இடுகைகள்

எனக்கானவளே நீ எப்படி இருப்பாயோ?

கபடம்  இல்லா கவின் புறா கவர்ந்திழுக்கும்  கவிதை  நிலா எண்ணமெலாம் இனிக்கும்  பலா இதயமெலாம் உந்தன் கனா நீ  எப்படி இருப்பாயோ நீ  எனக்கென பிறந்தாயோ நீ  என்னை புரிவாயோ  என்  உயிருடன் கலப்பாயோ என்  கோபம் தணிப்பாயோ என்  சோகம் தீர்ப்பாயோ என்  நேசம் பகிர்வாயோ என்னை  முழுசா அறிவாயோ காதல் என்றால் தெரியாது பாசம் என்றால் அதும் புரியாது உறவு என்றாலும் அறியாது  எதற்கும் அடிமை கிடையாது உங்கள் சுந்தரநாயன் படைப்பு

108 ஊழியனின் கதறல் மொழி

எத்தனையோ பேரை தொட்டு தூக்கினோம் மனசாட்சி என்பது சிறிதும் இல்லையா  எத்தனையோ உயிரை காப்பாற்றி மீட்டு வந்தோம் வயிற்றில் அடிப்பது நியாயமா கேட்ட கூலியும் தராமல் கொடுக்கும்  கூலியையும் கொடாமல் வேடிக்கை பார்ப்பது நியாயமா  270கோடி என்ன ஆச்சு அரசியல்வாதி கையில் பாதி போச்சு ஜீவிகேயின் வாயில் மீதிபோச்சு இதை தட்டி கேட்டால் குற்றமா? தண்டனை எனக்கு வேலை போகுமா? நீங்கள் படித்துக்கொண்டு இருப்பது சமூக நீதியை நிலைநாட்டும் சமத்துவம் காக்கும் சமூக அக்கறை இணைய இதழ்... அடுத்த பதிவில் மீண்டும் சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்...

என் நாடு ஜனநாயக நாடு

 என் இந்திய நாடு மதவாத நாடாக மாறாது என்ற நம்பிக்கையுடன்     இக்கவிதையை  எழுதியுள்ளேன்....   என் நாடு  ஜனநாயக நாடு   ஒரு போதும்   மதவாத  நாடாக  மாறாது.  நம்பிக்கை அளிக்கும் நாடு  ஜனநாயகம் காக்கும் நாடு   மதவாத நாடாக மாறாது   இறையாண்மை உள்ள நாடு  சமத்துவம் காக்கும்  நாடு   மதவாத நாடாக மாறாது    பன்முகத்தன்மை உள்ள நாடு   அனைவருக்கும் பொதுவான  நாடு  மதவாத நாடாக மாறாது     வல்லரசாய்  மாறும் நாடு  எடுத்துக்காட்டான  நாடு   மதவாத நாடாக மாறாது  வரலாறு படைக்கும்  நாடு  பாதுகாப்பான நாடு  மதவாத நாடாக மாறாது   அனைவரையும் கருத்தில் கொள்ளும் நாடு    அனைவருக்கும் கல்வி தந்த நாடு  மதவாத நாடாக மாறாது   இது சுந்தரநாயனின்  கவித்துளி.  அடுத்த பதிவில் சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து  விடைபெறுவது  உங்கள் சுந்தரநாயன்  நீங்கள் படித்துக் கொண்டிருப்பது சமூக அக்கறை  இணை...

சீரழிந்த சிறுமி

சில நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்ற போது ஒரு கர்ப்பிணி பெண்ணை பார்க்க நேர்ந்தது. அப்போது அவருடைய தாயாரிடம் கணவன் எங்கே என வினவியபோது அவர் என்னிடம் சொன்ன வேதனையான சம்பவங்களை இங்கே அனேகருக்கு பயனாக இருக்குமென்று நம்பி குறிப்பிடுகிறேன். சில சங்கடங்கள் ஏற்படுமே என்று பெயர்களை தவிற்திருக்கிறேன் .  "எனது மகள் பத்தாம் வகுப்பு படிச்சிருக்கா இப்போ படிச்சி முடிச்சிட்டு வீட்டில தான் இருக்கா. ஒரு வருஷத்துக்கு முன்னாடி பக்கத்து ஊர்ல இருக்க 21வயது மதிக்க தக்க ஒருபையன் அவளை காதலிப்பதாய்கூறி அவளை அடிகடி சந்திச்சிருக்கான். எங்களுக்கு இது கொஞ்சமும் தெரியாது எனது மகள் வெறும் 18வயதே நிரம்பியவ. எங்க வீட்டுல எல்லா வேலையும் இழுத்து போட்டு வேலை செய்வா. படிக்க வைக்க வசதி இல்லாததால எங்க வீட்டிலயே இருக்க வச்சுட்டோம். அவளுக்கும்   படிக்க விருப்பம் இல்லாததாலும் நாங்க அவளை படிக்க வைக்கல ஆனால் வரவர அவளோட செயல் பாடுகள் எங்களுக்கு புரியல. வீட்டுல வேலை செய்யல. மாதவிடாய் நேரத்துல எல்லா பொண்ணும் காலையிலேயே குளிச்சிடுவாங்க ஆனா இவ அப்படி எதுவுமே இல்லாதமாறி இருந்ததும் எங்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கிடு...

