதல் மனிதனை இந்த பூமியில் படைத்த கதையிலிருந்தே இந்த வரலாறு ஆரம்பிக்கிறது. ஆகவே உலக வரலாறே தமிழின வரலாறு என்பது தமிழ்நாட்டு அறிஞர் தவிற வேறு யாரும் ஏற்றுகொண்டிலர். காரணம் பைபிளின் கருத்துக்களை அதிகம் ஆய்ந்த அறிஞர்கள் தேட வேண்டிய இடத்தில் தேடாமல் தேவையில்லாத இடத்திலெல்லாம் தேடியதாலேயே தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.

காரணம் அவர்களுக்கு மற்ற மதங்களை தங்களுக்கு கீழ்படுத்த வேண்டும் என்னும் பேரவாவினாலும் ஏதேன் தோட்டத்தில் ஓடிய நதிகள் பாரசீகம் தொடங்கி அரபிதேசம் வரையிலும் இருப்பதாலும் ஏதேன் இருந்த இடம் மெசபத்தோமியா தொடங்கி அரபு தேசம் என நினைத்துக்கொண்டார்கள். கால வெள்ளோட்டம் இதையெல்லாம் தவறு என்றே மெய்பித்திருக்கிறது. பூமியில் மனுஷர் தோன்றிய இடம் லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. மேற்குலகமோ இதனை ஏற்றுக்கொண்டால் கருப்பர் இனமானது உயர்வாக சொல்லபடுமோ எனகருதி இதனை மறுப்பதுமன்றி பைபிள் பொய்யாக போய்விடுமோ என்ற ஐயத்தாலும் உண்மையை மறைக்கும் சதியை செய்துகொண்டு இருக்கின்றனர்.

இவர்களுடைய நம்பிக்கைகள் தவிடு பொடியாகின்றது என கண்டறிந்து உடனே இந்த ஆராய்ச்சியை தடைசெய்வதிலேயே குறியாக இருக்கின்றது மேற்குலகம். எனவே தான் இந்த ஆராய்ச்சியை இங்கு வெளிப்படுத்துவதை ஒரு முக்கிய புள்ளியாக கொள்கிறேன்.

"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று பெயரளவில் சொல்லிக்கொண்டோமே தவிர நமது வரலாறு யாதோ, நமது மூத்தோர் யாரோ, நமது பாரம்பரியம் என்னவோ என தெரியாமலேயே பெருமைகொள்ளும் முட்டாள் சமுதாயமாகவே மாறி போயினோம்.

காலம் வந்துவிட்டது இறைவன் தனது இனத்தை மீட்க பல ஆராய்ச்சிகளின் மூலமாகவும், தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாகவும், அகழ்வாராய்ச்சி மூலமாகவும், புதைபொருள் ஆராய்ச்சி மூலமாகவும், இலக்கிய ஆராய்ச்சி , தத்துவ ஆராய்ச்சி, தொல்படிம ஆராய்ச்சி, சிற்பவியல் ஆராய்ச்சி, நாணயவியல் ஆராய்ச்சி, புராண ஆராய்ச்சி போன்றவற்றின் மூலம் செய்து வருகிறார்.

அனேக தமிழரிஞர்களுக்கு இறைவன் அபரிவிதமான அறிவை ஈந்து தமிழர் வரலாறை புது பொலிவுடன் மீட்டெடுக்க உதவியுள்ளார்.

தலை தாழ்ந்து வாழும் தமிழ் இனம் இனி தலை நிமிர்ந்து வாழும் என இதனால் நமக்கு புரியலாகிறது. தமிழர் வரலாறை அறிய வேண்டுமாயின் பூமியில் மாந்தன் தோற்றுவாயிலிருந்தே தொடங்க முடியும் ஏனெனில் ஆதிபெற்றோரே தமிழர் என இக்காலத்தில் இறைவன் நமக்கு பல ஆராய்ச்சிகள் மூலம் தெளியகாட்டியுள்ளார்.

யூதர்களின் வேதமான தோராவானது கிருஸ்தவர்களால் தங்களது வேதமாகவும் ஏற்றுக்கொள்ள பட்டிருக்கிறது. தோராவின் முதல் புத்தகமாகிய தொடக்க நூல் ஆதாம் மற்றும் ஏவாள் என்ற முதல் மாந்தர்களை பற்றி கூறுகிறது. ஆதாம் அதாவது ஆதி மண் என்ற மூல வார்த்தையிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால் தமிழர் இலக்கியங்களிலும் இந்த ஆதாம் என்ற பெயரை ஆதன் என்றும் பிசிராந்தையார் என்றும் ஔவை என்றும் ஔவையார் என்றும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாம் என்ற எபிரேய மொழி பதத்திற்கு செம்மண் என்று பொருளாம். ஆதாவது இறைவன் மண்ணால் மனிதனை படைத்ததால் ஆதி மண் ஆனது ஆதிமணு, ஆத(ம)ணு, ஆதம், ஆதன் ஹாதம், ஹாதாம் என பல மொழிக்கேற்ப மருவி இருக்கிறது என்பதை இங்கு கண்டறியலாம். ஆதாமின் வேர்ச்சொல் ஆதன் என்றும் ஆதிமண் என்றும் சொல்ல ஏதுஉண்டாகையால் மாந்தன் தமிழனாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அனைத்து ஆராய்ச்சியாளர்களையும் கொண்டுவரும் மைய புள்ளியாகிறது.    தன்னையே அறியாமல் தமிழனம் இன்று வரை இருந்துள்ளது என்பது இதுநாள் வரை அறியாத புதிராகவே உள்ளது.

