அடியவன் ஆனேன் series 9
என்னை மட்டுபடுத்தி ஆள்பவனுக்கு
சிறியவன் ஆனேன் பணத்திலல்ல
தலையில் இருந்து பிறவாததாலே
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை
இதை ஏற்றுக்கொள்வாரும் இல்லை
பிறந்தவன் எவரும் சாதிக்குள்ளே
அனைவரும் இங்கு மலத்துக்குள்ளே
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
ஆரிய சிந்தை அனாரியன் அழிக்குது
வேத சிந்தை சாதியை வளர்க்குது
மனித மூளை இதையும் நம்புது
இளைத்தவர்களை ஏமாற்றி பிழைக்குது.
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
ஆடு மேய்த்து வந்தவன்
இன்று எங்களை ஆள்கிறானே
கேடுக்கெட்ட ஜென்மங்கள் இன்றிதை ஏற்று கொண்டனரே
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
வந்தேரி பிராமண கூட்டமே - இன்று தமிழனை வந்தேறி என்குதே
நாதாரி ஆரிய கூட்டமே-மக்களை
நடைபிணமாக்கி வச்சிட்டே
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
சிந்தனை குருடாய் மாற்றியே
சிறகுகள் அக்னியில் வாட்டியே
மெத்த படிபெலாம் மறுத்துமே
பித்தம் பிடிக்க வைத்தனர்.
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
மகிழ்ச்சி கொள்ள மனம் மறுக்குதே
மாற்றான் ஆள்வதை தினம் சகிக்குதே
சமமிலை எனும் தொணி கேட்குதே
உடம்பில் சத்தில்லாமல் தவிக்குதே
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
புதுவாழ் வென்று மலருமோ
புதுஜீவ னென்று கிடைக்குமோ
சமதர்ம மென்று தழைக்குமோ
சாதிவெறி தான் ஒழி...யுமோ...
என்ன செய்வேனோ எம்பெருமானே
ஏதூம் செய்கிலேனே
என்ன செய்வேனோ எம்பெருமானே
எதாவது செய்யுமே
இது உங்கள் சுந்தரநாயனின் வேதனை துளி
அடுத்தபதிவில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்.
நீங்கள் படித்துக்கொண்டு இருப்பது உங்கள் சமூக அக்கறை இணைய இதழ்
உங்கள் மேலான கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் நன்றி
பதிலளிநீக்கு