சீரழிந்த சிறுமி
சில நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்ற போது ஒரு கர்ப்பிணி பெண்ணை பார்க்க நேர்ந்தது.
அப்போது அவருடைய தாயாரிடம் கணவன் எங்கே என வினவியபோது அவர் என்னிடம் சொன்ன வேதனையான சம்பவங்களை இங்கே அனேகருக்கு பயனாக இருக்குமென்று நம்பி குறிப்பிடுகிறேன்.
சில சங்கடங்கள் ஏற்படுமே என்று பெயர்களை தவிற்திருக்கிறேன்.
"எனது மகள் பத்தாம் வகுப்பு படிச்சிருக்கா இப்போ படிச்சி முடிச்சிட்டு வீட்டில தான் இருக்கா.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி பக்கத்து ஊர்ல இருக்க 21வயது மதிக்க தக்க ஒருபையன் அவளை காதலிப்பதாய்கூறி அவளை அடிகடி சந்திச்சிருக்கான். எங்களுக்கு இது கொஞ்சமும் தெரியாது எனது மகள் வெறும் 18வயதே நிரம்பியவ. எங்க வீட்டுல எல்லா வேலையும் இழுத்து போட்டு வேலை செய்வா.
படிக்க வைக்க வசதி இல்லாததால எங்க வீட்டிலயே இருக்க வச்சுட்டோம். அவளுக்கும் படிக்க விருப்பம் இல்லாததாலும் நாங்க அவளை படிக்க வைக்கல
ஆனால் வரவர அவளோட செயல் பாடுகள் எங்களுக்கு புரியல.
வீட்டுல வேலை செய்யல.
மாதவிடாய் நேரத்துல எல்லா பொண்ணும் காலையிலேயே குளிச்சிடுவாங்க ஆனா இவ அப்படி எதுவுமே இல்லாதமாறி இருந்ததும் எங்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கிடுச்சி.
ஆனாலும் என்னோட பொண்ணு மேல உள்ள அக்கறைல நான் இதெல்லாம் அவகிட்ட கேட்கல. Date தள்ளிகூட வரும்னு நெனச்சு அப்படியே விட்டுடேன்.
திடிர்னு ஒருநாள் மயக்கம் போட்டு விழுந்துட்டா.
ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகட்டுமான்னு கேட்டதுக்கு வேண்டாம்னு பிடிவாதமா மறுத்துட்டா.
இராத்திரிலாம் போர்வையை போத்திக்கிட்டு போன்ல பேச ஆரம்பிச்சா.
எங்களுக்கு ஒன்னுமே புரியல.
ஆட்டுக்கு பில் அறுக்க வயலுக்கு தினமும் போறவ போகமாட்டேன்னு சொல்லிட்டா.
வரவர பொண்ணோட நடவடிக்கை சரியில்லைனு தோனுச்சு இருந்தாலும் ஒரு நம்பிக்கை என் வளர்ப்பு தப்பாகாது என்று அழுத்தமா நம்புனேன்.
ஆனால் என்னை இப்படி தலைகுனியவப்பானு நெனச்சுகூட பாக்கல" என்று கூறிய அந்த பெண்மணி சிறிது நேரம் கோவென்று அழுதார்.
அழாதிங்கமா என்று நான் கூற கண்களை துடைத்து கொண்டவர்
மேலும் கூற ஆரம்பித்தார்.
"தப்பா நினச்சுக்காதிங்க தம்பி. உங்கள என் மகனமாறி நெனச்சுதான் இதெல்லாம் சொல்லுறன். என் பொண்ணு விடாம வாந்தி எடுத்து மயக்கம் போட்டுட்டா. 108 ஆம்புலன்ஸ்லதான் ஏத்திகிட்டு போனேன். ஆஸ்பத்திரி வந்ததும் என் பொண்ணு இறங்க மறுத்துட்டா எங்களுக்கு ஒன்னுமே புரியல. கண்ணத்துலயே பலார்னு ஒன்னு வச்சு அழைச்சுட்டு போனோம் . டாக்டரும் ஊசிபோட்டார் மாத்திரை மருந்து எழுதி கொடுத்து திருப்பி அனுப்பிட்டாரு.
மறுநாளும் வாந்தி எடுக்க ஆரம்பிச்சா நாங்க லோக்கல் மெடிக்கல் ஷாப்லயே மருந்து வாங்கி கொடுத்தோம்.
பக்கத்து வீட்டு அனிதா இது ஏதோ புது நோய்மாறி தெரியுதுன்னு சொல்லி பயமுறுத்துனா. அதனால அவள மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுகிட்டு போனோம்.
ஆனா டாக்டர் ஒன்னுமில்லனு மறுபடியும் சொல்லிட்டார்.
ஆனா இந்த முறை அட்மிஷன் போட்டுட்டாங்க.
வார்டுல வந்த நர்ஸ் என் பொண்ண பாத்து அந்த வார்த்தையை கேக்குற வரைக்கும் என் கண் திறக்கல" என்றார்.
'அப்படி என்னமா கேட்டாங்க' என்றேன்.
"நீ என்ன மசக்கையாமா சும்மா வாந்தி எடுத்துகிட்டே இருக்க எனக்கு என்னமோ சந்தேகமா இருக்குன்னு என் பொண்ணுகிட்ட கேட்டாங்க. உடனே நான் கடுப்பாகி அந்த அம்மாவை கடுமையா திட்டுனேன். அந்த நர்சும் சும்மாதாம்மா கேட்டேன்னு சொன்னாங்க.
