தமிழர்கள் வந்தேறிகளே! Series 11

தமிழர் யார்?

தமிழர் யாரென்ற கேள்விக்கு வரலாறை புரட்டுதல் அவசியமாகும் ஆகவே என்னோடு சேர்ந்து வரலாறை புரிந்து கொள்ள முயலுவோம். இன்றைய சூழலில் தமிழர் எனும் சொல்லே உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் சொல்லாக மலர இறையன் நம் முன் சென்று வெட்டி வீழ்ந்த மரமாகிய நம்மை அது வெட்டப்பட்ட இடத்தில் திரும்ப ஒட்ட வைக்கிறார் என்றே நாம் வைத்துக்கொள்ள இயலும். தனித்தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா என ஒரு கேள்வியை கேட்டு தமிழரை நாம் அடையாளங்காண வேண்டிய நிலையில் இப்போது தள்ளப்பட்டு விட்டோம். ஏனெனில் தமிழர் எனும் போது தமிழர் அல்லாதோரும் தன்னை தமிழரெனவே நினைத்து கொண்டிருக்கின்றனர். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட போவதில்லை. ஆனால் ஆட்டுதோல் போர்த்திய ஓனாய் போல என்ற பழமொழிக்கேற்ப இன்றைய சூழலில் தமிழின விரோதிகள் தங்களை தமிழரென அடையாளப்படுத்தி கொண்டதோடு தமிழனுக்காக போராடுகிறேன் குரல் கொடுக்கிறேன் என்று கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து பின்னர் சுயரூபத்தை காட்டிய கதையெல்லாம் நம் தமிழ் நாட்டில் உளது என்று நமது வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்துகிறது என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் உண்மையிலேயே தமிழினவிரோதியின் கூட்டத்தில் பிறந்து வளர்ந்து அரசியலில் சதிமுறையில் உள்நுழைந்து சுய ஆதாயத்துக்காக தமிழ் வரலாறை திரிக்கும் அரசியல்வாதிகளால் அவதிபட்ட கதையெல்லாம் மாறி காமராசருக்கு பிறகு இரண்டு தமிழர்கள் தற்போது தமிழினத்தை ஆள்கிறார்கள் எனும்போது மிகவும் பெறுமை அடைகிறேன். அதே சமயம் அவர்கள் தமிழ் விரோதிகளின் கைகூலிகளானதை நினைத்து கவலையிலும் இருக்கிறேன். தமிழர்களை நாம் எந்த இலக்கணம் கொண்டு பிரிக்கலாம் என்று யோசிக்கும் போது தமிழ்தேசிய பேரியக்கம் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் பேரவை போன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் வைக்கும் இலக்கணம் எமக்கு அந்தளவுக்கு திருப்திகரமானதாக இல்லை. ஏனெனில் அவர்கள் சாதியை கொண்டு தமிழர்களை கண்டுபிடிக்க முயன்று மறுபடியும் மனுஷ்மிருதியின் சாக்கடைக்கொண்டு தமிழர்களை அடையாளப்படுத்தும் முயற்சியில் பிராமணியத்தை உள்நுழைக்கிறார்களோ என அச்சப்பட வைக்கிறது. தமிழர் எனும் பதம் சமஸ்கிருதத்தில் திராவிடர் என மறுவியதாக ஈராஸ் அடிகளார் கூறுகிறார். அவரது இலக்கணத்தின் படி திராவிடர்கள் என்பவர்கள் தமிழர்களே ஆக திராவிடராக அடையாளப்படுத்துவதே சாலச்சிறந்ததா அல்லது தமிழரெனவே சொல்லுவதா என்பதில் குழப்பம் உள்ளது. இந்திய வரலாற்றில் ஆரியர்கள் என்பவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக உள்நுழைந்தவர்கள். அவர்கள் தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டு தான் தங்களது சந்ததியை பெருக்கியதாக ஆராய்ச்சி கூறுகிறது. ஆகவே இவர்களையும் கருத்தில் கொண்டு இந்தியரை நாம் கீழ்கண்டவாறு பிரிக்கிறோம்.

1.இந்தியர்கள்

2.ஆரியர்கள்

3.இந்தோஆரியர்கள்

இவர்களை நாம் நமக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால் இந்தியர்கள் ஆதியிலிருந்து வந்த தமிழ் வம்சாவழியினர் என்றும்,

ஆரியர்களை வெளிதேசங்களிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் என்றும்,

அவர்களால் நடந்த இனக்கலப்பால் உருவான இனக்குழுக்களை அதாவது ஷத்திரிய வைஷியர்களை இந்தோ ஆரியர்களெனவும் வகையறியலாம்.

தமிழ்தேசியவாதிகளும், தமிழ் ஆர்வலர்களிலில் சிலரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனதில்லாதவர்களாய் இருக்க காரணம் என்னவெனில் இவர்களுக்கு தெலுங்கர்களையோ, கன்னடர்களையோ, மலையாளத்தவர்களையோ அனுசரிக்கும் மனப்பான்மை அற்று காணப்படுவதாலேயே இந்த புரிதல் இல்லாமையால் குழம்பிபோய் பிரிவினைவாதத்தை விதைக்கிறார்கள்.

ஆக போலி தமிழ்தேசியவாதிகளையும் தமிழ்ச்சிந்தனையாளர் பேரவையென்றும் தமிழ்நாடு தனிநாடு கோரிக்கை வைப்பவர்களையும் யாம் பிரிவினைவாத சக்திகளின் பட்டியலுக்குள்ளேயே வைக்க விரும்புகிறேன். கொஞ்சம் எண்ணிக்கையில் வளருவோம் பின்னர் தனிநாடு கோரிக்கையை பார்த்து கொள்ளலாம். 

