தமிழரின் புத்தாண்டு

தமிழே தாய்தமிழ் உறவே

தழைத்தோங்கும் தமிழர்

இந்நிலத்தின் மனிதர்

என உணர்ந்தோர்க்கெலாம்

கனியே தெவிட்டா அமுதே

தமிழே நீயே எந்தாயே

தையிலே தமிழரெல்லாம்

உனக்கு பொங்கலிட்டு

மெய்யாக மதிக்கிறார்

அந்நியரும் இங்கு வந்து

பொங்கலிட்டு படையல் செய்து

புகழுறார் உன் பழைமை கண்டு!

மகிழுறார் தான் தமிழரென்று!

வந்தோரை வாழ வைத்த தமிழ்தாயே

இந்நிலத்தோரை அழிக்க நினைக்கும்

ஆரியர் கூட்டம்… அல்ல அசூர கூட்டம்

கொட்டம் தனை அடக்கி

தமிழர் கொடியொன்று ஏற்றி

தை திருநாளை புத்தாண்டாய் மாற்றி

தமிழ்நாடே ஏற்கும் நாளெதுவோ

அதுவே தமிழர் திருநாளாகுமே

என் தமிழ் தாயே!!!

அதுவரை இது கொண்டாட்டமல்ல

கொடுங்கூட்ட ஆதிக்கம்!!!

தமிழரின் திட்டம்

பலிக்கட்டும் எங்கும்

அறுபதாண்டு கணக்கு

அது ஆரியரின் பிணக்கு!!!

புரிந்து நீயும் பற்று

தைமுதலே தமிழ் புத்தாண்டு என்று!!!

சுந்தரநாயனின்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்