மனுநூலை மேற்கோள் காட்டும் மதியிழந்த மாமன்றம் நீதிமன்றம்
சுதந்திர இந்தியாவா ? சுடுகாட்டு இந்தியாவா? இந்தியா இந்தியா சுதந்திர இந்தியா தொல்லை நிறைந்த இந்த பூமியில் சாதி சுமைகள் தேவையா வறுமையில் வாடும் இந்த நாட்களில் ஏற்றத்தாழ்வுகள் தேவையா? 1.சதியாலே மனநோயால் எழுதிவைத்த விதியான மனுநூலை விலக்கி வைக்க வலியோர்கள் வந்தாலும் பலனுமில்லை பல பெரியார்கள் வந்தாலும் பலனுமில்லை 2.மனுநூலால் பிழைப்போர்கள் மகிழ்ந்திட மனுநூலும் வெள்ளையனுக்கு கிடைத்திட இந்துலா என்ற ஓர் சட்டம் படைத்ததால் இந்நிலத்தோர்க்கு பலனொன்றும் இல்லையே 3.களையான மனுநூலை மேற்கோள் காட்டும் மதியிழந்த மாமன்றம் நீதிமன்றம் இனியொரு விதியொன்று எழுதுவாயோ பிழையான மனுநூலை விலக்கு(கி)றோமென்று 4.மனுநூலை மதித்திடும் மடையர் கூட்டம் இந்நிலத்தோரை மிதித்திடும் கயவர் கூட்டம் சதியாலே வந்திட்ட இந்த மனுச்சட்டம் தலைவலியாக வந்தது இந்து சட்டம் 5.வந்தவர் தன்னையே உயர்த்தி சொல்லும் மனுநூலை எரித்திட நல்மனது வேண்டும் கல்லான மனதிற்குள் சதைகள் வேண்டும் ஆரியர் பேய்மனம் திருந்திடல் வேண்டும் 6.சாதியை ஒழிக்க என்ன செய்ய சாதியென்ற பேயை கொல்ல மனுநீதி என்ற அநீதி ந...