பாஜக பாசிசம் விளக்கம்

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி,இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். 
தனது சுயலாபத்திற்காக தனக்கு பிடிக்காதவர்களை அழித்தொழிப்பது அல்லது இன அழிப்பினை செய்வது.            எகா. ஹிட்லரின் ஆட்சி

ஆதிகாரவர்கம் தான் ஆளும் மக்களுள் தனது சித்தாந்தத்திற்கு ஆகாத கொள்கைகள் மற்றும் அதை உடையவர்களை அழித்தொழிப்பதே பாசிசம்.

இந்தியாவில் பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்க அடிகோளியவர் திரு. மூஞ்சே Rss இயக்கத்தை சேர்ந்தவர்.

இவரை அடியொற்றியே இன்று பாசிசம் பாஜாகவினுள்ளும் குடிகொண்டிருக்கின்றது.


பாஜக ஏன் தமிழர்களை அடிமைபடுத்த நிணைக்கிறது?

பெரியாரால் இங்கு ஏற்படுத்தப்பட்ட பகுத்தறிவானது மிகப்பெரிய அரசியல் சித்தாந்த மாறுதல்களை அஸ்திபாரம் போட்டு கொடுத்தது. ஆனால் Rss போன்ற இயக்கம் மதரீதியிலான பிரிவினையை கொண்டுவந்து அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கி பாரதிய ஜனதா கட்சி என்று நடத்தி வருகிறது.

இதில் பெரியார் இவர்களைப்போல மக்களை பிரிக்காமல் மொழியடிப்படையில் மக்களை பிரித்து விட்டார்.

அதுதான் பெரியார் செய்த மாபெரும் செயலாக பார்க்கப்படுகிறது.

இந்த சித்தாந்தம்தான் இப்போது பாஜக வை பாசிச கட்சியாக மாற்றியிருக்கிறது.

பாசிசம் பொதுவாக தனக்கு ஒரு எதிரியை வைத்து கொள்ளும். ஹிட்லர் தனக்கு எதிராக அணிதிரண்ட யூதர்களை தனது சித்தாந்தத்திற்கு அடிபணியாத அவர்களை எதிர்தாரே அதுபோல 

பாஜகவும் தனக்கு எதிர் கொள்கையாக வைத்திருப்பது தான் திராவிட சித்தாந்தம்.

இன்று திராவிடத்தை அழிப்பதற்கென்றே மதரீதியிலாகவும் மொழிரீதியிலாகவும் பிரிவினையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது பாஜக.

தமிழ்தேசியம் கேள்வி பட்டிருப்பீர்கள் இதுவும் பாஜக நம்மை பிளவுபடுத்த செய்த சதிதான் என்றால் மிகையாகாது.

தமிழ்தேசியம் என்று புகுத்தி தமிழரை துப்பாக்கி ஏந்த வைத்து சர்வதேச அளவில் தீவிரவாதிகளாக நம்மை அடையாளப்படுத்தி முழுமையாக திராவிட சித்தாந்தத்தை மனதில் வைத்துள்ள அனைவரையும் அழித்து ஒழிப்பதே இன்றைய பாஜக செய்யும் சதிகளுள் ஒன்று.

மதவாதத்திற்கு எதிரான கருத்துதான் பெரியாரியம் மற்றும் அம்பேத்காரியம்

ஆனால் அம்பேத்கர் இயத்தினரை கூடவிட்டுவிடுவர்.பெரியாரிய கருத்துக்களை தாங்கிநிற்கும் திராவிடர்களை விடமாட்டார்கள்.

ஏனென்றால் ஒருவன் மதமாறினால் அதை சுதந்திரம் என்பர் பெரியாரிஸ்டுகள் ஆனால் மதமாறினால் அவனை குற்றவாளியாக பார்க்கின்றனர் Rss இயக்கத்தினர்.

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவருவது சித்தாந்த மோதல்தானே தவிர வேறு மோதல்களில்லை 

 பாசிசத்தின் வெளிப்பாடுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டகாரர்களை  சுட்டுதள்ளியது.

இதனால் விசனமடைந்த தமிழரின் குரலாகத்தான் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்னும் குரல் இப்போது முன்னெடுக்கப்படுகிறது.

