தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12
தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் தமிழனது வரலாறை சொல்ல வேண்டுமானால் அது இன்று நேற்று நடந்ததல்ல. ஆதியில் இறைவன் முதல் மனிதனை இந்த பூமியில் படைத்த கதையிலிருந்தே இந்த வரலாறு ஆரம்பிக்கிறது. ஆகவே உலக வரலாறே தமிழின வரலாறு என்பது தமிழ்நாட்டு அறிஞர் தவிற வேறு யாரும் ஏற்றுகொண்டிலர். காரணம் பைபிளின் கருத்துக்களை அதிகம் ஆய்ந்த அறிஞர்கள் தேட வேண்டிய இடத்தில் தேடாமல் தேவையில்லாத இடத்திலெல்லாம் தேடியதாலேயே தவறான முடிவுக்கு வந்துள்ளனர். காரணம் அவர்களுக்கு மற்ற மதங்களை தங்களுக்கு கீழ்படுத்த வேண்டும் என்னும் பேரவாவினாலும் ஏதேன் தோட்டத்தில் ஓடிய நதிகள் பாரசீகம் தொடங்கி அரபிதேசம் வரையிலும் இருப்பதாலும் ஏதேன் இருந்த இடம் மெசபத்தோமியா தொடங்கி அரபு தேசம் என நினைத்துக்கொண்டார்கள். கால வெள்ளோட்டம் இதையெல்லாம் தவறு என்றே மெய்பித்திருக்கிறது. பூமியில் மனுஷர் தோன்றிய இடம் லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. மேற்குலகமோ இதனை ஏற்றுக்கொண்டால் கருப்பர் இனமானது உயர்வாக சொல்லபடுமோ எனகருதி இதனை மறுப்பதுமன்றி பைபிள் பொய்யாக போய்விடுமோ என்ற ஐயத்தாலும் உண்மையை மறைக்கும் சதியை ...