இனி மயக்கம் வேண்டாம் series 2

மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் என்ற தலைப்பின் தொடர்ச்சி இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பில்

இதோ....

அன்று பிராமணர்கள் சொன்னார்கள் இந்தியரை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது என்று!!!
தாங்கள் உருவாக்கிய மயக்கும் புத்தகமான மனுநீதீ சாஸ்திரத்தை அவர்கள் பரப்பி அதன்படியான அமைப்பை இந்தியா முழுமைக்கும் சாசனமாக மாற்றி விட்டார்கள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்த முதல் நீதிபதிக்கு இப்புத்தகம் கிடைக்கும்படி இந்த ஆரியர்கள் செய்துவிட்டார்கள். இதன் விளைவாக இப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது இது தான் இந்தியர்களுக்கு அமைந்த துரதிர்ஷடமான காரியமாகும். இந்தியர்களின் கலாச்சாரத்தை சற்றும் அறியாத நீதிபதி அதில் உள்ள நிற ஏற்றதாழ்வுகளை அப்படியே அங்கிகரித்து விட்டார். யாரிடம் எதைக்கொடுத்தால் தங்கள் விருப்பம் நிறைவேறும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் பிராமணர்கள். ஆதியில் இந்து என்ற வார்த்தையே மதத்தைக் குறிக்கும் வார்தையில்லை சைவம் வைணவம் சமணம் புத்தமதம் சீக்கியம் என்றே இருந்தது .சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதி அவர்களே இந்த பெயரினை வழங்கினார் .இதன்படி சைவமும் வைணவமும் ஒன்றினைக்கப்பட்டது.இப்படியாக ஆரிய மாயைக்குள் இந்தியா கட்டப்பட்டுள்ளது.
உயர்சாதி கீழ்சாதி என்பதே ஒருவிதமான ஆதிக்க கவர்ச்சி தான். எதையும் நம்பும் வெகுளித்தனத்தை பயன்படுத்தி நம்முன்னோர்களை கவர்ந்துவிட்டனர்.
பிற மொழிக்கவர்ச்சி , மற்றும் நிறகவர்ச்சி நமக்கு இருப்பதால் அதைப்பயன்படுத்தி மிக எளிதாக நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். கண்டதையெல்லாம் பார்த்து கையெடுக்கும் பழக்கம் நம் முன்னோர்களுக்கு இருப்பதை பார்த்த ஆரியர்கள் புது புது மூடப்பழக்கவழக்கங்களை இந்தியருக்குள் புகுத்தி விட்டனர். உண்மையில் இந்திய கலாச்சாரம் இந்தியரின் பண்புகள் சிறந்து தனித்துவ தன்மையுடன் இருந்துள்ளது. இவர்களைப்போல நம் மயங்கும் கண்களை பயன்படுத்தி தொழில் செய்து நம் பொருளாதாரத்தை சுரண்டி கொண்டிருக்கும் அந்நிய வர்த்தகம் நம் நாட்டில் பெருகி வருகிறது. இது நாட்டுக்கு பெரும் ஆபத்து. நம்மை மழுங்கடித்து அவர்கள் சிந்திப்பதற்கு ஏற்றவாறு நம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது வர்த்தகம். இது முன்னேற்றத்தின் பாதையல்ல நம்மை சிந்திக்க விடாமல் பின்னுக்கு இழுத்த சாதனை. வர்த்தகம் வாரிவழங்கும் பரிசுகள்,தள்ளுபடிகள் எல்லாமே நம்மையும் நம் பணத்தையும் விழுங்கி கொண்டுதான் இருக்கிறது.
மயக்கும் வர்த்தகத்திற்கும் பிராமணர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிராமணர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? எந்த வம்சாவழியினர் ? எந்த நாட்டை சேர்தவர்கள்? எந்த வழிபாடை உடையவர்கள்? இவர்களால் இந்தியாவில் நுழைந்த தீய எண்ணங்கள் என்ன? இவர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? இவர்கள் வருவதற்கு முன் இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் இனிவரக்கூடிய பதிவுகளில் தெளிவாக குறிப்பிட இருக்கிறேன்.

தொடரும் ... அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டு இருப்பது சமுக அக்கறை.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்