இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்

அத்திவரதர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே இந்த சோமநாதர் கோவில் குறித்துப் பதிவிட நினைத்தேன். ஆளுநர் ரவி அதற்கானத் தேவையை தற்போது உருவாக்கிவிட்டார். ______ பிராமணியம் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்தவும் சுரண்டவும் செய்தது என்பதற்கான சிறந்த உதாரணம் குஜராத்தின் சோமநாதர் கோவிலில் உள்ள மிதக்கும் சிவலிங்கச் சிலை. மனித வரலாற்றின் குறிப்புகளில் தொடர்ந்து மக்களின்மீது மோசடியாகத் திணிக்கப்பட்டுவரும் பல தந்திரங்களின் மூலம் மக்களின் செல்வத்தையும் கண்ணியத்தையும் கொள்ளையடிக்கும் முயற்சிகளில் சோமநாத சிலைத் தந்திரம் மிக வெற்றிகரமான, தனித்துவமான ஒன்றாக இருக்கின்றது. அறிவியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஒரு மிதக்கும் காந்தசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், அச்சிலை அதன் தெய்வீகத்தன்மை காரணமாகத் தானே அந்தரத்தில் மிதப்பதாகத் தவறாகச் சித்திரித்தனர். இந்த அதிசயத்தைக் கட்டணம் செலுத்திக் காண்பதற்காக பக்தர்கள் வெகுதொலைவிலிருந்து வந்தனர். இருப்பினும், கிபி 1024-ல் சுல்தான் முகமது கஜினியின் படை அக்கோவிலைக் கைப்பற்றியபோது அச்சிலையின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட...

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்

திருமணத்திற்கு பின்னர் ஏற்படுத்தி கொள்ளும் பாலுறவுக்கும் திருமணத்திற்கு முன்னரே ஏற்படுத்திய பாலுறவுக்கு இடையே உள்ள வித்தியாசம்: திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ உறவை ஏற்படுத்தி கொண்டவர்கள் பின்னாட்களில் தனது மனைவியுடன் அல்லது கணவருடனான பாலுறவை வெறுப்பவர்களாகவும் தவிர்ப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். இது ஏன் நிகழ்கிறது? என்று கேள்வி எழுப்பினால் நமக்கு நன்றாக புரிந்துவிடும்.  "பாலுறவு என்பது வெறும் இரண்டு உடல்கள் இணைவது அல்ல அது இரண்டு மனம் ஒன்றிணைவதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களே " ஆகவே தான் இணைவது உடலாயினும் உடலளவில் மட்டுமே கூடல் நிகழாமல் மனதளவில் நடப்பதால் தான் திருமணத்திற்கு பின்னரும் அந்த மனதளவில் ஒண்றினைந்தவருடன் மீண்டும் மீண்டும் அதே உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது மனம். ஆகவே உடலுறவில் ஏற்படும் சுகம் மற்றும் திருப்தி என்பது உடலில் ஏற்படும் இரசாயண மாற்றமாக இருந்தாலும் மூளையில் ஏற்பட்ட இரசாயண மாற்றத்தால் தான் பாலுறவை உணர முடிகிறது. உண்மையான பாலுறவு உறுப்பு எது?  பாலுறவு குறித்து எண்ணம் உருவான உடன் மூளை ஆணுறுப்புக்கு சமிக்கைகளை அனுப்புகிறது அந்த மூளையி...

