எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பிறக்கிறது ? -------------------------------------------- தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரை”யா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணி மன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது ! இந்த நிலையில் நாளை, “சித்திரை” பிறக்கிறது. முந்தைய வழக்கத்தின் அடிப்படையில் சிலர் “புத்தாண்டு” வாழ்த்துத் தெரிவிக்கக் கூடும். ”தை” மாதமே புத்தாண்டு பிறந்து விட்டது. எனவே இப்போது “வாழ்த்து”க் கூற வேண்டிய தேவை எழவில்லை. இதன் தொடர்பாக வானறிவியல் விளக்கம், படத்துடன் தரப்படுகிறது ! 01. வான் அறிவியலின்படி (ASTRONOMY) , டிசம்பர் 21 அன்று, உலக உருண்டையின் தென்பகுதியில் (SOUTH HEMISPHERE) 23-1/2 பாகையில் உள்ள சுறவக் கோட்டிலிருந்து (மகர ரேகை) சூரியன், வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த வடக்கு நோக்கிய நகர்வை, (பயணத்தை) ”பஞ்சாங்கம்” வடமுகச் செலவு (உத்தராயணம்) என்று சொல்கிறது. டிசம்பர் 21 என்பது சிலை (மார்கழி) மாதத்தின் 5 –ஆம் நாள் ! 02. வான் அறிவியலின் (ASTRONOMY...