ஆனா அதுகப்பறம் தான் எனக்கு தோனுச்சு மூனுமாசமா என் பொண்ணு தலைகுளிச்சு நான் பாக்கவே இல்லை.
அதனால நானே நர்சுகிட்டபோய் சிஸ்டர் எனக்கும் நீங்க சொன்னத்துக்கப்பறம் தான் சந்தேகமா இருக்குன்னு சொன்னேன். சரி சரின்னு சொன்னவங்க ஒரு சீட்டுல ஏதோ எழுதி கொடுத்து வெளியில போய் மெடிகல்ல வாங்கிட்டுவான்னு சொன்னாங்க.
நானும் வாங்கி கொடுத்தேன். அப்பறம் அவங்களே test எடுக்க என் பொண்ண கூப்பிட்டாங்க அவளும் போனா அதுக்கபறம் தான் என்னோட சந்தேகம் உறுதியாச்சு. நர்சு என்கிட்ட வந்து ஏம்மா ஓம்பொண்ணு ரொம்ப உத்தமி மாறி என்கிட்ட பேசுன ரிசல்டு அவ முழுகாம இருக்கானு சொல்லுதும்மான்னு காரிதுப்பாத குறையா திட்டுனாங்க.
நான் என் வீட்டுகாரர்ட போய் சொன்னேன் அவர் கோபப்பட்டு இவளை இழுத்துபோட்டு ஆஸ்பத்திரினு கூட பாக்காம அடிச்சாரு. என் பொண்ணு அப்பதான் உண்மையை சொன்னா.
என் பொண்ணு பில் அறுக்க வயலுக்கு போனபோது எப்போதும் சந்தித்து பேசும் அந்த பையனும் பொண்ணும் தப்பா நடந்துடாங்க.
அதனால குழந்தை உருவாயிடுச்சின்னு. தெரிஞ்சுகிட்டுதான் இராத்திரி முழுக்க அவனோட போன்ல பேசி அவங்க வீட்டுல சொல்ல சொல்லிருக்கா. ஆனா அவன் அதுக்கு பயந்துகிட்டு நம்ம ரென்டு பேரும் ஊரைவிட்டு ஓடிடுவோம்னு சொல்லியிருக்கான் ஆனால் இவ அதுக்கும் ஒத்துக்கலயாம்.
அப்படியே மறச்சுட்டா.
உடனே அந்த நர்சம்மா போலிஸ்கு தகவல் சொல்லிட்டாங்க. போலிஸ் ஆஸ்பத்திரிக்கே வந்து விசாரிச்சாங்க.
பிறகு அந்த பையன் வீட்டுலயும் போய் விசாரிச்சு இருக்காங்க. அவங்க வீட்டுல யாருமே ஒத்துக்கல.
சரி பையன வச்சு திருமணம் பண்ணலாம்னா இவளுக்கு வயது 18தான் ஆவுது அதனால திருமணம் செய்ய முடியாதுன்னு போலிஸ்காரங்க சொல்லிட்டாங்க.
அதுக்கப்பறம் எங்கவீட்டுலயே தான் வச்சுறுக்கோம்.
பையன் வீட்ல யாருமே ஒத்துழைக்கல அவங்க வேற கல்யாணம் பண்ண போறாங்கலாம்"னு சொன்னவர் அருகில் இருந்த தனது அம்மாவை கட்டிபிடித்துகொண்டு அழுதார்.
சரிமா நடந்தது நடந்து போச்சு அழாதீங்கன்னு ஆறுதல் கூறினேன்.
இருந்தாலும் நாலு வார்த்தையாவது அந்த பொண்ணை கேட்கனும்னு நெனச்சேன்.
ஏம்மா எவனாவது வந்து காதலிக்குறேன்...வாழ்ந்தா உன்னோட தான்னு உதார் விட்டா உடனே நம்பிடுவியாமா.
சுயமா அறிவு இல்ல.
உனக்கு எங்க புத்தி போச்சு என்று திட்டினேன். ஆனால் அந்த பெண்ணோ இதுபோல் அனேகர் பேசி பேசி திட்டியதால் இதை பெரிதாக கண்டுகொள்ள வில்லை.
தலையை மட்டும் குனிந்து கொண்டார்.
அன்று அவருக்கு பிரசவ தேதி. குறித்த தேதிக்கு முன்னமே வலி வந்துவிட்டதாம். இதையெல்லாம் கேட்டுவிட்டு வந்துவிட்டேன்.
மறுநாள் அதே ஹாஸ்பிடலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று பேசிய அந்த அம்மாவை பார்க்கவேண்டும் என்ற ஆவலில் பிரசவ வார்டு வாசலில் வந்து நின்றேன்.
அந்தம்மா அவசர அவசரமா வேஷ்டியை கிளிச்சுகிட்டிருந்தாங்க.
என்னமான்னு கேட்டேன் இன்னொரு குடும்பத்தை கெடுக்க பையன் பொறந்துருக்கானு சோகமா சொல்லிட்டு கிளிச்ச துணியை எடுத்துக்கிட்டு பிரசவ அறைக்கு போய்டாங்க.
ஒரு நிமிஷம் நின்னு யோசிச்சேன் அதுபோன்ற பையனா நான் இருக்க கூடாதுன்னு.
நான் முடிவு செஞ்சிட்டேன் நீங்க?
நீங்கள் படித்து கொண்டிருப்பது உங்கள் சமூக அக்கறை இணைய இதழ்
நான் உங்கள் சுந்தரநாயன்.
தொடர்ந்து இணைந்திருங்கள் சமூக அக்கறையுடன்...
கருத்துகள்
கருத்துரையிடுக