ஆதிமனிதன் தமிழனா? மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி.series 13

ஆதி மனிதன் தமிழனா?

மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி



ஆதி மனிதன் தமிழனா என்ற கேள்விக்கு என்ன பதில் கொடுக்கலாம் என எந்த தமிழறிஞர்களிடம் கேட்டாலும் பொட்டில் அடித்தாற்போல ஆம் என்றே கூறுவர்.

இதனை மறுப்பதற்கென்றே பிறந்த சில வஞ்சகர் மட்டும் இல்லை இல்லை தமிழனே ஒரு வந்தேறி என கூறுவர்.

ஏனெனில் ஒருவன் ஒரு ஊரில் தன்னை பலத்தவனாக காண்பிக்க இது எனது ஊர் என்றும், இது எம் பிறந்தகம் என்றும், சொந்த ஊர் என்றும், தாய் மண் எனவும் பல வார்த்தைகளை பயன்படுத்த முயலுவர்.

இதையே அந்த ஊரில் பிறவாதவனும் அதே வழிமுறையை பின்பற்றி தன்னை அந்த ஊர் மக்களோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறான்.

இதனை ஏன் செய்கிறான் அவன் தான் அந்த ஊரில் பிறவாதவனாயிற்றே அவனுக்கு அது தாய்மண்ணும் இல்லை அப்படி இருந்தும் ஏன் அவ்வாறு கூறுகிறார்.

அவருக்கு அதில் ஆதாயம் இல்லாமல் இல்லை .

அவர் தன்னை அந்த ஊரில் ஒருவனாக இணைத்துக்கொள்வதன் மூலம் அவர் அந்த ஊர் மக்களோடு மக்களாய் மறைந்து வாழ முடியும். அதோடு அவருடைய பணிபுரியும் இடத்திலும், அவர் வசிக்கும் இடத்திலும் அவருக்கு ஏற்படும் பாதுகாப்பு உணர்வு காரணமாக அவர் தெரிந்தே பொய் சொல்கிறார். இது இயல்பான ஒன்றாக இருந்தாலும் தனக்கு அடைக்கலம் கொடுத்த மக்களையே நீங்கள் தான் வந்து ஏறியவர்கள் நாங்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்றும் சொல்வது தவறான ஒன்றாகும்.


இப்படி கீழ்தரமான நன்றி கெட்ட மக்களால் தான் ஒட்டுமொத்தமாக வந்து ஏறிய அத்துணை குடிகளுக்கும் இழுக்கு ஏற்படுகிறது.

ஆதிமனிதனை தமிழன் என ஒரு கூட்ட அறிஞர்கள் மெய்பிக்க முயற்சிக்கும் போது அதே சமயத்தில் இதனை மறுக்கும் ஒருக் கூட்டமும் இந்த நாட்டில் உள்ளது.

மறுப்பதற்கு வழிதெரியாதவர்கள் இம்மண்ணின் பூர்வீகக்குடிகளையே வந்தேறிகள் என அழைப்பதும் உண்மையில் வந்து ஏறியவர்கள் நாங்களே இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என கூறி கலவரத்தை தூண்டும் ஒரு இரத்தவெறி பிடித்த கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.


ஆதிமனிதன் தமிழன் இல்லை அவன் ஒரு ஆப்பிரிக்கன் என வேண்டுமென்றே திட்டமிட்டு சொல்லிவருகிறார்கள்.

தமிழகத்திலே தொல்குடிகள் வாழ்ந்ததிற்கு பல ஆதாரங்கள் உள்ளன. மேலும் பல சான்றுகள் தமிழுக்கு உண்டு.

கல்றோன்றி மண்றோன்டா

காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்னும் பழமொழி குறித்து பாவாணர் இப்படி கீழ்கண்டவாறு கூறுவார்.

அதாவது கல் தோன்றி எனும்போது அது குறிஞ்சி நிலத்தை குறிக்கிறது. குறிஞ்சி நிலமானது மலையும் மலைசார்ந்த பகுதியாகும். மண் தோன்றா காலம் எனும்போது அது மணலை அடிப்படையாக கொண்ட பகுதிகளாகிய மற்ற திணையெலாம் உருவாகும் முன்பே உருவானவர்கள் என்பதே இதன் பொருள். இப்படியிருக்க ஒன்றும் அறியாதோர் எதையாவது கதை கதையாக சொல்லிக்கொண்டே போகிறார். அவர்களிடம் எப்போது கதை கேட்க ஆயத்தமானோமோ அப்போதே தமிழனம் அடிமைபட தொடங்கிவிட்டது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவிற்கு வருகை புரிந்த அயல்நாட்டினர் பலரால் அடிமைபடுத்தப்பட்டுக்கொண்டே இருப்பது இன்னொரு கால கொடுமை.


