இடுகைகள்

Enthusiastic students webinar series 24 ல்*✨ ✍️( *இளந்தூது ஸ்பெஷல்* )🙏🏻

படம்
 பிரவின் 32: ✨இந்த வாரம் நம்ம *Enthusiastic students webinar series 24 ல்*✨      ✍️( *இளந்தூது ஸ்பெஷல்* )🙏🏻 புதுமையான தலைப்பில் சுவாரஸ்யமான சிறப்பு நிகழ்ச்சி ..... கவிதை வரலாறு கூறும்  கவிதை விதைக்கும் சிறப்பு நிகழ்ச்சி காண தவறாதீர்கள் அனைவரும் வருக 🙏🏻  🔗*Date:* 12.12.2020 ⌛ *Time:* 5.00pm. to 6.00pm. 🎙️ *Platform:* *Google Meet:* https://meet.google.com/xez-yacb-adp 🎞️ *Live on YouTube:* https://youtu.be/irMEAT8Ymq4

சுதந்திரம் எங்கே? பி.பிரவீன் அவர்களின் படைப்பு

படம்
சுதந்திரம் எங்கே?  இயற்றியவர்  பி.பிரவின் இளந்தூது இதழாசிரியர், இளநிலை கணிதம் (நிறை), ஏ.வி.சி கல்லூரி, மன்னம்பந்தல்,  மயிலாடுதுறை  இன்னொரு படைப்பாளியோடு சந்திக்கிறேன் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டிருப்பது உங்கள் சமூக அக்கறை இணைய தொடர் இதழ்

மனுநூலை மேற்கோள் காட்டும் மதியிழந்த மாமன்றம் நீதிமன்றம்

சுதந்திர இந்தியாவா ? சுடுகாட்டு இந்தியாவா? இந்தியா இந்தியா சுதந்திர இந்தியா தொல்லை நிறைந்த இந்த பூமியில் சாதி சுமைகள் தேவையா வறுமையில் வாடும் இந்த நாட்களில் ஏற்றத்தாழ்வுகள் தேவையா? 1.சதியாலே மனநோயால் எழுதிவைத்த விதியான மனுநூலை விலக்கி வைக்க வலியோர்கள் வந்தாலும் பலனுமில்லை பல பெரியார்கள் வந்தாலும் பலனுமில்லை 2.மனுநூலால் பிழைப்போர்கள் மகிழ்ந்திட மனுநூலும் வெள்ளையனுக்கு கிடைத்திட இந்துலா என்ற ஓர் சட்டம் படைத்ததால் இந்நிலத்தோர்க்கு பலனொன்றும் இல்லையே 3.களையான மனுநூலை மேற்கோள் காட்டும் மதியிழந்த மாமன்றம் நீதிமன்றம் இனியொரு விதியொன்று எழுதுவாயோ பிழையான மனுநூலை விலக்கு(கி)றோமென்று 4.மனுநூலை மதித்திடும் மடையர் கூட்டம் இந்நிலத்தோரை மிதித்திடும் கயவர் கூட்டம் சதியாலே வந்திட்ட இந்த மனுச்சட்டம் தலைவலியாக வந்தது இந்து சட்டம் 5.வந்தவர் தன்னையே உயர்த்தி சொல்லும் மனுநூலை எரித்திட நல்மனது வேண்டும் கல்லான மனதிற்குள் சதைகள் வேண்டும் ஆரியர் பேய்மனம் திருந்திடல் வேண்டும் 6.சாதியை ஒழிக்க என்ன செய்ய சாதியென்ற பேயை கொல்ல மனுநீதி என்ற அநீதி ந...

சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன?

படம்
சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன? இணையதளங்களை அனேகர் உருவாக்குகிறார்கள் ஆனால் அதனால் பயன் என்ன என்று பார்த்தால் அனேகம் உண்டு. அதேபோல இணையத்தை நம்பி நாம் புரட்சிகர கருத்துக்களை அடிகடி இவ்வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம். சமுதாய சிந்தனைகளை தூண்டும் வண்ணமாக அமைக்கிறது நமது பதிவுகள் என்று எனக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்து இந்த கட்டுரை உருவாக காரணமாயிருந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் நமது சமூக அக்கறை இணையத்தொடர் இதழை தொடர்ந்து படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னை அடிக்கடி உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத உதவிய நண்பர்களுக்கும் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஏன் இப்படி தொடர் இதழை அதுவும் இணையத்தில் வெளியிடுகிறோம் என்றால் அது ஒரு மாலை நேரம் இரு நண்பர்களின் உரையாடல் எதைப்பற்றி என்றால் இறைவன் நம்மை எதற்காக இவ்வுலகில் படைத்திருக்கிறார் . நாம் ஏன்  இங்கு பிறந்திருக்கிறோம். நமது பிறப்பின் நோக்கம் என்ன என அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்த தருணம் அது வேறு யாருமல்ல நானும் ஒரு தம்பியும் தான். மாற்றம் எங்களுக்குள் இருக்கிறது ஆனால் மா...

