விவசாயம் செழிக்குமா காவிரி வருமா?
தலைக்காவிரி தொடங்கி ஆடு தாண்டும் காவிரி வரை காவிரியானது ஓடி கடலில் கலக்கிறது. அந்நாள் முதல் இந்நாள் வரை காவிரி நீர் குறித்த சர்ச்சைகள் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றன. காவிரி நீர் தமிழகத்துக்கு ஏன் தர மறுக்கிறார்கள். அது நமது உரிமை என்று ஒருபுறம் மார்த்தட்டி பேசினாலும் அதையெல்லாம் நடுவணரசும் கர்நாடக அரசும் கண்டு கொள்வதாயில்லை. அரசுகளின் புறக்கணிப்பு ஒருபுறமிருக்க கர்நாடக மக்களும் அரக்கத்தனமாக இருந்துவருகிறார்கள் . தமிழன் என்று கேள்விப்பட்டாலே போதும் அடியும் உதையும் தான் மிஞ்சும் என்ற நிலையில் பல கார்பரேட்டுகளின் வரவால் தமிழனின் வசிப்பிடமும் நிலத்தடி நீரும் கெட்டுப்போனது. போதாத குறைக்கு மழையும் பொய்த்துவிட்டது. என்ன செய்வோம் என்று உற்று கவனித்தால் நமக்கு நன்றுபுரியும் இங்கு நடப்பவைகள் அனைத்தும் ஏதோ ஒரு விஷயத்துக்காக அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்படுகிறது என்று. தமிழ் அரசியல்வாதியாகட்டும் அல்லது தேசிய அரசியல்வாதியாகட்டும் தமிழகத்தை அவனது பார்வையில் வியாபாரச்சந்தையாகவே பார்க்கிறான். கார்பரேட்டு நிருவனங்கள் என்ன கூருகின்றனவோ அவையே இவர்களின் தெய்வ வாக்கு. இப்படி பணத்துக்காக அரசியல் ஆதாயத்துக்காக அடிபணிந்துவிடுகின்றனர். என்னதான் நம்மிடம் தமிழை காக்கும் போராளி நான்தான் என்று வேடமிட்டுக்கொண்டாலும் அவர்கள் அனைவரும் கார்ப்பரேட் நிருவனங்களின் கைக்கூலிகளாகவே வாழ்கின்றனர்.
தமிழகத்தில் இந்த கார்பரேட் நிருவனங்கள் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு கொண்டிருக்கிறது.தனது கடைச்சரக்கை இங்கே விரித்து அதன் மூலம் தான் நினைத்தை சாதித்திட செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் மறுத்தால் அவர்களுக்கு போகும் கமிஷன் எங்கே நின்றுவிடுமோ என்ற பயத்தாலேயே அவர்கள் எதுவும் செய்வதில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது உண்மையில் கார்பரேட் நிருவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. அது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
அதுபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட நடக்கும் போராட்டத்திலும் அயராமல் பாடுபட்டால் கண்டிப்பாக வெற்றி என்பது சாத்தியம் தான்.
தொடரும் ... அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாாயன் நீங்கள் படித்து கொண்டு இருப்பது சமுக அக்கறை.....
கருத்துகள்
கருத்துரையிடுக