என்ன செய்வது ஆண்டு பழகியவர்கள் கொஞ்சகாலம் அடிமைபடலாம் தப்பில்லை ஆனால் நிரந்தர அடிமையாகத்தான் இருக்க கூடாது. இந்த மண்ணுக்கும் இந்த நிலப்பகுதிக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லாத ஐரோப்பியர்கள் என்ற ஆரியராலும் மற்றும் மங்கோலியர்கள் போன்றோராலும் அடிமை படுத்தப்பட்டிருந்த மக்கள் மீண்டும் இஸ்லாமியர்களாலும் வெள்ளைகார ஐரோப்பியனாலும் மீண்டும் அடிமைபடுத்தப்பட்டனர். ஐரோப்பிய கண்டத்திலிருந்து வந்த ரோமர்கள் போன்றோரும் இந்நிலத்தை ஆண்டிருக்கின்றனர். மங்கோலிய இனங்களான கூஷானர்கள் , ஹூனர்கள் போன்றோரும் அரசாண்டிருக்கின்றனர்.

இவர்களெல்லாரும் இம்மண்ணுக்கு சொந்தமில்லாதவர்களே.

ஆயினும் இவர்கள் இன்றும் நம்மை ஆண்டுகொண்டுதான் இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம் சுந்தரநாயனே! என என்னை வினவலாம். அரசின் மூலமாக தான் ஒருவனை அடிமைபடுத்த வேண்டுமென்றல்ல சித்தாந்தங்கள் மூலமாகவும் அடிமைபடுத்த முடியும்.


எப்படி சித்தாந்தங்கள் மூலமாகவா? என மீண்டும் ஆச்சர்யத்தோடு வினவலாம். ஆம் அரசு நடத்தி தான் மக்களை அடிமைபடுத்த வேண்டும் என்றில்லை. மக்களை தன் வயப்படுத்த ஏற்கெனவே சொன்னதுபோல கதை சொல்லியும் மயக்கலாம். அந்த கதைகளில் மயங்கி போன நாம் கதையே உண்மையென முயங்கியும் போய் இருக்கிறோம். சிந்திக்க தெரியாதவர்களோ நம் முன்னோர்கள் இல்லை இல்லை அவர்கள் அறிவை போல உலகில் எவருமே பெருந்தன்மையோடு இருந்ததில்லை. தமிழன் தனக்கு தெரிந்தவையெல்லாம் நூலில் எழுதி பொதுவினதாக பறைசாற்றுகிறான். ஆனால் ஐரோப்பியரோ அப்படியல்ல எதை கண்டறிந்தாலும் முதலில் தனக்கு உரிமைபத்திரம் எழுதி அதன் மூலமாக சம்பாதிக்கிறான். பொதுநலம் விரும்பிய நம்முன்னோர் எதையெலாம் உரிமைபாராட்ட கூடா என தெளிந்திருந்தமையும் அவர்களது மதிப்பு மிக்க அறிவையே சுட்டுகிறது. மேலைநாட்டினரோ தமிழனுக்கு முன்பாக கொஞ்சம் தரம் குறைந்தே இருக்கின்றனர்.


நமது நாட்டு மஞ்சளுக்கு தனி ஒரு நிறுவனம் சொந்தம் பாராட்டிய கொடுமையும் இந்த காலத்தில் நடந்தேறியது. நாம் போராடித்தான் அதையும் உலகுக்கு புரியவைத்தோம். இன்னும் புரிய வைப்போம்.


தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் ?


மாந்தன் பிறந்தகம் தமிழகமே ஏன் மாந்தனே ஓர் தமிழன் என உறுதியாக கூற கூடியவராக பயின்றிருக்க வேண்டும். தமிழர்கள் பெற்றிருக்க வேண்டிய சிந்தனைகள் என சிலவற்றை குறிப்பிடுகிறேன்.


1.அரசியல் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

2.கல்வி அறிவிலும் தேறியிருத்தல் வேண்டும்.

3.பல்நாட்டு சாத்திரங்களை பயின்றிருக்க வேண்டும்.

4.பன்மத புலமை பெற்றிருக்க வேண்டும்.

5.பன்மொழி புலமை பெற்றிருக்க வேண்டும்.

6.பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும்.

(இங்கு பகுத்தறிவு என நான் குறிப்பிட்டது கடவுள் மறுப்பல்ல)

7.வம்சாவழிக்கு வரலாறை கற்பிக்க வேண்டும்.