இவர்கள் தமிழரை அடையாளப்படுத்த எடுத்த முயற்சிகள் சாதிசாக்கடையை குழப்பிவிட்டு சகதியிலே மீன் பிடிக்க போன கதையாய் மாறிவிட்டது கண்டு வருத்தமளிக்கிறது.

இவர்களைபோல தமிழரை பிரித்தல் தமிழரின் இன்றைய நிலமையிலிருந்து இன்னும் கீழ்நிலை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

சரி எவ்வாறு தமிழர்களை அடையாளப்படுத்துவது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் என்றால் பிரிவினைவாதமற்ற முறையில் அடையாளப்படுத்துவதே சாலச்சிறந்தது எனலாம். தமிழர்களை கீழ்கண்டவாறு பிரிக்க முயலுகிறேன்.
அதாவது
1. தமிழ்பேசும் தமிழர்
2.தமிழ்குடும்ப மொழி பேசும் தமிழர்
3.ஆரிய மொழிகுடும்ப மொழி பேசும் தமிழர்

இந்தியரை கீழ்க்கண்டவாறு பிரிக்க முயலுகிறேன்.
அதாவது
1. தமிழ் பேசும் இந்தியர்
2.திராவிட மொழிகுடும்ப மொழி பேசும் இந்தியர்
3.ஆரிய மொழிகுடும்ப மொழி பேசும் இந்தியர்
*ஆரிய மொழி பேசும் இந்தியர் எவருமில்லாத காரணத்தாலும் அது அழிந்த மொழியானதாலும் அதனை பட்டியலில் சேர்க்க முடியவில்லை. அதனை பேசுவோர் இல்லாவிட்டாலும் பிராமணர்களை ஆரியர் எனும் இனத்துக்குள் அடைக்க முடியுமேயன்றி இந்தியராக கருதமுடியாது. இருந்தாலும் சர்வில்லியம் ஜோன்ஸ்க்கு பிறகு இந்நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இருமொழிகுடும்பத்தை சேர்ந்த ஆரியர்கள் இருப்பதை யாரும் மறுக்க இயலாது.
ஆக தமிழர்களே இந்தியாவில் நிறைந்து தனிபெறும்பான்மையுடன் இறுக்கின்றனர். 90%இருக்கும் தமிழர் மொழிகுடும்ப வகையறாக்கள் 10%இருக்கும் ஆரிய மற்றும் இந்தோ ஆரியர்களிடம் அடிமையாகவும் அவர்கள் சொல்வதையே திரும்ப திரும்ப சொல்லும் கிளிபிள்ளைபோல பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றனர். இதனை நாம் கஷ்டப்பட்டு பிரிக்கவோ அல்லது மிகவும் அதிக முயற்சியும் செய்தோ கண்டுபிடிக்க அவசியமில்லாத வகையிலேயே தமிழர்களை வகைபடுத்தி வைத்துள்ளனர். இந்தியாவில் சலுகை வழங்குவதற்காக பிரிக்கப்பட்ட நாலுவகை பிரிவுகள் முறையே
1. OC,
2. BC, 
3. SC, 
4. ST.
 இவைகள் தமிழர்களை அடயாளங்காண மிகவும் பேருதவியாக இருக்கும். மேலும் இந்தியரை அடையாளங்காணவும் பயன்படுத்தி கொள்ளலாம். பிராமணர் OC ஆகவும், ஷத்ரியர் மற்றும் வைஷியர் BC ஆகவும்,  சூத்திரர்கள் இங்கு SC ஆகவும், மற்றும் பஞ்சமர்கள் ST ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தியர் அல்லது தமிழர் எனும்போது SC & ST மக்கள் மாத்திரம் அல்லர். தமிழகத்தில் இருக்கும் பல தமிழ் சாதிகள் இன்று BC ஆகவும் அதையே சற்று உடைத்து MBC ஆகவும் மாற்றி வைத்துள்ளனர். இது எதற்காக தமிழர்கள் எவருமே எப்போதும் ஒன்று சேர்ந்துவிட கூடாது என்பதற்காக தான் இப்படி பிரிக்கப்பட்டுள்ளது. விஷேசமாக சொல்லப்போனால் தமிழர்களின் சாதியான வெள்ளாளர் அதாவது வேளாண்மை குடியானது வைஷியரோடு சேர்க்கப்பட்டது. படையாட்சி என்ற குடியானது ஷத்திரியரோடு சேர்க்கப்பட்ட கொடுமையெல்லாம் நம் நாட்டில் அரங்கேறியதற்கு காரணம் தமிழர்களாகிய ஆதிகுடிகள் திரும்பவும் அரசியல் பலம் மற்றும் ஒற்றுமையாக இருக்ககூடாது என்பதற்காகத்தான்.BC, MBC, SC மற்றும் ST ஆகிய பிரிவுகளில் இருக்கும் அத்துனை மக்களும் ஆதியில் தமிழ்சமுதாயத்தினரே. ஒருவேளை தமிழனாக இருக்க மறுபடியும் விரும்பினால் பிராமணிய சனாதனத்துக்குள் சென்றவர்களையும் வருங்காலம் அந்த கொள்கைகளை விட்டு விட்டபின் சேர்த்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த பதிவில் சந்திக்கலாம் 
அதுவரை உங்களிடம் இருந்து
 விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்
 நீங்கள் படித்துக்கொண்டு இருப்பது
 உங்கள் சமூக அக்கறை 
நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்