கண்டேன் கனவு
எல்லார்க்கும் நினைத்தது போலவே நடந்திடாது ஆனால் எனக்கோ இன்று கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை.
அது ஒரு மறக்க முடியா நிகழ்வு.
சிறுபிள்ளை பிரயாயத்திற்கே என்னை இட்டு சென்றது.
திடிரென்று ஒரு இறக்கை உள்ள விண்கலம் அது ஒருவாறு ஜெட் விமானம் போன்று இருந்தது அதன் நிறம் பச்சை அதன் மேற்பரப்பில் செடிகள் வளர்ந்தாற்போல தோற்றம்.
நான் பார்த்து வியக்கையில் விண்கலம் அதன் வாயிலை திறந்தது உள்ளே சென்றேன். வாகனம் புறப்பட தயாரானது ஒரு இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டை போட்டுக்கொண்டேன். விண்கலம் பறந்தது படபடத்தது இதயம். எங்கே போகிறேன் நான் .
யார் என்னை அழைத்து செல்கிறார்கள்.
ஏதும் அறிகிலேன். ஒன்றும் புரியாதவனாக நடப்பதை மட்டும் கவனித்து கொண்டிருந்தேன்.
திடிரென்று வானத்தில் வட்டம் ஒன்று தோன்றியது .இது என்ன என்று யோசிப்பதற்குள் உள்ளே சென்றது எங்கள் விண்கலம் . யாருடன் பயனிக்கிறேன் ஏதும் தெரியவில்லையே. யாராவது என்னை கடத்தி செல்கிறார்களா அதுவும் புரியவில்லை குழப்பங்கள் சூழ படப்படப்பில் இருந்தேன். அந்த வட்டத்திற்குள் நுழைந்தவுடன் விண்கலத்தின் வேகம் அதிகரித்தது. யாரோ தள்ளுவது போன்றும் என்னை இழுப்பதும் போன்றும் இருந்தது. விண்கலம் சுற்றிக்கொண்டே வேகமாக பறந்தது எதையும் பார்க்க முடியவில்லை . சுகமாக இருந்தாலும் வாந்தி வருவது போல இருந்தது. யாரிடமும் சொல்ல இயலாமல் யாரிடமும் இது என்ன என்று விணவவும் இயலா நிலையிலும் பயங்கர பதட்டத்துடன் தனிமையில் இருந்தேன். மயான அமைதி இது என் கற்பனையா இல்லை என்ன இது என்று எனக்கே புரியவில்லை. வட்டத்திற்குள் நுழைந்ததும் ஏதோ ஒரு குழாயில் சறுக்குவது போல இருந்தது .பின் குழாயில் இருந்து வெளியே வந்தது போன்று இருந்தது . அமைதி அமைதி அமைதி .
நான் ஏதோ ஒன்றில் இருப்பது போன்று உணர்கிறேன். வேறே எதையும் உணர முடியவில்லை. தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
முதல் முறையாக நட்சத்திரங்களை பார்க்கிறேன்.
இது என்ன என்றே புரியாமல் திகைத்து போய் பார்த்தேன். நான் சென்றவிண்கலம் மெதுவாக பறந்தது. யாரும் ஓட்டுவதாகவும் தெரியவில்லை. யாரும் என்னுடன் இருப்பதாகவும் தெரியவில்லை.
திடீரென்று கைபேசின் அழைப்பு மணி சத்தம் கேட்டது. அங்கு எங்குமே கைபேசியோ திறன் பேசியோ இல்லை. சத்தம் விடாமல் கேட்டது. நான் பார்த்து கொண்டிருந்தவைகள் அலைகள் போல தோன்றியது. மறுபடியும் ஒரே குழப்பம் . திறன் பேசி எங்கே என்று தேடினேன். நான் கீழே விழுந்துவிட்டேன். என் மேல் போர்வை இருந்தது. எனது ஆடை களைந்திருந்தது. எச்சில் வாயில் இருந்து வடிந்து இருந்தது . காற்றாடியின் சத்தம் கேட்டது. ஜன்னலிலிருந்து ஒளி கீற்று என் கண்களை கூசிட வைத்தது. பின்னர் தான் உணர்ந்தேன் ஓ இது கனவோ என்று!.
இருந்தாலும் உண்மையிலேயே பறந்தது போன்ற ஓர் அனுபவம் தந்தது அந்த காலை கனவு.
கனவு என்று கண்டு பிடித்த வுடன் எனக்கு மிகவும் வருத்தம் தந்தது .
இந்த கனவு உலகத்தில் இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி இருக்க கூடாதா என்று!.
கருத்துகள்
கருத்துரையிடுக