8.மறைக்கப்பட்ட வரலாறுகளை திருத்த வேண்டும்.

9.போராடி வெல்லும் முறையை பின்பற்ற வேண்டும்.(தீவிரவாதமும் ஆயுத போராட்டமும் செய்தல்ல)

10.நம்மால் முடிந்த வரை தமிழுக்கு தமிழனுக்கு தொண்டாற்ற வேண்டும். ஏனெனில் தமிழன் வளர்ந்தால் தமிழ் வளரும்.


அரசியல் விழிப்புணர்வு எப்போது ஒருவனுக்கு வருகிறதோ அப்போதே அவன் வெல்ல ஆரம்பித்துவிட்டான் என அர்த்தம்~ சுந்தரநாயன்.


ஏனெனில் அரசியலே இனத்தையும் கொள்கையையும் காக்க உலகில் பெரிதளவில் உதவியுள்ளது. ஆகவே அரசியல் நல்லதே. அரசியல் ஒரு சாக்கடை என கூறுவதால் என்ன பயன். சாக்கடையில்லா அரசியலை தமிழர்களாகிய நாம் ஏன் முன்னெடுக்க கூடாது.


ஒவ்வொரு தமிழனும் எப்போது அரசியல் விடுதலை அடைகிறானோ அப்போது தான் இந்தியா வல்லரசாகும் அதுவரை இது ஒரு தொல்லையரசாகும் ஆகவே இது சாகும்.

இந்த இந்தியாவையை இந்தியரே ஆள வேண்டும் என நாம் முழங்குகிறோம்.

ஏனெனில் இந்தியர் என்ற போர்வையில் பல புலிகள் நடமாடுகின்றன. இந்த புலிகளை முறத்தாலேயே விரட்டிய சமூகம் நமது தமிழ்சமூகம்.

பெண்களே வீறுகொண்டெழுந்திடுங்கள்.

சமுதாயமே விழிப்படை

போராடு போராடு

போராட்டமே வெற்றியை தரும்.

தூங்கி கழித்தது போதும்

சுகமாய் தூங்கி கழித்தது போதும்

தன்நிலை மறந்த வீரன்

தகுதியை இழந்த கோழை


நான் இரத்தம் சிந்தி போராட எவரையும் அழைப்பதில்லை.

உயிரை கொடுப்பது மிக எளிது ஆனால் அந்த உயிரை உருவாக்குவது மிக கடினம்.

ஆகவே உயிர்த்துறந்தாவது வெல்வேன் என கூறுவது என்னை பொருத்தளவில் முட்டாள்தனம். அதற்கு பதிலாக நான் புதியதொரு வாசகத்தை அறிமுகப்படுத்துகிறேன். அதாவது உயிர்வாழ போராடுவேன் என்பதே அவ்வாக்கியம் .

பொதுவாக போராட அழைப்போர் எல்லாருமே தன் இயக்கத்துக்காக சங்கத்துக்காக கட்சிக்காக கொள்கைக்காக எவரையாவது உசுப்பேற்றி விட்டு மரணிக்க வைப்பது இங்கு காலாகாலமாக நடக்கும் கொடுமை.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மரணித்தோர் எத்துனை எத்துனை.

சாவு ஒரு முடிவல்ல வாழ்வே அந்த முடிவின் வெற்றியாய் இருக்க வேண்டுமே ஒழிய உயிர்தியாகம் என்ற பெயரில் மரணிப்பது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.


தமிழனே தரமாய் போராடு ஆனால் ஒருபோதும் தரம் தாழ்ந்து போராடிவிடாதே.

மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் உசுப்பேற்றுகிறவன் உசுப்பேற்றலாம் ஆனால் உனது சிந்தனை உசுப்பேறி போராடனுமே ஒழிய தற்கொலை செய்துகொள்ள கூடாது. கோழைகள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் . நீ கோழையல்ல வாளோடு முன்தோன்றியவன் நீ பயந்துவிட கூடாது நீ பதற்ற படவும் கூடாது ஏனெனில் உனது முப்பாட்டன் மலையில் உயிர்வாழ அலட்சியமாக வாழ்ந்திருக்க முடியாது. கண்டிப்பாக அவன் தெளிந்த சிந்தனையோடு நாலாபக்கமும் விலங்குகளின் ஆபத்துக்களை அறிந்தவனாய் வெற்றிக்கொண்டவன் என்பதை மறந்துவிடாதே. தமிழனே நீ தோற்க பிறந்தவன் அல்ல வாளோடு வெல்ல துணிந்தவன். ஏனெனில் ஆதி தமிழன் காட்டுக்குள்ளே தோற்றிருந்தால் நீயும் நானும் இங்கே வந்திருப்போமா? இல்லை உலகத்தில் மனித இனம்தான் வாழ்ந்திருக்குமா? போராடு ஆனால் அறத்தோடு போராடு. போரிடாதே அது மக்களை மக்கள் கொள்ளும் அவச்செயல். அத்தீச்செயலை ஒருபோதும் முன்னெடுக்காதே. அது தவறானது. தமிழருக்கு என ஒரு தேசியம் வேண்டுமென நினை, மகிழ்ச்சி! ஆனால் அதற்காக எவரையும் நீ அடிமை படுத்தலாகாது. எவரையும் புறந்தள்ளவும் கூடாது. என்னை பொருத்தவரையில் ஆயுத போராட்ட தமிழ் தேசியமும் தவறுதான். ஆயத போராட்டத்துடன் கூடிய தமிழ்தேசியம் நல்ல முன்னெடுப்பல்ல என்பதற்கு தலைவன் பிரபாகரனே சான்று. தலைவனும் செத்தது பல கோடி தமிழர்களும் செத்தது எனக்கு வருத்தமளிக்கிறது. நாளை வேறு தலைவர்கள் உருவானாலும் இதே கதிதான் சூழ்ச்சி காட்டிகொடுத்தல் என பல நாடுகளின் சப்போர்டில் தமிழினம் மீண்டும் ஒரு அழிவை சந்திக்க விடகூடாது ஆகவே அச்சான்றுகளில் ஒருவராக இனி எத்தமிழரும் இருக்க கூடாது. அதைவிட வேறு நல்ல வழி எதுவோ அதை நாட வேண்டும். அதுவே சிறந்த வழி. சுந்தரநாயனின் விருப்பமும் அதுதான்.


அரசியல் எழுச்சிமட்டுமல்ல ஆன்மீக எழுச்சியும் இங்கு அவசியமாகிறது.

உலகத்தின் முதன் மனிதனாகிய ஆதாம் ஒரு கிறிஸ்தவரல்ல அவர் ஒரு தமிழன். அவரை இங்கு நாம் ஆதன் என்ற பெயரால் அழைக்கிறோம். அவனையே ஆதி சீவன்(ஜீவன்) என்றும் ஆதிசிவன் எனவும் அழைக்கிறோம். தமிழருக்கென தனி மதமில்லை. நாம் எம்மதத்தோடும் வரவில்லை ஏனெனில் நமக்கு முன்னே எம்மதமும் தோன்றவில்லை ஆகவே மதத்தின் தொடக்கமே தமிழர் மதம்தான். இந்து சமயம் என பிராமணியப்படுத்தப்பட்ட சமயம் தமிழரின் சமயமன்று. தமிழரின் சமயம் மிகுந்த பிரமிப்புக்குள்ளாக்குகிறது. தமிழரின் இறைவர்கள் யாவரும் மனிதனாகவந்து கடவுள் நிலைக்கு உருமாறியவர்களே. கடவுளாக பிறந்தவர்கள் இல்லை. அதாவது மனித நிலையிலையிருந்து கடவுள்நிலைக்கு உயருவதே தமிழர் சித்தாந்தம். இதனை தான் தமிழர் களாகிய நாம் பின்பற்றுகிறோம்.

குறிஞ்சி நிலத்தவர்கள் சேயோனை வழிபட்டார்கள்.

சேயோன் என்பது ஆறாம் தலை முறை தாத்தாவினை அழைக்கும் முறை. சேயோன் முருகனாக்கப்பட்டது இயேசு பெருமானின் சீடனால் தான் மாறியது. இயேசு பெருமான் சிலுவையில் ஆணியில் அறையப்படுவதற்கு முன்பு இடையில் பொருத்தக்கூடிய ஒரு தடியை சுமந்துகொண்டு வந்தார். அதை போன்றே சேயோன் வழிபாடு மாற்றப்பட்டது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதை சொல்ல வேண்டுமானால் அது தனிகட்டுறை ஆகிவிடும். புனித தோமையாரால் இந்தியாவில் தமிழர் ஆன்மவியலில் ஆன்மீகத்தில் நடந்தவை என்ன என வேறோரு கட்டுறையில் அதனை தொகுத்து எழுதுகிறேன். அதுவும் எனது சுயசிந்தனையில் அல்ல ஆராய்ச்சி பூர்வ ஆதாரங்களோடே விளக்க முயல்கிறேன்.


அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்.

நன்றி.

நன்றி

நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்