தூக்கி தூர எறியுங்கள் RO FILTERS, MINERAL WATER போன்ற அரக்கர்களை...!

தூக்கி தூர எறியுங்கள் RO FILTERS, MINERAL WATER போன்ற அரக்கர்களை...! ********************************************************************* நல்ல குடி நீர் என்பதற்கும், சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்…அவசிய பதிவு. அவசியம் படியுங்கள். குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???. நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம். இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும். அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும். நாம் என்ன நினைப்போம்…அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர் இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று. ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே…நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நின...