சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன?

சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன?




இணையதளங்களை அனேகர் உருவாக்குகிறார்கள் ஆனால் அதனால் பயன் என்ன என்று பார்த்தால் அனேகம் உண்டு. அதேபோல இணையத்தை நம்பி நாம் புரட்சிகர கருத்துக்களை அடிகடி இவ்வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம். சமுதாய சிந்தனைகளை தூண்டும் வண்ணமாக அமைக்கிறது நமது பதிவுகள் என்று எனக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்து இந்த கட்டுரை உருவாக காரணமாயிருந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

மேலும் நமது சமூக அக்கறை இணையத்தொடர் இதழை தொடர்ந்து படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னை அடிக்கடி உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத உதவிய நண்பர்களுக்கும் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.


ஏன் இப்படி தொடர் இதழை அதுவும் இணையத்தில் வெளியிடுகிறோம் என்றால் அது ஒரு மாலை நேரம் இரு நண்பர்களின் உரையாடல் எதைப்பற்றி என்றால் இறைவன் நம்மை எதற்காக இவ்வுலகில் படைத்திருக்கிறார் . நாம் ஏன்  இங்கு பிறந்திருக்கிறோம். நமது பிறப்பின் நோக்கம் என்ன என அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்த தருணம் அது வேறு யாருமல்ல நானும் ஒரு தம்பியும் தான்.

மாற்றம் எங்களுக்குள் இருக்கிறது ஆனால் மாற்றமில்லாதோர் பலர் இருக்கிறார்கள் அவர்களிடத்தில் இதனை தெரிவிக்க வேண்டுமே என்ற ஒரு ஆவல் .

என்ன செய்யலாம் இணையத்தை பயன்படுத்தலாம் என்று நான் கூறினேன் அதன் அடிப்படையில் இணையத்தொடர் களை எழுதுவது என முடிவு செய்தோம். ஆக அந்த தம்பியுடன் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது தான் சமூக அக்கறை இணையத்தொடர் இதழ்.

இதன் நோக்கமாக நாம் இறுதிஇட்டவை எவை எனில் 

1.இந்தியாவை நேசி

2.இயற்கையை நேசி

3.நமது கலாச்சாரத்தை நேசி என்பதே.


பின்னாளில் இவை மூன்றோடு சேர்த்து இவற்றிற்கு எதிராக உள்ள 

4.பாசிசப்போக்கை எதிர்

 என்னும் நான்காவது குறிக்கோளும் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே சமூக அக்கறை இணையத்தொடர் இதழானது சில அறிவியல் உண்மைகள் ,ஆராய்ச்சி உண்மைகள் மற்றும் சமூக சிந்தனைகளை தூண்டும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

ஆரம்பத்தில் www.sociconcerninindia.blogspot.co.in என பதியப்பட்ட நமது தள முகவரி பின்னாளில் www.socialconcerninindia.blogspot.com  என பதியப்பட்டது. ஆனால் பின்னாளில் தமிழின் மேற் ஏற்பட்ட ஆழமான காதல் அடிப்படையில் இந்த தளமுகவரியானது www.samoogaakkarai.blogspot.com என்றே பதிப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளது.

சமீப காலமாக நமது வலைதளத்தை குறிப்பிட்ட நபர்களை தவிர வேறுயாரும் பார்ப்பதற்கில்லை. காரணம் நாம் வலைதள பெயரை மாற்றியமையே.  இனிமேல் மறுபடியும் புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.


நான் ஆசிரியராகவும் அந்த தம்பியை இணையாசிரியராக கொண்டும் இந்த இதழ் வெளிவந்தது ஆனால் சரியான ஈடுபாடு இல்லாதமையாலும் சமூக சிந்தனைகளை அவருடைய எழுத்துக்களில் காணாமையாலும் அவரை நீக்கிவிட்டு நானே இவ்விதழை தொடர்ந்தேன். இருப்பினும் என்னாலும் சரியாக தொடர முடியவில்லை ஏனெனில் இணையவசதிக்கொண்ட கைப்பேசி என்னிடம் இல்லை எனவே அதிக பணம் செலுத்தி இணைய வளாகங்களில் ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் 15ஐ கொடுத்து எழுத வேண்டி இருந்தது. நான் சம்பாதிக்க ஆரம்பித்தேன் அதனால் நான் இணைய வசதிக்கொண்ட கைப்பேசியை வாங்க நேர்ந்தது எனவே தான் இப்போதெல்லாம் அதிக பதிவுகளை பகிர முடிகிறது. முன்னெல்லாம் கூகுள் தமிழ் ட்ரான்ஸ்லிட்ரேசன் வசதி மூலம் எழுதி பின்னர் அதனை வெட்டி எடுத்து பிளாகரில் ஒட்ட வைப்பேன். ஒரு பத்தியை எழுதி முடிப்பதற்குள் ஒரு மணிநேரமே முடிந்துவிடும். 