கண்டேன் கனவு

எல்லார்க்கும் நினைத்தது போலவே நடந்திடாது ஆனால் எனக்கோ இன்று கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை. அது ஒரு மறக்க முடியா நிகழ்வு. சிறுபிள்ளை பிரயாயத்திற்கே என்னை இட்டு சென்றது. திடிரென்று ஒரு இறக்கை உள்ள விண்கலம் அது ஒருவாறு ஜெட் விமானம் போன்று இருந்தது அதன் நிறம் பச்சை அதன் மேற்பரப்பில் செடிகள் வளர்ந்தாற்போல தோற்றம். நான் பார்த்து வியக்கையில் விண்கலம் அதன் வாயிலை திறந்தது உள்ளே சென்றேன். வாகனம் புறப்பட தயாரானது ஒரு இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டை போட்டுக்கொண்டேன். விண்கலம் பறந்தது படபடத்தது இதயம். எங்கே போகிறேன் நான் . யார் என்னை அழைத்து செல்கிறார்கள். ஏதும் அறிகிலேன். ஒன்றும் புரியாதவனாக நடப்பதை மட்டும் கவனித்து கொண்டிருந்தேன். திடிரென்று வானத்தில் வட்டம் ஒன்று தோன்றியது .இது என்ன என்று யோசிப்பதற்குள் உள்ளே சென்றது எங்கள் விண்கலம் . யாருடன் பயனிக்கிறேன் ஏதும் தெரியவில்லையே. யாராவது என்னை கடத்தி செல்கிறார்களா அதுவும் புரியவில்லை குழப்பங்கள் சூழ படப்படப்பில்  இருந்தேன். அந்த வட்டத்திற்குள் நுழைந்தவுடன் விண்கலத்தின் வேகம் அதிகரித்தது. யாரோ தள்ளுவது போன்றும் என்னை இழுப்பதும் போன்றும் இருந்தத...

எட்டுத்தொகை பத்துபாட்டு பதினென்கீழ்கணக்கு நூல்களை எளிமையாக மனப்பாடம் செய்ய இப்பாடல்கள் உதவும்

எட்டுத்தொகை பாடல்களை எளிதில் ஞாபகம் வைக்க உதவும் பாடல் வரிகள்: “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற இத்திறத்த எட்டுத் தொகை 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.பதிற்றுப்பத்து 5.பரிபாடல் 6.கலித்தொகை 7.அகநானூறு 8.புறநானூறு பத்துபாட்டு பாடல்களை எளிதில் ஞாபகம் வைக்க உதவும் பாடல் வரிகள்: முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சிமருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலைகடாந் தொடும் பத்து 1. திருமுருகாற்றுப்படை  2. பொருநாராற்றுப்படை,  3.சிறுபாணாற்றுப்படை  4. பெரும்பாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு  6. மதுரை காஞ்சி 7. நெடுநல்வாடை  8. குறிஞ்சிப்பாட்டு 9. பட்டினப்பாலை  10. மலைபடு கடாம். வேறு பெயர்கள்: *திருமுருகாற்றுப்படை-புலவராற்றுப்படை *பெரும்பாணாற்றுப்படை-பாணாறு. *முல்லைப்பாட்டு-நெஞ்சாற்றுப்படை. *குறிஞ்சிப்பாட்டு-பெருங்குறிஞ்சி. *பட்டினப்பாலை-வஞ்சி நெடும்பாட்டு. *மலைபடுகடாம்-கூத்தராற்றுப்படை. பதினென்கீழ்கணக்கு நூல்களை மனப்பாடம் செய்ய உதவும் பாடல் வரிகள்: நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பா...

நாக்கு தள்ளும் சித்திரை ஒன்றா ஆண்டு தொடங்கும்?

தைமுதலே ஆண்டு தொடங்குது மார்கழியில் ஆண்டு முடியுது சித்திரையல்ல தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதே சித்திரை ஒன்றில் நாக்கு தள்ளும் அக்கினி மாதம் ஆண்டு தொடங்குமா அறிவாளியே அறுவடைக்காய் காத்திருந்து நல்ல உணவு உண்ணும் நாளே ஆண்டின் தொடக்கம் இதை அறிவாய் நீயே

சித்திரை அல்ல தமிழ் புத்தாண்டு தைமுதலே தமிழ் புத்தாண்டு

படம்

எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பிறக்கிறது ?

எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு, பிறக்கிறது ? -------------------------------------------- தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரை”யா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணி மன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது ! இந்த நிலையில் நாளை, “சித்திரை” பிறக்கிறது. முந்தைய வழக்கத்தின் அடிப்படையில் சிலர் “புத்தாண்டு” வாழ்த்துத் தெரிவிக்கக் கூடும். ”தை” மாதமே புத்தாண்டு பிறந்து விட்டது. எனவே இப்போது “வாழ்த்து”க் கூற வேண்டிய தேவை எழவில்லை. இதன் தொடர்பாக வானறிவியல் விளக்கம், படத்துடன் தரப்படுகிறது ! 01. வான் அறிவியலின்படி (ASTRONOMY) , டிசம்பர் 21 அன்று, உலக உருண்டையின் தென்பகுதியில் (SOUTH HEMISPHERE) 23-1/2 பாகையில் உள்ள சுறவக் கோட்டிலிருந்து (மகர ரேகை) சூரியன், வடக்கு நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த வடக்கு நோக்கிய நகர்வை, (பயணத்தை) ”பஞ்சாங்கம்” வடமுகச் செலவு (உத்தராயணம்) என்று சொல்கிறது. டிசம்பர் 21 என்பது சிலை (மார்கழி) மாதத்தின் 5 –ஆம் நாள் ! 02. வான் அறிவியலின் (ASTRONOMY...

மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே

மரபணு மாற்றமே வந்தது எனக்குள்ளே2 பாச அணுக்களும், நேச கணுக்களும் ஒன்றாய் சேர்ந்ததுவே-2 ஓ ஓ ஓ 1.கரையும் மேகங்களில் உன் முகத்தை பார்க்கிறேன் கூவும் குயிலிசையில் உன் குரலினை பிரிக்கிறேன் வாடும் என்னை வாட்டிடும் அன்பே தூவும் மழையில் சாரலும் நீயே அழகிய விடியல் நீ ஆசை நாயகியே-2 2.வாசனை திரவியமே மூலகூறுகள் தெரிகிறேன் அழகிய பூக்களில் நிறங்களை பிரிக்கிறேன் மூச்சு திணறும் கிணற்றினுள்ளே உயிர் காற்றாய் நீ உயிர் தந்தவளே நிறமுள்ள நறுமணமே நேச கண்மணியே-2 3.நயகரா வீழ்ச்சியில் விழுவதுன் கூந்தலோ குளிரை போக்கும் குளியல் வெது வெது வெண்ணீரூற்று நீ தாகம் தீர்திடும் பல்சுவையான ஊற்று நீ எப்போதும் திகட்டாத தித்திக்கும் கரும்பு நீ வளர்பிறை யானவளே ஒளிநிறை முழுநிலவே-2

கொத்துகுண்டு குபேரன் மஹிந்த ராஜபக்ஷ

இரத்த குளியலே இரத்த பொறியலே நீத்தியே நீந்தி களிச்சேன் தமிழன் இரத்தத்திலேயே கொத்து குண்டு போட்டு குலம் அழிச்ச குபேரா மொத்த நாடும் அழிஞ்சிடுச்சு குபேரா சொத்துபத்தும் குறைஞ்சிடுச்சு குபேரா மஹிந்த ராஜபக்சே மானங்கெட்ட ராஜபக்சே குலமழிச்ச குபேரனே கோடி கும்பிடு இப்போ நாடழிக்க வந்ததென்ன கோடி கும்பிடு பொருளாதார சீர்கேடு ஆச்சுதே நாடுதான் நாசமா போச்சுதே கோடிகும்பிடு நீ ஓடி போயிடு வேதி குண்டு போட்டழிச்ச ராஜபக்ச நீ வியாதியிலே போக போற ராஜபக்ச பாதியிலே போகபோற ராஜபக்ஷ நீ பாடையிலே போனா என்ன இராஜபக்ஷ

