சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன?

சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன? இணையதளங்களை அனேகர் உருவாக்குகிறார்கள் ஆனால் அதனால் பயன் என்ன என்று பார்த்தால் அனேகம் உண்டு. அதேபோல இணையத்தை நம்பி நாம் புரட்சிகர கருத்துக்களை அடிகடி இவ்வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம். சமுதாய சிந்தனைகளை தூண்டும் வண்ணமாக அமைக்கிறது நமது பதிவுகள் என்று எனக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்து இந்த கட்டுரை உருவாக காரணமாயிருந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் நமது சமூக அக்கறை இணையத்தொடர் இதழை தொடர்ந்து படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னை அடிக்கடி உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத உதவிய நண்பர்களுக்கும் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஏன் இப்படி தொடர் இதழை அதுவும் இணையத்தில் வெளியிடுகிறோம் என்றால் அது ஒரு மாலை நேரம் இரு நண்பர்களின் உரையாடல் எதைப்பற்றி என்றால் இறைவன் நம்மை எதற்காக இவ்வுலகில் படைத்திருக்கிறார் . நாம் ஏன் இங்கு பிறந்திருக்கிறோம். நமது பிறப்பின் நோக்கம் என்ன என அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்த தருணம் அது வேறு யாருமல்ல நானும் ஒரு தம்பியும் தான். மாற்றம் எங்களுக்குள் இருக்கிறது ஆனால் மா...