பிட்டு படம் பார்ப்பதை தவிர்ப்பதற்கான  எளிய வழி முறைக்

தினமும் அந்த பல்லான படம் பார்ப்பதை தவிர்ப்பதற்கான  எளிய வழி முறைகள்
வணக்கம் நண்பர்களே, இந்த காலகட்டத்தில் நிறைய மக்கள் ஆபாச வீடியோக்களுக்கும் மற்றும் புகைப்படங்களுக்கும் அடிமையாகி உள்ளனர். இது அவர்களது சமூக வாழ்க்கையும் மற்றும் குடும்ப வாழ்க்கையும் மிகவும் பாதிக்கிறது. அதிக மக்கள் இதில் இருந்து வெளி வர முடியவில்லை. காரணம் இதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளி வர முடியாது, இதனை படிப்படியாக குறைக்க முடியும். இதற்கான வழி முறைகள் கீழே கொடுக்க பட்டுள்ளது.
சில எளிய வழி முறைகள்:
தனிமையில் இருப்பதை தவிர்த்து நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை அதிக படுத்துங்கள்.
உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள், இது உடல் நலத்தை வளர்க்கவும் மற்றும் ஆபாச வீடியோக்களை தவிர்க்கவும் உதவும்.
கைப்பேசியில் பயன் படுத்தப்படும் உலவியை எளிதாக மற்றும் பாதுகாப்பாகவும் பயன் படுத்துங்கள்.
இரகசிய எண் போட்டு செல்போனை பாதுகாக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.
அணைவரிடமும் கைபேசியை காண்பிக்கும் அளவுக்கு வெளிப்படையாக இருங்கள்.
இணையத்தேடலின் போது இரண்டு அல்லது மூன்று முக்கிய நபர்களோ அல்லது தங்களை மதிக்கும் யாராவது ஒருவரை கூட வைத்துக்கொள்ளவும்.
இணையத்தில் என்ன தேட போகிறோம் என்பதை முன்கூட்டியே பட்டியல் இட்டு வைத்துக்கொண்டு தேடலை ஆரம்பியுங்கள். பாதியில் ஞாபகம் வந்த புதிய தலைப்புக்களை  அல்லது பட்டியலில் இல்லாத தலைப்புகளை தேட நேரம் இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.
 இணையத்தில் தேடலை ஆரம்பிப்பதற்குமுன் தங்களுடைய மடிகணிணியோ அல்லது கம்ப்யூட்டரோ மறைவில் இல்லாத படியும் தனிப்பட்ட அறைகளில் இல்லாதபடியும் ஹாலில் கொண்டு வந்து வைத்து தேடலை தொடருங்கள்.
 தேடலை ஆரம்பிக்கும் முன்னே எவ்வளவு நேரம் என்று ஒதுக்கி கொள்ளுங்கள்.
 இணையதேடலுக்கு முன் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என முன்னே தீர்மானித்து விடவும் இல்லையேல் இது நேரத்தை கொள்ளும் விடயமாக மாறிப்போகும்.
 தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்நேரத்தில் கைபேசியையோ அல்லது கணிணியையோ இயக்காதபடிக்கு அதற்கு ஒய்வளிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
தவறான சிந்தனையை மனதில் விதைக்கும் நண்பர்களை கண்டறிந்து அளவோடு பேசி பழக வேண்டும்.
குடும்ப உறவுகளில் விரிசல் வராத அளவுக்கு அன்பை அளவில்லாமல் பகிர வேண்டும்.
என்ன தேடினோம் என்பதை காட்டும் வரலாறு பக்கத்தை அழிக்க கூடாது. முடிந்தவரை தனியார் இணைய தேடல் மையங்களில் தேடுவதை தவிர்கவும்.
மறைவுகள் திரைகள்  இல்லாத இணைய தேடல் மையங்களுக்கு செல்லுங்கள்.
இறைவனை பற்றி நம்பிக்கை உள்ளவராயின் தேடலுக்குமுன் சில நொடிகள் பிரார்த்தனை செய்யலாம்.
எப்போதும் நம்மை பற்றி அவர்கள் என்ன கருத்து சொன்னார்கள் இவர்கள் என்ன சொன்னார்கள் என்று நிணைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக ஊடகங்களில் நாட்டம் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு வழிதப்பி சென்று விட கூடாது.
தொடரும் ... அடுத்த பதிவில் சந்திக்கலாம்  அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டு இருப்பது
சமுக அக்கறை.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்