இதனால் ஒரு கட்டுறையை வெளியிட சரியாக ஒரு மாதம் கூட ஆகும். ஆனால் அந்த தம்பியிடம் அனைத்து வசதிகளும் இருந்தது ஆனால் யாரோ எழுதியவைகளை இங்கு வந்து எழுதினார் .

இதனால் தான் நானே சுயமாக எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நான் கல்லூரி படிக்கிற சமயத்திலே எனக்குள் இருந்த எழுத்து திறமையால் இளந்தூது என்ற  மாணவ இதழின் உருப்பினராக ஒருவருடமும் வழிநடத்தும் பொருப்பில் ஒருவருடமும் ஆசிரியாராக ஒரு வருடமும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

ஆகவே அப்போதே தொடங்கப்பட்டது தான் இந்த இணையத்தொடர் இதழ் அது முதன் மிக பொருமையாக நடைப்போட்டாலும் சொல்ல வேண்டியவற்றை சிறப்பாக சொல்கிறது. முடிந்தவரை தலைப்பிற்கேற்ற சிந்தனையை தூண்டும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் போன்றவற்றாலும் மேலும் சிறுகதைபோன்றவற்றாலும் பல தொடர் கட்டுரை வாயிலாகவும் இவ்விதழ் மிக அருமையாக நடந்தேறிவருகிறது. 2012 ல் தொடங்கி கடந்த 8 வருடங்களாக சிறப்பாக செயல் பட்டு வருகிறது.

எட்டு வருடங்களாக இருந்தாலும் நமது பதிவுகளை நாம் அதிகம் பகிர்வதில்லை இணையத்தில் தேடியே படிக்கிறார்கள் ஆக குறைவான பார்வைகளே உள்ளது. மேலும் இந்த வலை தளத்தை மெருகேற்ற சமூக சிந்தனை கொண்டோரை இந்த இணையதள துணை ஆசிரியர்களாய் இருவரை நியமித்தேன். அவர்களும் எனது நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை. இணைய தொடர் இதழின் நோக்கத்தை நிறைவேற்றவும் இல்லை. எனவே நானே தனியனாக இருந்து இனிய தமிழ் பரப்பி வருகிறேன். முடிந்தவரை தமிழர் வரலாறு எழுச்சி சிந்தனைகளை இங்கு பதிவிட்டு வருகிறேன். இதனை நான் தமிழருக்கும் தமிழுக்கும் செய்யும் தொண்டாக கருதியே எந்தவித  இலாபநோக்கமும் இல்லாமல் பிடித்ததை பதிவிட்டுவருகிறேன். தமிழர் ஆன்மவியல் குறித்த சிந்தனைகள் போன்றவற்றை பதிவிட்டுவருகிறேன். 


பொதுவாக தமிழில் எதை தேடினாலும் அது கிடைப்பதில்லை ஆகவே இதனை ஒரு தமிழ் களஞ்சியமாக மாற்ற விளைகிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும். தமிழ் மற்றும் தமிழ் சிந்தனைகளை பதிவிடுவோர்கள் என்னை தொடர்புகொள்ளும் பட்சத்தில் இந்த இதழின் துணையாசிரியராக சேர்த்துக்கொள்ளுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். மேலும் உங்களுடைய கதை,கட்டுரை,தமிழ் எழுச்சியுரை, அரசியல் விழிப்புணர்வு செய்திகள், கவிதைகள் மற்றும் ஓவியங்களை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். நன்றி


மின்னஞ்சல் முகவரி: salutethelight@gmail.com

நீங்களே இவ்விதழில் எழுத விரும்பினாலும் உதவ நான் தயார்...

நீங்கள்?

மேலும் உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கீழே உள்ள கருத்துரை பெட்டியில் பதிவிடுங்கள்.

உங்கள் மேலான கருத்துக்கள் எங்களை மெருகேற்ற உதவும்.

......நன்றி....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்