இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடியவன் ஆனேன் series 9

அடியவன் ஆனேன் இறைவனுக்கல்ல என்னை மட்டுபடுத்தி ஆள்பவனுக்கு சிறியவன் ஆனேன் பணத்திலல்ல தலையில் இருந்து பிறவாததாலே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை இதை ஏற்றுக்கொள்வாரும் இல்லை பிறந்தவன் எவரும் சாதிக்குள்ளே அனைவரும் இங்கு மலத்துக்குள்ளே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆரிய சிந்தை அனாரியன் அழிக்குது வேத சிந்தை சாதியை வளர்க்குது மனித மூளை இதையும் நம்புது இளைத்தவர்களை ஏமாற்றி பிழைக்குது. என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆடு மேய்த்து வந்தவன் இன்று எங்களை ஆள்கிறானே கேடுக்கெட்ட ஜென்மங்கள் இன்றிதை ஏற்று கொண்டனரே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே வந்தேரி பிராமண கூட்டமே - இன்று தமிழனை வந்தேறி என்குதே நாதாரி ஆரிய கூட்டமே-மக்களை நடைபிணமாக்கி வச்சிட்டே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே சிந்தனை குருடாய் மாற்றியே  சி...

காணக ரீங்கார புலமை

காணகத்தே என் கால்கள் நிற்கையிலே ரீங்கார பறவைகளின் சங்கீத புலமை கேட்டே இன்னோர் அடியெடுகையிலே அப்பளமாய் சருகும் நொருங்கும் சத்தம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே காலைபனி கைகோர்த்து இலைவழியே ஒழுகுங்சத்தம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே சில்லென்ற வாடை காற்று வாட்டுகின்ற வேளையிலே வாயிலே உணவோடு கூட்டின்மேலே சிட்டு பார்த்து குஞ்செல்லாம் வாய்பிளந்து ஆசையோடு அம்மா தருவாளோ உணவென ஏங்கி ஓங்கி ஒலிக்கும் சலனம் கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே இன்பமான அருவியொன்று தூரத்தில் விழும் ஓசை கேட்டே இன்னோர் அடியெடுக்கையிலே எச்சிலே ஊரும் வண்ணம் கிளியொன்று கடித்திட்ட மாங்கனி அமுதாய் சொட்டுகையில் கீழே அணில் கடித்த பலாசுளையிலே அதுபட்டு வழிந்தொரு பூவினுள் விழுந்ததே என்னே அச்சுவை சுவைத்துவிட்டு நகருகையிலே குரங்கொன்று தென்னையிலே 'பொத்'தென்று போட்டதுவே குரங்கது வருவதற்குள்ளே குடித்துவிட்டேன் இளநீரை  திருப்தியாய் காணகமே அங்கு விட்டுவந்தேன் என் மனமே

எனக்கானவளே நீ எப்படி இருப்பாயோ?

கபடம்  இல்லா கவின் புறா கவர்ந்திழுக்கும்  கவிதை  நிலா எண்ணமெலாம் இனிக்கும்  பலா இதயமெலாம் உந்தன் கனா நீ  எப்படி இருப்பாயோ நீ  எனக்கென பிறந்தாயோ நீ  என்னை புரிவாயோ  என்  உயிருடன் கலப்பாயோ என்  கோபம் தணிப்பாயோ என்  சோகம் தீர்ப்பாயோ என்  நேசம் பகிர்வாயோ என்னை  முழுசா அறிவாயோ காதல் என்றால் தெரியாது பாசம் என்றால் அதும் புரியாது உறவு என்றாலும் அறியாது  எதற்கும் அடிமை கிடையாது உங்கள் சுந்தரநாயன் படைப்பு

108 ஊழியனின் கதறல் மொழி

எத்தனையோ பேரை தொட்டு தூக்கினோம் மனசாட்சி என்பது சிறிதும் இல்லையா  எத்தனையோ உயிரை காப்பாற்றி மீட்டு வந்தோம் வயிற்றில் அடிப்பது நியாயமா கேட்ட கூலியும் தராமல் கொடுக்கும்  கூலியையும் கொடாமல் வேடிக்கை பார்ப்பது நியாயமா  270கோடி என்ன ஆச்சு அரசியல்வாதி கையில் பாதி போச்சு ஜீவிகேயின் வாயில் மீதிபோச்சு இதை தட்டி கேட்டால் குற்றமா? தண்டனை எனக்கு வேலை போகுமா? நீங்கள் படித்துக்கொண்டு இருப்பது சமூக நீதியை நிலைநாட்டும் சமத்துவம் காக்கும் சமூக அக்கறை இணைய இதழ்... அடுத்த பதிவில் மீண்டும் சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்...