உக்கிர ரஷ்யா ரத்தகறையாகும் உக்ரேன்

க்கிர ஷ்யா 
த்தகறையாகும் க்ரேன்

யுக்தியோ சக்தியோ 
புத்தியோ கத்தியோ 
வெற்றியின் முடிவில் 
குருதிவாசமே மிச்சம்
பக்தியோ சாதியோ
மொழியோ இனமோ வெறியோ 
வென்றபின்னர் 
குருதிஓடையே மிஞ்சும்
இது சத்தியம் நித்தியம் 
பத்தியம் அது மனிதநேயம்

குண்டுகளில் குளிக்கலாம்
குருதிதனில் நீந்தலாம்
எந்திரங்கள் முழங்கலாம்
ஏகமாய் வெல்லலாம்
குருதியாலே குதுகளம்
நின்றிடாது எப்போதும்

சதிகளால் வென்றதாய்
சாத்திரங்கள் புரியலாம்
ஆத்திரசுவடி என்று 
அறிஞர்கள் சொல்லுவார்
தோத்திரம் கூறுவோர் 
மடிந்தபின் வருபவர்
நிச்சயம் வெட்குவார்
ஆகாத வெற்றி என்று

மனிதரை மனிதரே 
அழிப்பதோர் வெற்றியோ
கொண்றபின் நின்று வாழ்வார்
அவரை கொண்றிட முடியாது 
ஒருநாளும்
அவர் நினைவுகளை 

எதிரியே இல்லை யப்பா
எதிரிடை நிற்போரும் தேவையப்பா
வழிகளும் உண்டப்பா
ஞானம் உடையோரை தேடப்பா
தவிர்க்கலாம் இழப்பு தானே

தடைகளும் தேவையேதான்
மலைவடிவில் தடைகளும் தேவையேதான்
மலைஉயரம் நீ உயர 
உதவும் கரந்தான் அந்த மலை 
என உணர்ந்து நம்பிக்கை 
சுமந்து முன்னேறிடுவாய்


மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை விடைபெறுவது உங்கள் கவிஞர் சுந்தரநாயன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்