மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே
மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே2 பாச அணுக்களும், நேச கணுக்களும் ஒன்றாய் சேர்ந்ததுவே-2 ஓ ஓ ஓ 1.கரையும் மேகங்களில் உன் முகத்தை பார்க்கிறேன் கூவும் குயிலிசையில் உன் குரலினை பிரிக்கிறேன் வாடும் என்னை வாட்டிடும் அன்பே தூவும் மழையில் சாரலும் நீயே அழகிய விடியல் நீ ஆசை நாயகியே-2 2.வாசனை திரவியமே மூலகூறுகள் தெரிகிறேன் அழகிய பூக்களில் நிறங்களை பிரிக்கிறேன் மூச்சு திணறும் கிணற்றினுள்ளே உயிர் காற்றாய் நீ உயிர் தந்தவளே நிறமுள்ள நறுமணமே நேச கண்மணியே-2 3.நயகரா வீழ்ச்சியில் விழுவதுன் கூந்தலோ குளிரை போக்கும் குளியல் வெது வெது வெண்ணீரூற்று நீ தாகம் தீர்திடும் பல்சுவையான ஊற்று நீ எப்போதும் திகட்டாத தித்திக்கும் கரும்பு நீ வளர்பிறை யானவளே ஒளிநிறை முழுநிலவே-2