ஆதிமனிதன் தமிழனா? மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி.series 13

ஆதி மனிதன் தமிழனா? மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி ஆதி மனிதன் தமிழனா என்ற கேள்விக்கு என்ன பதில் கொடுக்கலாம் என எந்த தமிழறிஞர்களிடம் கேட்டாலும் பொட்டில் அடித்தாற்போல ஆம் என்றே கூறுவர். இதனை மறுப்பதற்கென்றே பிறந்த சில வஞ்சகர் மட்டும் இல்லை இல்லை தமிழனே ஒரு வந்தேறி என கூறுவர். ஏனெனில் ஒருவன் ஒரு ஊரில் தன்னை பலத்தவனாக காண்பிக்க இது எனது ஊர் என்றும், இது எம் பிறந்தகம் என்றும், சொந்த ஊர் என்றும், தாய் மண் எனவும் பல வார்த்தைகளை பயன்படுத்த முயலுவர். இதையே அந்த ஊரில் பிறவாதவனும் அதே வழிமுறையை பின்பற்றி தன்னை அந்த ஊர் மக்களோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறான். இதனை ஏன் செய்கிறான் அவன் தான் அந்த ஊரில் பிறவாதவனாயிற்றே அவனுக்கு அது தாய்மண்ணும் இல்லை அப்படி இருந்தும் ஏன் அவ்வாறு கூறுகிறார். அவருக்கு அதில் ஆதாயம் இல்லாமல் இல்லை . அவர் தன்னை அந்த ஊரில் ஒருவனாக இணைத்துக்கொள்வதன் மூலம் அவர் அந்த ஊர் மக்களோடு மக்களாய் மறைந்து வாழ முடியும். அதோடு அவருடைய பணிபுரியும் இடத்திலும், அவர் வசிக்கும் இடத்திலும் அவருக்கு ஏற்படும் பாதுகாப்பு உணர்வு காரணமாக அவர் தெரிந்தே பொய் சொல்கிறார். இது இயல்பான ஒன்றாக இருந்தா...

திருவள்ளுவரின் பார்வையில் இந்திரன் முழுவீடியோ.

படம்

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் தமிழனது வரலாறை சொல்ல வேண்டுமானால் அது இன்று நேற்று நடந்ததல்ல. ஆதியில் இறைவன் முதல் மனிதனை இந்த பூமியில் படைத்த கதையிலிருந்தே இந்த வரலாறு ஆரம்பிக்கிறது. ஆகவே உலக வரலாறே தமிழின வரலாறு என்பது தமிழ்நாட்டு அறிஞர் தவிற வேறு யாரும் ஏற்றுகொண்டிலர். காரணம் பைபிளின் கருத்துக்களை அதிகம் ஆய்ந்த அறிஞர்கள் தேட வேண்டிய இடத்தில் தேடாமல் தேவையில்லாத இடத்திலெல்லாம் தேடியதாலேயே தவறான முடிவுக்கு வந்துள்ளனர். காரணம் அவர்களுக்கு மற்ற மதங்களை தங்களுக்கு கீழ்படுத்த வேண்டும் என்னும் பேரவாவினாலும் ஏதேன் தோட்டத்தில் ஓடிய நதிகள் பாரசீகம் தொடங்கி அரபிதேசம் வரையிலும் இருப்பதாலும் ஏதேன் இருந்த இடம் மெசபத்தோமியா தொடங்கி அரபு தேசம் என நினைத்துக்கொண்டார்கள். கால வெள்ளோட்டம் இதையெல்லாம் தவறு என்றே மெய்பித்திருக்கிறது. பூமியில் மனுஷர் தோன்றிய இடம் லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. மேற்குலகமோ இதனை ஏற்றுக்கொண்டால் கருப்பர் இனமானது உயர்வாக சொல்லபடுமோ எனகருதி இதனை மறுப்பதுமன்றி பைபிள் பொய்யாக போய்விடுமோ என்ற ஐயத்தாலும் உண்மையை மறைக்கும் சதியை ...