விவசாயம் செழிக்குமா காவிரி வருமா?

தலைக்காவிரி தொடங்கி ஆடு தாண்டும் காவிரி வரை காவிரியானது ஓடி கடலில் கலக்கிறது. அந்நாள் முதல் இந்நாள் வரை காவிரி நீர் குறித்த சர்ச்சைகள் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றன. காவிரி நீர் தமிழகத்துக்கு ஏன் தர மறுக்கிறார்கள். அது நமது உரிமை என்று ஒருபுறம் மார்த்தட்டி பேசினாலும் அதையெல்லாம் நடுவணரசும் கர்நாடக அரசும் கண்டு கொள்வதாயில்லை. அரசுகளின் புறக்கணிப்பு ஒருபுறமிருக்க கர்நாடக மக்களும் அரக்கத்தனமாக இருந்துவருகிறார்கள் . தமிழன் என்று கேள்விப்பட்டாலே போதும் அடியும் உதையும் தான் மிஞ்சும் என்ற நிலையில் பல கார்பரேட்டுகளின் வரவால் தமிழனின் வசிப்பிடமும் நிலத்தடி நீரும் கெட்டுப்போனது. போதாத குறைக்கு மழையும் பொய்த்துவிட்டது. என்ன செய்வோம் என்று உற்று கவனித்தால் நமக்கு நன்றுபுரியும் இங்கு நடப்பவைகள் அனைத்தும் ஏதோ ஒரு விஷயத்துக்காக அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்படுகிறது என்று. தமிழ் அரசியல்வாதியாகட்டும் அல்லது தேசிய அரசியல்வாதியாகட்டும் தமிழகத்தை அவனது பார்வையில் வியாபாரச்சந்தையாகவே பார்க்கிறான். கார்பரேட்டு நிருவனங்கள் என்ன கூருகின்றனவோ அவையே இவர்களின் தெய்வ வாக்கு. இப்படி பணத்துக்காக அரச...