ஆரியத்தை தமிழரிடத்தில் புகுத்த சதி:

ஆரியம் என்பது தமிழரின் மதமல்ல தமிழரின் கடவுளைபோல அல்ல. அவர்களது வழிபாடு தீ வழிபாடு . நாம் சிசுனதேவ(ஆண்குறி) வணக்கம் செய்பவர்கள் என்று சங்கராச்சாரியார் கூறி இழிவுபடுத்துகிறார்.அப்படி சிசுன தேவ வணக்கம் செய்பவரின் மார்க்கத்தை ஆரியன்தான் பிடித்துகொண்டான்.

இப்போது அதற்கு நீரூற்றி வழிபடுகிறான். இதற்கு என்ன அர்த்தம் காசுக்காக எதையும் செய்ய துணிபவர்கள் ஆரியர்கள்.

இந்த ஆரியர்கள் அப்போதிருந்தே பாசிச சிந்தனையுள்ளவர்கள். தனக்கு பிடிக்காத மதத்தை சார்ந்தவர்களை அதிகாரம் கையிலிருப்பதால் அழிப்பார்கள். 

எகா :1.சமண துறவிகளை கழுவேற்றியது 

2.குகையிடிகலகம் 

3.புத்தவிகாரங்கள் இடிப்பு 

4.இயேசுவின் சீடன் தோமாவை ஈட்டியால் குத்தி கொண்றது என்று அவர்களது பாசிசம் வளர்கிறது.

அதன் தொடர்ச்சியாகத்தான் பாபர் மசூதி இடிப்பு

தேவாலயம் தீக்கிரையாடல்

பாதிரிகள் கொலை

கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு

பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைத்தல் 

தேவாலயத்தில் படிமங்களை புதைத்து வைத்து பிறகு தேவாலயத்தை இடித்தல் போன்ற பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

நாம் ஆரிய மதத்தை சேர்ந்தவர்களல்ல நாம் தமிழர் சமயத்தை சேர்ந்தவர்கள்
ஆனால் இங்கே நம்மை இந்துவாக மதமாற்றம் செய்கிறது பாஜக
நாம் இந்து அல்ல நாம் தமிழர் சமயத்தார்கள் தமிழருக்கென்று தனியே மதமிருந்தது அது ஆரியவழிபாடு போன்றதல்ல .

நீரூற்றி வழிபடுவது தமிழர் வழிபாடு தீயிட்டு பொசுக்குவது ஆரியர் வழிபாடு.
நாம் படைத்துவிட்டு உண்ணும் வழக்கம் உடையவர்கள் ஆரியர்கள் படைத்ததை தீயில் போட்டு பொசுக்கும் வழிபாடுடையவர்கள். இப்போது சொல்லுங்கள் நாம் இந்துக்களா நமது சமயம் தமிழர்சமயம் இந்து சமயமல்ல. நாம் வேறு அவர்கள் வேறு

ஜாதியால் பிளவு படுத்தும் பாஜக

இந்துக்களின் புனித மருத்துவ நூலாக ஆர்எஸ்எஸ் ஆல் கருதப்படுகிற #சுசுருத_சம்ஹிதா நூலின் முதல் வரிகள். 

** யார் மருத்துவன் ஆக வேண்டும்? 
எவன் ஒருவன் சமஸ்கிருதம் படிக்கிறானோ அவன் தான் மருத்துவன் ஆக வேண்டும்.

** எவன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்? 
எவன் ஒருவன் தோளில் புனித நூல் அணிந்து இருக்கிறானோ அவன் தான் சமஸ்கிருதம் படிக்க  வேண்டும். 
அதையும் மீறி பிற ஜாதி மக்களும் படிக்கலாம் ,  
ஒருவேளை அப்படி படித்தாலும், 
1. சத்திரியன் வைசியன் சூத்திரன் இவன் யாரும் 
பிரமணனனுக்கு பாடம் எடுக்க கூடாது. 

2. வைசியன் சூத்திரன் இவன் யாரும் பிரமணனனுக்கும் சத்திரியனுக்கும்  பாடம் எடுக்க கூடாது.

3.சூத்திரன் எவனும் பிரமணனனுக்கும் சத்திரியனுக்கும்  வைசியனுக்கும் பாடம் எடுக்க கூடாது. 
இதை நடைமுறை படுத்த கொண்டுவந்தது தான் நீட் தேர்வு

குறிப்பு

இந்த இதழின் நிரந்தர வாசகரே

பாஜகவை ஆதரிக்காதீர் ஏனெனில் நம் தமிழ் சித்தாந்தம் தமிழ் வழிபாடு தமிழர் தெய்வங்களைவிடுத்து ஆரிய கலாச்சாரம் ஆரிய வழிபாடு இவையே இங்கு புகுத்தப்படுகின்றன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்