எனக்கானவளே நீ எப்படி இருப்பாயோ?
கபடம்
இல்லா கவின் புறா
கவர்ந்திழுக்கும்
கவிதை
நிலா
எண்ணமெலாம் இனிக்கும்
பலா
இதயமெலாம் உந்தன் கனா
நீ
எப்படி இருப்பாயோ
நீ
எனக்கென பிறந்தாயோ
நீ
என்னை புரிவாயோ
என்
உயிருடன் கலப்பாயோ
என்
கோபம் தணிப்பாயோ
என்
சோகம் தீர்ப்பாயோ
என்
நேசம் பகிர்வாயோ
என்னை
முழுசா அறிவாயோ
காதல் என்றால் தெரியாது
பாசம் என்றால் அதும் புரியாது
உறவு என்றாலும் அறியாது
எதற்கும் அடிமை கிடையாது
உங்கள் சுந்தரநாயன் படைப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக