இவரே இறையாண்மைவாதி
இறையாண்மை யற்ற இந்திய மக்கள் தன்னிகரற்ற தலைமைதுவத்தை தாராளமயமாக்குதலோடு தயங்காமல் ஏற்று கொள்வீர் தங்கங்களே...
என்று முழங்கினார் ஓர் அரசியல் வாதி
அவர் தட்டுதடுமாறி நிருத்தமுடியாமல் மோதி
மோதியை தூக்கி பிடித்த கேடிகளின் தலைவர்
வாழ்க பாரதம் என்பார்
பாரதத்தில் எவரையும் வாழவிடமாட்டார்
பாரத் மாதாகி ஜே சொல்வார்
பாரதமாதா பெற்றடுத்த பிள்ளைகளை கொள்வார்
வந்தே மாதரம் என்பார்
இந்தியரை ஆளும் தகுதி இந்தியருக்கில்லை என்பார்
பாரத பராக்கிரம வீரதீர
என்று சொல்லி
பாரதத்தை இரத்தகறையால் மூடுவார்
கோபங்கொண்டால் கிறிஸ்தவர்களை
கொண்றுவிடு என்பார்
எப்போதாவது நினைத்து கொண்டால்
இஸ்லாமியர்களை கொல்ல சொல்வார்
சட்டங்களை மதிக்க மாட்டார்
சாணக்கியன் புத்தி வேண்டுமென்பார்
தானே உயர்ந்தவனென்பார்
நீதிமன்றங்களை மயிரென்பார்
காந்தியை சுடுவார்
சுட்டவரை புகழ்வார்
புகழ்பவரை தலைவராக்குவார்
தலித்துகளை ஏமாற்றுவார்
தலித்துகளையே தலைவராக வைப்பார்
நாட்டை தலித் ஆள்வது போல் பொய் பிம்பம் செய்வார்
பாரதிய ஜீசஸ் பார்டி என்பார்
கிறிஸ்தவ நலன் விரும்பிகள் என்பார்
இஸ்லாமியரின் பாதுகாவல் என்பார்
ஹிஜாப் அணிய தடைகள் விதிப்பார்
முத்தலாக்குக்கு முற்று புள்ளி
மோசம் போனோமே
பாஜகவை நம்பி
ஹிஜாப் வேண்டாம் என்று சொல்லி
உரிமை மறுக்கிறார் அதிகார கொள்ளி
சாதிகள் வேண்டும் என்பார்
மறுமணம் கூடாதென்பார்
கலப்புகள் அறவே வெறுப்பார்
தேடிபோய் கழுத்தை அறுப்பார்
காதலி சாதி கேட்டபின் காதலி
இல்லையேல் சாவாய் நீ
சாதிகலப்பு வருணாஷ்ரம தர்ம மறுப்பு
என்பார் வெம்புவார் பிறகு கெஞ்சுவார் மறுத்தால் கொல்லுவார்
பாசிசம் அவரது ஆயுதம்
நேசம் அகண்டபாரதம் மீதாம்
சயோனிசமும் இதுவும் ஒன்றாம்
இதை ஏற்போரும் இப்பூமியில் உண்டாம்.
வா தாய்மதம் வா என்பார்
வாசல் வரை வா என்பார்
கோபுரம் வரை வா என்பார்
கருவரை மட்டும் வராதே
என்பார்
அரேபிய மதமென்பார்
அவர் வந்தவரென்பார்
ஐரோப்பிய மதமென்பார்
அவரும் வந்தவரென்பார்
வைதீக மதமென்பார்
வந்தவரென்பதை ஒத்துகொள்ளார்
ஆனால் அவர் மட்டும்
இந்தியர் என்பார்
வந்தே மாதரம்
ஜெய்இந்தியா
பாரத் மாதாகி ஜே
என்று சொல்வோரிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
ஏனெனில் அடுத்த ஆன்டி இந்தியன் நீங்களாக இருக்கலாம்...
மீண்டும் சந்திக்கலாம் அதுவரை காத்திருங்கள்
Book mark செய்து கொள்ளுங்கள்
தொடர்ந்து வாசியுங்கள்
சமூக அக்கறை தொடரிதழுக்காக உங்கள் சுந்தநாயன்...
கருத்துகள்
கருத்துரையிடுக