அச்சுருத்தும் கொரொனா அயராமல் உழைக்கும் 108 அடிமாடுகள்.


கொரானாவை கண்டு பயப்படாதோர் எவருமே இல்லை எனலாம். ஊரே பயப்படும் வேளையில் பயப்படாமல் இன்று வேலை செய்பவர்கள் யாரென்று தெரியுமா?
அவர்கள் தியாகத்துக்கே பேர்போன 108 அவசர மருத்துவ உதவியாளரும், அவரோடு பணிபுரியும் 108வாகன ஓட்டுனர்களும் தான்.
அவசர ஊர்தியை போக்குவரத்து நெரிசலில் ஓட்டி மருத்துவமனைக்கு சீக்கிரமாக செல்லும் ஒட்டுநர்களும் உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றி முதலுதவி செய்யும் அவசர மருத்துவ உதவியாளர்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்து உங்களின் உயிரை காக்க போராடி வருகின்றனர். உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
உங்கள் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
உயிரை பணயம் வைத்து அதிவேகம் ஓட்டிச்சென்று காப்பாற்றும் அவர்கள் செய்வது பணி பாதுகாப்பு இல்லாத வேலை. பணி நிரந்தரம் இல்லா வேலை. பலரும் இதனை யோசிப்பதில்லை.
இவர்கள் நமக்காக உழைக்காவிடில் இங்கு எத்தனை உயிர்களை இந்தியா இழக்க வேண்டிவரும் என்பதை யாருமே சிந்திப்பதில்லை.


மழையிலும் குளிரிலும் அவசர ஊர்தியே இவர்களது அடைக்கலம்.
வெயிலிலும் வாகனத்துக்குள்ளேயே வேகும் இந்த புள்ளபூச்சிகள் குறித்து பேசுவார் எவருமில்லை என்பதே இங்கு நிதர்சனம்.

ஆனால் இந்த அவசர ஊர்தி ஊழியர்களை மட்டும் இந்த அரசாங்கம் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கும் ஒரு மாதகால சிறப்பு ஊதியம் குறித்து மறந்து விட்டது.
பாருங்கள் உண்மையிலேயே பாவம் இல்லையா.
உயர்நீதிமன்ற தீர்பினால் இவர்கள் வேலை நிருத்தமும் செய்து இவர்கள் பிரட்சனைகளை கூற முடியாது.
வாயையும் கட்டிவிட்டு வயலிலும் இறக்கிவிட்டு உழவைக்கப்பட்டுள்ள "நொண்டி காளைகள்" தான் இந்த 108 ஊழியர்கள்.


கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் பரவாமல் தடுப்பதற்கு அரசியல்வாதிகள் வேண்டுமானால் தொலைக்காட்சி செய்திகளிலும் வாணொலிகளிலும் சுவரொட்டிகளிலும் விளம்பரப்படுத்தப்படலாம்.
எவருமே சட்டை செய்யாமல் இருந்தாலும் உயிர் காப்பாற்றும் செயலை ஒருபோதும் இவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
எத்தனை பேரை தொட்டு தூக்கினார்கள். எத்தனை வேளைகள் சாப்பிடாமல் பணியாற்றி இருக்கிறார்கள்.
மருத்துவர்கள் கூட ஷிஃப்ட் முறையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் இவர்களின் நிலையை சொல்லி மாளாது.
காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணி வரை என்று அலுவல் நேரமிருந்தாலும் இவர்கள் பன்னிரண்டு மணிநேரத்தையும் தாண்டி பல மணி நேரம் பணி செய்யும் கட்டாயம் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக மாலை ஏழு ஐம்பது மணிக்கு பிரசவ அவசரம் குறித்து அழைப்பு வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அவரை பணியில் இருந்து மாற்றிவிடுவதற்கு வரும் ஊழியர்கள் எட்டு மணிக்கு வருவார்கள் என வைத்துகொள்வோம். அப்படி பட்ட அவசரகாலத்தில் பகல் பணியை மாற்றாமல் கூட கூடுதல் மணிநேரங்கள் உழைக்கிறார்கள். இவர்களின் உழைப்புக்கு வரும் பலன் வாயிலே வடைதான். சரியான சம்பளம் இல்லை.
சமவேலைக்கு சம ஊதியம் இல்லை. குறைந்த சம்பளத்துக்கு அடிமாடாய் உழைக்கும் இந்த ஊழியர்களுக்கு நான் வழங்கும் பெயர் "108அடிமாட்டு ஊழியர்கள்".
இந்த ஜீவன்களை யார் காப்பாற்ற போகிறார்களோ? என்று யோசிக்கும் போது
ஆச்சர்யமும் கேள்விக்குறியும் கலந்த கலவையாக உள்ளது.


நீங்கள் நினைத்தால் இந்த புள்ள பூச்சிகளும் வாய்கட்டப்பட்ட நொண்டி காளைகளுமான 108அடிமாடுகளுக்கு பணிபாதுகாப்பு வழங்க நீங்கள் வீட்டில் இருந்தே கொடுக்கும் கோரிக்கை மனுவால் இந்த அடிமாடுகளின் வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்.

முதலமைச்சரின் சிறப்பு குழுவில் (CM SPECIAL CELL) நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தகுந்த முடிவுகளை அரசு வழங்கும். அந்த செய்தி உங்கள் இமெயிலுக்கே வரும். அரசு அதிகாரிகளே இதற்கான பதில்களை உங்களுக்கு தெரிவிப்பார்கள். கோரிக்கையை இங்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் கோரிக்கையை அனுப்ப முடியும்.
அதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.


இதே போல மத்திய அரசாங்கத்தின் மூலமாக இந்த கோரிக்கையை வழங்க public grievances portal இல் இதனை குறித்து கோரிக்கையை அனுப்பலாம் ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் .இதனை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி அனுப்ப முடியும்.

இதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
https://pgportal.gov.in/Signin

மறந்துவிடாதீர்கள் இந்த புள்ளபூச்சிகளுக்கு உங்களால் ஒரு நல்லவாழ்வு கிட்டடுமே.

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு கோரிக்கையும் இந்த அடிமாடுகளை காக்கும் ஆயுதமாகும்.
வெற்றி மக்கள் கையில் தான் இருக்கிறது.
இவர்கள் வாய் கட்டப்பட்டிருந்தால் என்ன நம் வாய் திறந்துதானே இருக்கிறது. நமது கைகள் கட்டப்படாமல் தானே இருக்கிறது. ஒரே ஒரு கோரிக்கைதானே உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலிலேயே இதனை செய்ய முடியும் .ஏன் தாமதம் உடனே இவர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
கோரிக்கையை அனுப்பிவிட்டு கோரிக்கை எண்ணை கருத்துப் (கமண்ட்) பெட்டியில் பதிவிடுங்கள்.


நீங்கள் படித்துக்கொண்டு இருப்பது இணைய இதழ் சமூக அக்கறை
எப்போதும் சமூக அக்கறையுடன்
உங்கள் சுந்தரநாயன்.
நன்றிகள் பல...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்