விவசாயியை ஏமாற்றிய பாஜக
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடர் இதழின் நல்வாழ்த்துக்கள்.
இன்று இந்தியாவையே திரும்பிபார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இணையதளங்களிலும் மற்ற சமூக ஊடங்களிலும் சிறப்பாக பேசப்படும் ஒரு செய்திதான் விவசாயிகளின் #டெல்லிசலோ போராட்டம். இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவசாயிகளால் என்ன கோரிக்கை வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடக்கிறது என்றால் அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண்சட்டதிருத்தமே. இந்த மூன்று சட்டங்களையும் நீக்க கோரிதான் இந்த போராட்டம் நடக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் யார் ? நம்மை மறைமுக மாக ஆட்சி செய்யும் மனநோயாளிகளான ஆர் எஸ் எஸ் இயக்கமும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் பா.ஜ.க_வும் தான் . இந்த பிரச்சினைக்கு எல்லாம் மூலகாரணம் ஆர் எஸ் எஸ் இயக்கம் தான் . அது தூண்ட தூண்டப்பட்டு தன்னை மறந்து இப்படி பலர் அதற்கு ஆதரவு அளித்து இந்த சட்டங்களை விவசாயிக்கு எதிராக உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் நேரடியாக இடைதரகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது என்னவோ உண்மை தான் . ஆனால் இந்த பக்தாள்கள் உண்மையிலேயே அதில் பல சிக்கலை மறைத்து வைத்துள்ளார்கள். அதாவதுவிவசாயி விளைவிக்கும் பொருளை நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் படியும் இதனால் பலர் வேலை வாய்பையும் இழக்க கூடும் .இந்த சட்டங்களால் விவசாயிக்கு எந்த லாபமும் இருக்க போவதில்லை இது கார்பரேட்டு முதலைகளால் பிண்ணப்பட்ட வலை இதில் ஆட்சியில் இருப்பவர்கள் சிக்கி விட்டார்கள் எனவே அவர்களின் சிக்கலை எடுக்க வேண்டியது இதை படிக்கும் ஒவ்வொரு நபரின் கடமை. எனவே உடனடியாக டெல்லி போராட்டத்திற்கு நமது ஆதரவினை அளிப்போம். ஏனெனில் சோத்தில் நாம் கையை வைக்க வேண்டுமானால் விவசாயி சேற்றில் காலை வைக்க வேண்டும். எதற்கும் சம்மந்தம் இல்லாத கார்பரேட்டுகளுடன் கைகோர்த்துக்கொண்டு இப்படி ஆட்டமாய் ஆட்டம் ஆடுகிறார்கள். இவர்கள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நம்மால் முடியும். நாம் மனது வைத்தால் முடியும். இந்த முறை பஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எமது வாக்கில்லை என உங்களால் சொல்ல முடியுமா? அந்த தைரியம் உங்களுக்கு உண்டா?
விவசாயி விளைவித்த பொருட்கள் வேண்டும் ஆனால் விவசாயி வேண்டாம் என்ற நிலை மாறி விவசாயியே இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தூண்களாய் மாறுவான் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்த பாடத்தை கற்க மனதில்லாதவர்களுக்கு இந்த முறை அளிக்கும் ஓட்டு இந்த கார்ப்பரேட்டு முதலைகளுக்கு முட்டுகட்டையாய் அமைய வேண்டும். அது உங்க கைகளில் தான் இருக்கிறது. ஒரு வேளை நாம் இந்த முறை கையூட்டு அன்பளிப்பு பெற்றுகொண்டு ஓட்டு போடும் எச்ச புத்தியை தூக்கி எறிந்துவிட்டு சுயமரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும். இந்து சந்து பொந்து கொஞ்சம் எதையும் யோசிக்காம குந்து என்று ஏமர்ந்து விடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் நேரம் எதிரி உங்கள் மனதில் களையை விதைப்பான் ஆகவே அதற்கு இப்போதே உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் களை வளர முடியாத அளவுக்கு உங்கள் மனது கல்லாய் மாறட்டும் ஓட்டுக்கு பணம் வாங்கி உங்களை நீங்களே இழக்காதீர்கள்.
#இந்தியரை_இந்தியரே_ஆளுவோம்
சமூக அக்கறை இணைய தொடர் இதழ் மூலமாக உங்களை சந்தித்து எனது கருத்துக்களை பதிவு செய்ய கொடுத்த இந்த வாய்புக்காக உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
இப்படிக்கு சமூக அக்கறை இணைய தொடரிதழ் குழு.
கருத்துகள்
கருத்துரையிடுக