பைபிள் கடற்கோளை குறித்து பேசுகிறது அதே போல தமிழிலக்கியங்களிலும் கடற்கோற்பற்றிய செய்திகள் அதிகம் உள்ளன.

குமரிகண்டமே அழிந்ததற்கு ஒரு கடற்கோளே காரணமென நமது முன்னனோர்கள் எழுதி வைத்துள்ளனர் என்பதிலிருந்து தமிழர் வாழ்விடம் குமரிகண்டம் எனவும் அஃது கடற்கோளால் அழிக்கப்பட்ட செய்தியும் நமக்கு மிக தெளிவாக புலனாகிறது. 

தமிழரினை போன்றே யூத இலக்கியமும் இதனை குறிப்பிட்டுள்ளதும் அல்லாமல் நோவா என்பவரும் அவருடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மூவரும் அவர்தம் மனையாட்டிகளும் சேர்த்து மொத்தம் எட்டு பேர் கப்பல் ஒன்றின் உதவியோடு இறைவன் உயிர் பிழைக்க செய்தார் என்ற தகவலை கூறுகிறது அது போலவே இந்திய புராணங்களிலும் இதுபோன்ற செய்திகள் காணப்படுகின்றது என்பதிலிருந்து இரு இலக்கியங்களுக்கும் இடையிலான தொடர்பு விளங்குகிறது.

கும்பகோணம் என்ற ஊரினை பற்றிய புராண தகவல் மேற்கூரிய தகவலினை வலுபடுத்துக்கிறது. அதாவது இரண்டு தகவல்களிலிருந்தும் கடற்கோள் ஏற்பட்டு தமிழர்கள் அல்லது ஆதி பழங்குடியினர் கப்பலிலோ அல்லது கும்பத்திலோ இருந்து காக்கப்பட்ட செய்தி விளக்கப்படுகிறது.

மேலும் இவர்கள் மேடான(அரராத்) மலையில் இறங்கியதாகவும் அங்கிருந்து கீழே இறங்கி வாழ்ந்ததாகவும் பின்னர் சமவெளியை நோக்கி அதாவது கிழக்கு திசை நோக்கி திரும்பி வந்து பரவியதாகவும் பைபிள் கூறுகிறது.

1.ஆதி தமிழர்கள் கடற்கோளால் அழிந்தார்கள் எனவும் 

2.அவர்களது வாழிடங்கள் கடற்கோளால் மூடப்பட்டுள்ளதென்றும்

3.அவர்கள் அங்கிருந்து தப்பித்து மேடான இடங்களுக்கு வந்தார்களென்றும்

4.திரும்பவும் தான் வாழ்ந்த இடத்தின் திசை நோக்கி சென்றார்கள் எனவும் பைபிள் மற்றும் சங்க இலக்கியங்கள் வழியும் நிறுவப்படுகிறது.

இதிலிருந்து ஆதிமனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் தமிழர்களே அவர்கள் ஆதாம் ஏவாள் இல்லை. அவர்கள் ஆதன் அவ்வை என்ற பெயராலேயே குறிக்கப்படுகின்றார்கள் என்றும், 

சிலப்பதிகாரத்தில் பிறவா யாக்கை பெரியோன் என்பவனுக்கு கோயில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பிறவா யாக்கை எனும்போது யோனியிலிருந்து பிறவாதவர் என்பது புலனாகிறது. இது முதல் மனிதனே தவிர சில அறிஞர்கள் கூறுவது போல் சிவபெருமான் ஆகிய கடவுள் அல்ல.

ஒரு ஆராய்ச்சியில் புராணநோக்கில் பார்க்கும் போது சிவன் இருவகையாக பிரிக்கப்படுகிறான்.அதாவது ஆதிமனிதன் ஆதிசிவனாகவும் கடவுள் பரம சிவனாகவும் காட்டப்படுகிறார்.

அதாவது ஆதிமனிதனும் சிவன் என்றே அழைக்கப்படுகிறான்.

ஆகவே ஆதிமனிதன் ஆதிசிவன் என்று அழைக்கப்படுகிறான். அதாவது இவன் ஆதி சீவன்(ஜீவன்). சிவன் என்ற பதத்திற்கு சிவந்தவன் என்ற பொருளும் உண்டு.