எங்கள் நாடு தமிழீழம்

எங்கள் நாடு தமிழீழம் எங்கும் ஆளும் தமிழர் குலம் வீழ்ந்தது மண்ணில் தனி ஈழம் எழுந்திடும் ஒருநாள் வீரமுடன்   வீழ்ந்திட்ட உதிரம்  முளைத்திடும் ஓர்நாள் துளிர்த்திடும் என்பது நம்பிக்கை ஆயிரந்தலைவ-னிருக்கட்டும் பிரபா-கரன் போல் வீரனில்லை ஆயிரம் பிரபா கரன் நாங்கள் மீண்டும் வெல்வோம்  பகைவர்தனை  இது சுந்தரநாயனின் ஆவல்  உங்களின் ஆவல் அறிய ஆவல் உடனே எழுதுங்கள் ஆவலுடன் ஆவலுடன் படித்திடவே ஆசையுடன் இருக்கின்றேன்.

உக்கிர ரஷ்யா ரத்தகறையாகும் உக்ரேன்

உ க்கிர ர ஷ்யா   ர த்தகறையாகும் உ க்ரேன் யுக்தியோ சக்தியோ  புத்தியோ கத்தியோ  வெற்றியின் முடிவில்  குருதிவாசமே மிச்சம் பக்தியோ சாதியோ மொழியோ இனமோ வெறியோ  வென்றபின்னர்  குருதிஓடையே மிஞ்சும் இது சத்தியம் நித்தியம்  பத்தியம் அது மனிதநேயம் குண்டுகளில் குளிக்கலாம் குருதிதனில் நீந்தலாம் எந்திரங்கள் முழங்கலாம் ஏகமாய் வெல்லலாம் குருதியாலே குதுகளம் நின்றிடாது எப்போதும் சதிகளால் வென்றதாய் சாத்திரங்கள் புரியலாம் ஆத்திரசுவடி என்று  அறிஞர்கள் சொல்லுவார் தோத்திரம் கூறுவோர்  மடிந்தபின் வருபவர் நிச்சயம் வெட்குவார் ஆகாத வெற்றி என்று மனிதரை மனிதரே  அழிப்பதோர் வெற்றியோ கொண்றபின் நின்று வாழ்வார் அவரை கொண்றிட முடியாது  ஒருநாளும் அவர் நினைவுகளை  எதிரியே இல்லை யப்பா எதிரிடை நிற்போரும் தேவையப்பா வழிகளும் உண்டப்பா ஞானம் உடையோரை தேடப்பா தவிர்க்கலாம் இழப்பு தானே தடைகளும் தேவையேதான் மலைவடிவில் தடைகளும் தேவையேதான் மலைஉயரம் நீ உயர  உதவும் கரந்தான் அந்த மலை  என உணர்ந்து நம்பிக்கை  சுமந்து முன்னேறிடுவாய் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை விடைபெறுவது உங்கள் கவிஞர் சுந்தரநாயன் 

இவரே இறையாண்மைவாதி

இறையாண்மை யற்ற இந்திய மக்கள் தன்னிகரற்ற தலைமைதுவத்தை தாராளமயமாக்குதலோடு தயங்காமல் ஏற்று கொள்வீர் தங்கங்களே... என்று முழங்கினார் ஓர் அரசியல் வாதி அவர் தட்டுதடுமாறி நிருத்தமுடியாமல் மோதி மோதியை தூக்கி பிடித்த கேடிகளின் தலைவர் வாழ்க பாரதம் என்பார் பாரதத்தில் எவரையும் வாழவிடமாட்டார் பாரத் மாதாகி ஜே சொல்வார் பாரதமாதா பெற்றடுத்த பிள்ளைகளை கொள்வார் வந்தே மாதரம் என்பார் இந்தியரை ஆளும் தகுதி இந்தியருக்கில்லை என்பார் பாரத பராக்கிரம வீரதீர என்று சொல்லி பாரதத்தை இரத்தகறையால் மூடுவார் கோபங்கொண்டால் கிறிஸ்தவர்களை கொண்றுவிடு என்பார் எப்போதாவது நினைத்து கொண்டால் இஸ்லாமியர்களை கொல்ல சொல்வார் சட்டங்களை மதிக்க மாட்டார் சாணக்கியன் புத்தி வேண்டுமென்பார் தானே உயர்ந்தவனென்பார் நீதிமன்றங்களை மயிரென்பார் காந்தியை சுடுவார் சுட்டவரை புகழ்வார் புகழ்பவரை தலைவராக்குவார் தலித்துகளை ஏமாற்றுவார் தலித்துகளையே தலைவராக வைப்பார் நாட்டை தலித் ஆள்வது போல் பொய் பிம்பம் செய்வார் பாரதிய ஜீசஸ் பார்டி என்பார் கிறிஸ்தவ நலன் விரும்பிகள் என்பார் இஸ்லாமியரின் பாதுகாவல் என்பார் ஹிஜாப் அணிய தடைகள் விதிப்பார் முத்தலாக்குக்கு முற்று புள...

