எட்டுத்தொகை பத்துபாட்டு பதினென்கீழ்கணக்கு நூல்களை எளிமையாக மனப்பாடம் செய்ய இப்பாடல்கள் உதவும்
எட்டுத்தொகை பாடல்களை எளிதில் ஞாபகம் வைக்க உதவும் பாடல் வரிகள்:
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற
இத்திறத்த எட்டுத் தொகை
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.பதிற்றுப்பத்து
5.பரிபாடல்
6.கலித்தொகை
7.அகநானூறு
8.புறநானூறு
பத்துபாட்டு பாடல்களை எளிதில் ஞாபகம் வைக்க உதவும் பாடல் வரிகள்:
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலைகடாந் தொடும் பத்து
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநாராற்றுப்படை,
3.சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரை காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடு கடாம்.
வேறு பெயர்கள்:
*திருமுருகாற்றுப்படை-புலவராற்றுப்படை
*பெரும்பாணாற்றுப்படை-பாணாறு.
*முல்லைப்பாட்டு-நெஞ்சாற்றுப்படை.
*குறிஞ்சிப்பாட்டு-பெருங்குறிஞ்சி.
*பட்டினப்பாலை-வஞ்சி நெடும்பாட்டு.
*மலைபடுகடாம்-கூத்தராற்றுப்படை.
பதினென்கீழ்கணக்கு நூல்களை மனப்பாடம் செய்ய உதவும் பாடல் வரிகள்:
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி, மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பனவும்
கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு
ஐங்குறுநூறு நூலை பாடிய புலவர்கள் பெயர்களை ஞாபகம் வைக்க
மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
மருதம்-ஓரம்போகியார்.
நெய்தல்-அம்மூவனார்
குறிஞ்சி-கபிலன்
பாலை- ஓதலாந்தையார்
முல்லைப் பேயனார்.
ஓதல்+ஆதன்+தந்தையார்= ஓதலாந்தையார்
ஆதன் +தந்தையார்= ஆந்தையார்
கருத்துகள்
கருத்துரையிடுக