வீதியிலே விளையாடும் பிள்ளை சாதிபார்க்கும் கொடுமை என்ன? Series 8

வீதியிலே விளையாடும் பிள்ளை சாதி பார்க்கும் கொடுமை என்ன? நீதியெங்கே போனதெங்கே நித்தம் சண்டை பிறந்ததென்ன? பித்தன் கண்டு சொன்ன விடத்தை பற்றி பிடித்து சாவதென்ன! அவனோ மேலே நீயோ கீழே என்று சொல்லும் வேதம் பொய்யே! நீயொன்று நானொன்று என்பதல்ல நியாயம் நீயும் நானும் ஒன்றென்பதே வேதம்.. இது சுந்தரநாயன் சிந்தனையில் உதயமான கவித்துளி தொடர்ந்து பின்தொடருங்கள் சமூக அக்கறை இணைய இதழ் இக்கவி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் மதிப்புமிக்க கருத்துரைகளை கருத்துரை பெட்டியில் பதிவிடுங்கள். நன்றி

இந்து ராஷ்டிரம் அமைய ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டியவை series 7

நான் ஒரு சங்கி முதலில் ஒவ்வொரு இந்துவும் இந்து இராஷ்டிரம் அமைய வேண்டுமானால் கீழ்கண்டவற்றை செய்யவேண்டும் அப்படி மட்டும் செய்துவிட்டால் போதும் இந்து இராஷ்டிரத்தை அமைத்துவிட முடியும் என்று தொடங்கினார் ஒரு சங்கிமங்கி 1.பெரியாராலும் அம்பேத்கராலும் கிருஸ்தவ மிஷனரிகளாலும் இந்தியாவில் விஷவிதைகள் விதைகப்பட்டுள்ளன. அதை நம்பகூடாது. மேலும் அதனை பின்பற்றுவோர்களை Anti indian ஆக பட்டபெயர் வழங்க வேண்டும். எ.கா-இ.வெ.ரா ஒரு ஆன்டி இன்டியன் அம்பேத்கர் ஒரு ஆன்டி இந்தியன். கிருஸ்தவர்கள் ஐரோப்பிய கைகூலிகள். இஸ்லாமியர்கள் அரேபிய கைகூலிகள். Rss உருப்பினர்கள் மட்டும் தேச பக்தர்கள். 2.ஜாதி என்பது வேலையின் அடிப்படையில் வந்தது என மீண்டும் மீண்டும் கூறி அதை உண்மையாக்கிவிட வேண்டும். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகம் ~ஶ்ரீகிருஸ்னர் நான்கு வர்ணங்களையும் யாமே படைத்தோம். குணத்தின் அடிப்படையிலும் கர்மத்தின் அடிப்படையிலும் அவர்கள் உள்ளார்கள் இந்த வசனத்தை முடிந்தவரை மாற்றி கூறவேண்டும். குணத்தின் அடிப்படையில் தான் உருவாக்கினார் என்று கூறவேண்டும். 3.முடிந்தவரை கிருஸ்ண பக்தர்கள் அனைவரும் வர்ணாஷ்ரம தர...

இராம இராஜ்யம் சாதனைகளின் மணிமகுடம் series 6

ஓரிணசேர்க்கையை ஆதரியுங்கள் கள்ளகாதலை ஆதரியுங்கள் எங்களுக்கென்ன? உங்கள் தாமரையில் மகரந்த தூள் பட்டால்தான் தாமரைகாய் உண்டாகி விதைகள் உருவாகும் அதுதான் உங்கள் ஆட்சியில் உருவாகாதே! ஒவ்வொரு தாமரையும் ஆண் தாமரையோடே மகரந்தசேர்க்கை செய்தால் நினைத்துபாருங்கள்! இந்து பெண்கள் அணைவரும் 5குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினீர்களே இப்போது என்ன செய்ய போகிறீர்கள்... ஆண்கள் எல்லாரும் ஆண்களோடு உறவுகொள்வார்கள் பெண்களெல்லாம் பெண்களோடு உறவுகொள்வார்கள் ஆனால் 5பிள்ளைகளை பெற்றெடுக்க இனி இந்தியாவில் ஆள் இல்லாமல் போய்விடுமே என்று யோசித்தீர்களா? இந்து ராஷ்டிரம் காக்க நீங்கள் செய்த நலன் இதுதானா? இந்துக்களை காக்க வந்தேன் என்று கூறும் பாதுகாவலர்களே... காவலர்களே... தூதர்களே... அவதாரங்களே... இனி யாரை வைத்து 5குழந்தைகள் பெற வைக்க போகிறீர்கள்? இந்துக்கள் சிறுபான்மை ஆகிறார்கள் என்று மைக் பிடித்து அலருகிறீர்களே இந்தியர்களின் மதிப்பை உலகசந்தையில் இப்படி விற்றுவிட்டீர்களே!!! இராம இராஜ்யம் பிறந்தது அசிபாவுக்கு ஆபத்து இராமராஜ்யம் வளர்ந்தது ஓரினசேர்கைக்கு ஆதரவு இராம இராஜ்யம் செழித்தது கள்ளக்காதலை வளர்க்குது இராம இ...