காணக ரீங்கார புலமை
இன்னோர் அடியெடுகையிலே
அப்பளமாய் சருகும் நொருங்கும் சத்தம் கேட்டே
இன்னோர் அடியெடுக்கையிலே காலைபனி கைகோர்த்து இலைவழியே ஒழுகுங்சத்தம் கேட்டே
இன்னோர் அடியெடுக்கையிலே சில்லென்ற வாடை காற்று வாட்டுகின்ற வேளையிலே வாயிலே உணவோடு கூட்டின்மேலே சிட்டு பார்த்து குஞ்செல்லாம் வாய்பிளந்து ஆசையோடு அம்மா தருவாளோ உணவென ஏங்கி ஓங்கி ஒலிக்கும் சலனம் கேட்டே
இன்னோர் அடியெடுக்கையிலே
இன்பமான அருவியொன்று தூரத்தில் விழும் ஓசை கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே
எச்சிலே ஊரும் வண்ணம் கிளியொன்று கடித்திட்ட மாங்கனி அமுதாய் சொட்டுகையில் கீழே அணில் கடித்த பலாசுளையிலே அதுபட்டு வழிந்தொரு பூவினுள் விழுந்ததே
என்னே அச்சுவை சுவைத்துவிட்டு நகருகையிலே குரங்கொன்று தென்னையிலே 'பொத்'தென்று போட்டதுவே குரங்கது வருவதற்குள்ளே குடித்துவிட்டேன் இளநீரை
திருப்தியாய் காணகமே அங்கு விட்டுவந்தேன் என் மனமே
கருத்துகள்
கருத்துரையிடுக