அச்சுருத்தும் கொரொனா அயராமல் உழைக்கும் 108 அடிமாடுகள்.

கொரானாவை கண்டு பயப்படாதோர் எவருமே இல்லை எனலாம். ஊரே பயப்படும் வேளையில் பயப்படாமல் இன்று வேலை செய்பவர்கள் யாரென்று தெரியுமா? அவர்கள் தியாகத்துக்கே பேர்போன 108 அவசர மருத்துவ உதவியாளரும், அவரோடு பணிபுரியும் 108வாகன ஓட்டுனர்களும் தான். அவசர ஊர்தியை போக்குவரத்து நெரிசலில் ஓட்டி மருத்துவமனைக்கு சீக்கிரமாக செல்லும் ஒட்டுநர்களும் உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றி முதலுதவி செய்யும் அவசர மருத்துவ உதவியாளர்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்து உங்களின் உயிரை காக்க போராடி வருகின்றனர். உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. உங்கள் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். உயிரை பணயம் வைத்து அதிவேகம் ஓட்டிச்சென்று காப்பாற்றும் அவர்கள் செய்வது பணி பாதுகாப்பு இல்லாத வேலை. பணி நிரந்தரம் இல்லா வேலை. பலரும் இதனை யோசிப்பதில்லை. இவர்கள் நமக்காக உழைக்காவிடில் இங்கு எத்தனை உயிர்களை இந்தியா இழக்க வேண்டிவரும் என்பதை யாருமே சிந்திப்பதில்லை. மழையிலும் குளிரிலும் அவசர ஊர்தியே இவர்களது அடைக்கலம். வெயிலிலும் வாகனத்துக்குள்ளேயே வேகும் இந்த...