அதாவது சிவந்த மண்ணில் இருந்து உருவாக்கப்பட்டவன் என்று பொருள்.

மேலும் சிவந்த மண் என்ற வார்த்தையே சிவந்தவனாகியது என்பது இந்த வேர்ச்சொல் வாயிலாக புலப்படுகிறது.

அதுபோல ஏவாள் மனிதர்கள் அனைவருக்கும் தாய் என்று பைபிள் கூறுகிறது. அதுபோல பார்வதி என்னும் பெயர் உலகில் உள்ள அனைவருக்கும் தாய் என்ற அர்தத்திலேயே வழங்கப்படுகிறது என்பதிலிருந்து ஆதிசிவனும் பார்வதியும் ஆதாம் ஏவாள் என்றும் இவர்களே ஆதி பெற்றோர் என்ற கருத்து இங்கு நிலைநாட்டப்படுகிறது.

ஆக யூத இலக்கியம் எப்படி இவ்வளவு துள்ளியமாக நமது பாரம்பரிய இலக்கியக்கருத்துக்களோடு ஒத்துபோகிறது என்று இங்கு சந்தேகம் வலுத்திருக்க வேண்டும் என்பது நாம் ஆராய வேண்டிய அடுத்த படிநிலை.

யூதத்தின் ஆரம்பமாக சொல்லப்படுபவர் ஆபிரகாம் என்பவர் . இவர் ஊர் என்று அழைக்கப்படக்கூடிய மெசபத்தோமியாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து போனார் என்பதிலிருந்து தமிழுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு இங்கு நன்றாக புலப்படுகிறது. அவர் ஒரு ஆடுமேய்கும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதிலிருந்து ஆயர்குடிக்கு நெருங்கிய தொடர்புடையவராக இருக்கிறார். இவர் யூப்பிரட்டிஸ் நதிவழியாக ஆரானை அடைந்து பின்னர் கானான் நாட்டை அடைகிறார் என்பது ஆபிரகாமின் வரலாறு. 

ஆக ஆபிரகாம் ஒரு திராவிடன் அதாவது ஒரு தமிழ் இனப்பரம்பரையில் பிறந்தவர் என்பது புலப்படுகிறது. ஆகவேதான் தமிழரின் கருத்துக்கள் யூத இலக்கியத்தில் மிகுந்து காணப்படுகின்றது. 

தமிழரிடமிருந்து பிரிந்து போன ஒரு கூட்டம் தமிழரையும் தமிழர்தம் சிந்தனைகளையும் புறந்தள்ளும் ஆணவம் உடையவர்களாய் இருப்பது வருத்தம் அளிக்க கூடிய செய்தியே.

யூதத்திலிருந்து மலர்ந்த சமயமாகிய கிருஸ்துவத்தின் அறிஞர்களும் இவ்வுண்மையை உணராது யூத சிந்தனைக்கு மாத்திரமே வழிதிறக்கின்றனர். யூதத்தின் முந்தைய மூத்தோரான தமிழரிடம் வருவதாக இல்லை. இவர்களை சபிக்கப்பட்டவர்கள் எனவும் கடவுளுக்கு விரோதமானவர்கள் எனவும் இழித்தும் பழித்தும் செயல்படுகின்றனர். அதற்கு ஆதாரமாக யூத புத்தகமான தோராவில் உள்ள கானான் சபிக்கப்பட்டவன் எனும் பதத்தை எடுத்து அவனது வம்சாவழிகளை இப்போதும் இழித்துரைப்பதும் அடிமைபடுத்துவதும் தொடர்கிறது.

ஆதாமின் மகனாகிய சேத் பேராலேயே நம்நாட்டில் சேது சமுத்திரம் என பெயர் இருப்பது ஆதாம் இந்நிலத்துக்கு உரியவன் என்பது புலப்படுகிறது. 

ஆக முடிவாக ஆதாம் ஒரு தமிழன், ஏவாள் ஒரு தமிழச்சி, பிறவா யாக்கை பெரியோன் என்ற ஆதாம் வழிபடபட்டவன், ஆதி சிவன் என்பவன் முதல் மனிதனாகிய ஆதாம் இவன் சிவந்த மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட படியால் இவன் சிவந்தவன் ஆகவும் இருக்கிறான்.

இவனது மனைவி அனைவருக்கும் தாயாக இருப்பதால் பார்வதியானாள். இவளது இயற்பெயர் அவ்வை ஆகும் .உயர்திணை பெயர்சொல் விகுதி சேர்த்து அவ்வையார் ஆக இருக்கிறார்.

முழு உலகமும் தமிழ் இனத்திலிருந்தே தோன்றின என்பதையும் மாந்தன் பிறந்தகம் குமரிகண்டமே என்றும்  இதன் மூலம் நிருபிக்கிறோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்