பாசிச ரஷ்யா

பாசிச ரஷ்யா உக்ரேனின் உதிரம்  நக்கி குடிக்கும் ரஷ்யம் ஆத்திரங்களின் ஆக்கிரமிப்பு அழிந்து போன உக்ரேன் அப்பு இரத்தங்குடிக்கும் காட்டேறிக்கு  இந்தியா சப்போர்டாம் அழிந்து போகும் மனித உயிரில்  விற்பனைகள் வேண்டுமா லாப நோக்கம் கொண்டு  போடுறானே குண்டு நடுத்தெருவிலே வந்து  கைகள் தட்டு நின்று ஒழிந்து போகும் கொரோனா  விளக்கு ஏத்து இன்று உக்குரேனு போருக்கு கண்ணீர் அஞ்சலி செய்வோம் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி விநியோகம் செய்வோம் இப்படித்தான் இந்தியா உலகத்துக்கு  சொல்வோம் உக்ரேன் உதிரம் குடித்து ரஷ்ய பாதம் நக்கி இந்தியா வாழ்க என்போம் பாரத் மாதாக்கி ஜே  பாரத் மாதாக்கி ஜே  பாரத் மாதாக்கி ஜே  உங்கள் சுந்தரநாயன்.

அல்லாஹூ அக்பர்

கர்நாடக மாநிலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்ப்பு குரலாக  பாசிசத்தை நோக்கி  இந்து ராஷ்டிரத்தை நோக்கி ஜெய்ஶ்ரீராமின் மேலே  ஓங்கி அடிக்கும் ஒரே சொல்லாகி இருக்கிறது  அல்லாஹூ அக்பர் பாதக பாஜக பாசிச பாஜக பாசிச பாஜக பாவியர் பாஜக பாவியர் இங்கு காவியராகி காவியமான சுதந்திர தேசிய கொடியை  கீழே இறக்கி தரையில் தள்ளி காவியான கறைபடிந்த பாவ கொடியை ஏற்றிய நிகழ்ச்சி  ஜெய்ஹிந்த் தவிர்த்து ஜெய்ஶ்ரீராமென  முழங்கிய இரைச்சல்  தேசபக்தி தேய்வதின் அர்த்தம் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் சுதந்திரம் கொடு சுதந்திரம் கொடு அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்  விடுதலை கொடு விடுதலை கொடு அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்  நீதி கொடு நீதி கொடு  சீதையை விமர்சித்த ராமனை எதிர்த்து  ஜெய்சீத்தா என முழங்கிடு முழங்கிடு ஜெய்சீத்தா ஜெய்சீத்தா  பெண்களை கேலி செய்யாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா  பெண்களின் ஆடையை கலையாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா  பெண்களை அலட்சியம் செய்யாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா காவியை எதிர்த்து ஜெய்சீத்தா ஜெய்பீம் ஜெய்பீம்  மதவெறுப்பை வெல்லுவோம் ஜெய்பீம் ஜெய்பீம் மாணவர் நெஞ்சில் நஞ்சை விதைத்த  மாணங்கெட்ட பாசிச பேய்க்கு  ஜெய்பீம...