தமிழர்கள் வந்தேறிகளே! Series 11
தமிழர் யார்? தமிழர் யாரென்ற கேள்விக்கு வரலாறை புரட்டுதல் அவசியமாகும் ஆகவே என்னோடு சேர்ந்து வரலாறை புரிந்து கொள்ள முயலுவோம். இன்றைய சூழலில் தமிழர் எனும் சொல்லே உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் சொல்லாக மலர இறையன் நம் முன் சென்று வெட்டி வீழ்ந்த மரமாகிய நம்மை அது வெட்டப்பட்ட இடத்தில் திரும்ப ஒட்ட வைக்கிறார் என்றே நாம் வைத்துக்கொள்ள இயலும். தனித்தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா என ஒரு கேள்வியை கேட்டு தமிழரை நாம் அடையாளங்காண வேண்டிய நிலையில் இப்போது தள்ளப்பட்டு விட்டோம். ஏனெனில் தமிழர் எனும் போது தமிழர் அல்லாதோரும் தன்னை தமிழரெனவே நினைத்து கொண்டிருக்கின்றனர். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட போவதில்லை. ஆனால் ஆட்டுதோல் போர்த்திய ஓனாய் போல என்ற பழமொழிக்கேற்ப இன்றைய சூழலில் தமிழின விரோதிகள் தங்களை தமிழரென அடையாளப்படுத்தி கொண்டதோடு தமிழனுக்காக போராடுகிறேன் குரல் கொடுக்கிறேன் என்று கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து பின்னர் சுயரூபத்தை காட்டிய கதையெல்லாம் நம் தமிழ் நாட்டில் உளது என்று நமது வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்துகிறது என்றே கொள்ள வேண்டும். ஏனெனில் உண்மையிலேயே தமிழினவிரோதியின் கூட...